வீட்டிற்கு திரும்பிய சோனிக்கு தனது 5 வயது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவருகிறது. ஊரடங்கினால் ஏற்கனவே வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள சோனி போன்ற மும்பையின் பாலியல் தொழிலாளர்களுக்கு தங்களின் குழந்தைகளை பாதுகாப்பதும் சவால் நிறைந்த பணி தான்.
+7 bit.ly/3oSoEC1
“இதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இங்குள்ள ஆண் பிள்ளைகளுக்கும் நடக்கிறது. ஆனால் யாரும் வாய் திறப்பதில்லை,” என்கிறார் காமத்திப்புராவில் நம்மிடையே அமர்ந்து உரையாடிய பாலியல் தொழிலாளி ஒருவர்.
2018இல் வெளியான ஆய்வுக் கட்டுரையில், “பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள்,பள்ளிகளை பாதியில் நிறுத்திய பதின்பருவ சிறுவர்,சிறுமியர், கூலி வேலைக்குச் செல்வோர் ஆகிய பிரிவினருக்கு பாலியல் துன்புறுத்தல் அபாயகரமாக அதிகரித்துள்ளது”என குறிப்பிடப்பட்டுள்ளது.
“94.6 சதவீத குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் இழைத்தவர்கள் குழந்தைகளுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர்; 53.7 சதவீதம் வழக்குகளில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் / நண்பர்களாக உள்ளனர்.”
“அறையிலிருந்து வெளியே செல்லாதே, எதுவாக இருந்தாலும் அறைக்குள் தான் இருக்க வேண்டும்,” என மகளிடம் கண்டிப்பாக சொல்கிறார் பிரியா. இந்த கண்டிப்பு ஊரடங்கு அச்சத்தால் அல்ல. “எங்கள் மகள்களை விழுங்கிவிடும் ஆண்கள் இருக்கும் இடத்தில் வசிக்கிறோம், யாரும் வந்து கேட்ககூட மாட்டார்கள்,” என்கிறார்
தங்கள் மகனுக்கும் இதுபோன்ற தொந்தரவு ஏற்படலாம் அல்லது போதைபொருட்களுக்கு அடிமையாகலாம், வேறு ஏதேனும் தீய வழிகளில் செல்லக்கூடும் என இங்குள்ள பெண்களுக்கு தெரிந்துள்ளது. எனவே அவர்கள் தங்கள் மகன்களையும் விடுதிகளில் சேர்த்துவிடுகின்றனர்.
“அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்கிறார் சால்தன்ஹா. “பாலியல் தொழிலாளர்களுக்கு அல்லது அவர்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் நடந்தால்கூட பொதுப் பார்வை என்பது: இதில் என்ன இருக்கிறது? குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டால், தாய் மீது தான் பழி போடுவார்கள்.”
2019ஆம் ஆண்டு ஜூன் இறுதி வரை, போக்சோ சட்டத்தின் கீழ் 1,60,989 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டம் மற்றும் நீதிக்கான அமைச்சகம் சொல்கிறது. அதிலும் இரண்டாவது அதிக எண்ணிக்கையாக (உத்தரபிரதேசத்திற்கு அடுத்து) மகாராஷ்டிராவில் 19,968 வழக்குகள் உள்ளன.
கடந்தாண்டு தசை அழுகல் நோயால் பிரதிபா ஹிலிம் தனது கைகளையும் கால்களையும் இழந்தார். அதனால் ஓய்ந்துவிடாமல், மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள ஆதிவாசி மாணவர்களின் ஆன்லைன் கல்வி வாய்ப்பு குறைவாக கிடைக்கும் மாணவர்களுக்கு தனது வீட்டிலேயே வகுப்பெடுத்து வருகிறார். bit.ly/2MW0o4O
“எனக்கு இவ்வாறு நேரும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. எனக்கு அதிக காய்ச்சல் வந்தபோது நான் இங்கே (கார்ஹே) இருந்தேன்“ என்று பிரதீபா கூறுகிறார்.
பின்னர் மார்ச் மாதத்தில் கோவிட் – 19 ஊரடங்கும் போடப்பட்டது. கிராமத்தில் உள்ள குழந்தைகள் ஊரடங்கு காலத்தில் படிக்க முடியாமல் சிரமப்படுவதை அவர் உணர்ந்தார். அவர் அக்குழந்தைகள் அங்குமிங்கும் சுற்றுவதோ அல்லது வயல்களில் வேலை செய்வதையோ பார்த்தார்.