*நாம் வைக்கும் வணக்கத்தில் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றின் பயன்கள் என்ன?*
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்...
பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் (Namaskar) செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் 'பிரணாமங்கள்' அல்லது 'வணக்கங்கள்' (Namaste) என்றழைக்கப்படுகின்றன.
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன.
அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
1) அஷ்டாங்கணம்
- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
2) ஷாஷ்டாங்கம்
- உடலின் ஆறு அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், கைகள், தாடை, மூக்கு (Nose), நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
3) பஞ்சாங்கம்
- உடலின் ஐந்து அங்கங்கள் (கால்விரல், மூட்டுகால், மூட்டுகை, கைகள், நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முட்டிபோட்டு விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
4) நமஸ்காரம்
- இரு கைகளையும் கூப்பி தலைக்கு மேல், நெற்றிக்கு நேர் அல்லது நெஞ்சகத்தின் அருகில் வைத்து வணங்குதல். (எல்லோர்க்கும்)
5) அபிநந்தனம்
- இரு கைகளையும் கூப்பி நெஞ்சகத்தின் அருகில் வைத்துக் கொண்டு, தலையைச் சாய்த்து வணங்குதல். (பணிவு)
6) சரணஸ்பர்ஷம்
- கால்களைத் தொட்டு வணங்குதல். (தெய்வம், தாய், தந்தை, குரு, சான்றோர்)
வணக்கங்கள் யாருக்கு உரித்தானவை?
ஆறு வகை வணக்கங்களில் முதலான மூன்று வகை தெய்வங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவை கோயில்களிலும் வழிபாட்டு அறைகளிலும் தெய்வங்களை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய வணக்க முறைகள்.
அஷ்டாங்கனம் எனப்படும் எட்டு அங்க வணக்கமுறையை ஆண்களும், பஞ்சாங்கம் எனப்படும் ஐந்து அங்க வணக்கமுறையைப் பெண்களும் கடைப்பிடிப்பார்கள். ஷாஷ்டாங்கம் எனப்படும் ஆறு அங்க வணக்கமுறையை யோகாசன சூரிய நமஸ்காரப் (Surya Namaskar) பயிற்சியின் போது கடைப்பிடிப்பார்கள்.
அடுத்தபடியான நான்காவது மற்றும் ஐந்தாவது வணக்கமான 'நமஸ்காரமும்' 'அபிநந்தனமும்' தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோருக்கு உரித்தானவை. மனிதர்களைத் தவிர்த்து மற்ற ஜீவராசிகளுக்கும் 'நமஸ்காரம்' மூலமாக மரியாதை செலுத்தலாம்.
இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து கூப்பிக் கொள்ளும் போது, "நீயும் நானும் சமமானவன்" என்ற தத்துவம் தெரியப்படுத்தபடுகின்றது. மேலும், கைகளைக் கூப்பி தலையை சாய்த்து மரியாதை செலுத்தும் போது ஒருவரின் பணிவுடைமை காட்டப்படுகின்றது.
இறுதியாக, கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வங்கள், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர்கள் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானவை. தெய்வங்களின் கால்களைத் தொட்டு வணங்குதல், இறைவனிடம் சரண்புகுதல் தத்துவத்தைக் குறிக்கின்றது. மற்றவர்களின் கால்களைத் தொட்டு வணங்குதலும் வெவ்வேறு தத்துவமுடையது.
ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்,போவேண்டிய ஊருக்கு வழி தெரியாவிட்டால், வழி தெரிந்த ஒருவரின் கால் தடங்களைப் பின்பற்றி சென்றாலே போதும்; நாமும் ஊரைச் சென்றடையலாம்.
அதுபோல வாழ்க்கையில் சிறந்தவர்களின் அறிவுரைகளையும், கருத்துகளையும், போதனைகளையும் நாம் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இதுவே கால்களைத் தொட்டு வணங்கும் முறை உணர்த்தும் தத்துவமாகும்.
கண்டவர்கள் காலில் எல்லாம் விழுவது சரியல்ல. எல்லா வகையான மனிதர்களுக்கும் "நமஸ்காரம்" முறையில் மரியாதை தரவேண்டும். ஆனால் கால்களைத் தொட்டு வணங்கும் முறை தெய்வம், தாய், தந்தை, குரு மற்றும் சான்றோர் ஆகியோருக்கு மட்டுமே உரித்தானது.
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த "சாமியார்" என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர்
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கு: பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கில் பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்புப் பாடநூலிலும், கல்லூரிப் பாடத் திட்டத்திலும் பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் "தெற்காசிய சாக்ரடீஸ்" என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவலை நீக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு உண்மை தெரிந்து விடுமோ என எதிர்க்கட்சிகளுக்கு அச்சம்: மோடி
புதுடில்லி: வேளாண் சட்டங்கள் குறித்து காங்., பொய்களை பரப்புவதாகவும், சட்டங்களுக்கு வர்ணம் பூசி விமர்சனம் செய்வதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும்.
சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் இந்தியாவை எங்கு அழைத்து செல்ல விரும்புகிறோம் என்ற புதிய தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். தன்னிறைவு பெற்ற இந்தியாவை முன்னெடுத்து செல்வதை நாம் யோசிக்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியுள்ளது
கடந்த 2020-ம் ஆண்டில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல்: மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
கடந்த 2020-ம் ஆண்டில் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் கடந்த 2020-ம்ஆண்டில் 5,133 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 46 பேர் இறந்தனர்.
டெல்லி வன்முறை : தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது
டெல்லியில் டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில், தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த மோதல், செங்கோட்டையில் சீக்கிய மத கொடியை ஏற்றியது போன்ற சம்பவங்களில் தீப் சித்து இடம்பெற்றிருந்தது வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
தீப் சித்து உள்பட 8 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.