விவசாயிகளுக்கு உண்மை தெரிந்து விடுமோ என எதிர்க்கட்சிகளுக்கு அச்சம்: மோடி

புதுடில்லி: வேளாண் சட்டங்கள் குறித்து காங்., பொய்களை பரப்புவதாகவும், சட்டங்களுக்கு வர்ணம் பூசி விமர்சனம் செய்வதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும்.
சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் இந்தியாவை எங்கு அழைத்து செல்ல விரும்புகிறோம் என்ற புதிய தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். தன்னிறைவு பெற்ற இந்தியாவை முன்னெடுத்து செல்வதை நாம் யோசிக்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியுள்ளது
உலக நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாக உள்ளது. ஒரு லட்சியத்தை நோக்கி பல்வேறு சவால்களை சமாளித்து இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டது. இந்தியாவை பற்றி பேசும்போது, விவேகானந்தர் கூறியது நினைவுக்கு வரும்.
கொரோனா காலத்தில் நம்மை நாமே காத்து கொண்டதுடன், உலக நாடுகளுக்கும் உதவி செய்தோம். கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்தது. உலக நாடுகள் கூட அதனிடம் மண்டியிட்டன.
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு விஷயங்களை செய்துள்ளோம். கடவுளின் அருளால் தான் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டோம் என காங்.,சின் மணீஷ் திவாரி கூறுகிறார். ஆமாம் உண்மையில் கடவுளின் அருளால் தான் பாதுகாப்பாக இருக்கிறோம்.
உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியபோதும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கடவுளாக வந்ததால் நாம் பாதுகாப்பாக இருந்தோம். அவர்கள் கடவுளின் வடிவமாக சேவையாற்றினர்.
கொரோனாவுக்கு பிந்தைய உலகம் மிகவும் வித்தியாசமாக மாறி வருகிறது. அமைதியின் பாதையில் செல்ல உலக நாடுகள் உறுதிப்பூண்டுள்ளன. கொரோனாவிற்கு பிறகு புதிய உலகம் உருவாகியுள்ளது.
இந்தியாவில் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டது. 75 கோடி இந்தியர்களுக்கு ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, ஜன்தன் யோஜனா, ஆதார் பயன்படுத்தப்பட்டது.
கொள்கை மற்றும் திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை மீட்டுள்ளோம். மத்திய அரசு கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பலருக்கு உதவி செய்துள்ளன.
வேளாண் சட்டங்கள்

வேளாண் துறைக்கு ஊக்கமளிக்கவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எங்களது நோக்கம் நேர்மையானது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலன் தரக்கூடியது. இந்த சட்டத்திற்கு வர்ணம் பூசி காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது.
விவசாயிகளுக்கு உண்மை தெரிந்துவிடுமோ என எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. விவசாயிகளின் உணர்வுகளை மதிக்கிறோம். எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்புகின்றனர். உங்களுடைய உரிமைகள் ஏதேனும் பறிப்போகிறதோ என்று ஏதாவது ஒரு விவசாயியிடம் கேளுங்கள். இந்த சட்டங்களை தடம்புரள செய்ய காங்., திட்டமிடுகிறது.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறோம். வேளாண் துறையில் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பலனை அளிக்க துவங்கியுள்ளன.

வேளாண் சட்டங்களின் நோக்கம், முக்கிய அம்சங்கள் பற்றி விவாதித்தால் நன்றாக இருந்திருக்கும்.
முறையாக விவாதம் நடத்தாமல், வேறு விஷயங்கள் பற்றி விவாதம் நடத்துகின்றன. குறைந்தபட்ச ஆதார விலை பாதிக்கப்படவில்லை. விளைபொருட்கள் விற்பனை செய்யும் சந்தைகள் மூடப்படவில்லை. விவசாயிகளுக்கு உண்மை தெரிந்து விடுமோ என எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன.
தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி நாட்டில் பிரச்னைகளை உருவாக்க பல சக்திகள் முயற்சித்து வருகின்றன. உரிமை பறிக்கப்படுகிறதா என விவசாயிகளிடம் கேட்க விரும்புகிறேன். ஆனால், ஒருவரும் பதிலளிக்க தயாராக இல்லை.
இந்த சட்டங்களை எதிர்ப்பதற்கு உரிய காரணம் யாரிடமும் இல்லை. இதனால், ஜனநாயகம் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கவலைப்படுகின்றனர். புது சட்டங்கள் விவசாய பொருள் விற்பனை செய்யும் மண்டிக்களை பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், சில கட்சிகள் வெற்று கோஷம் போடுகின்றன.
நாடு வளர்ச்சி பெறுவதற்கு இந்த சட்டங்கள் தேவைப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகவே உள்ளது.

இந்தியாவின் பழமையான கட்சி பிளவுபட்டுள்ளது.காங்கிரசின் நிலைப்பாடு, ராஜ்யசபாவில் இருந்து லோக்சபாவில் மாறுபட்டுள்ளது.
மக்கள் கேட்காமலேயே அவர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்கள் கேட்காமல், ஆயுஸ்மான் பாரத் திட்டம், ஏழைகளின் வீடுகளில் கழிப்பறை ஆகியவை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்கு அதிகாரம் கிடைக்க விருமபுகிறோம்.
மாற்றங்கள் ஏற்பட, இளைஞர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் வெளிநடப்பு

பிரதமர் உரையின் போது, அவர் தெரிவித்த சில விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ராகுல், தலைமையில் காங்., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

10 Feb
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த "சாமியார்" என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர்
Read 25 tweets
10 Feb
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கு: பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பெரியார் பற்றிப் பாடநூலில் உள்ள தவறான தகவலை நீக்கக் கோரிய வழக்கில் பாடநூல் குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்புப் பாடநூலிலும், கல்லூரிப் பாடத் திட்டத்திலும் பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் "தெற்காசிய சாக்ரடீஸ்" என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவலை நீக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
Read 4 tweets
9 Feb
திருஆலவாய் என்னும் மதுரை திருத்தலத்தில்
ஸ்ரீ சொக்கநாதாின்
திருவிளையாடல்கள் அறுபத்து நான்கு.

அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக விளக்கப்பட்டுள்ளன.

🙏🇮🇳1
1. இந்திரன் பழி தீர்த்த படலம் .
2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம் .
3. திருநகரங்கண்ட படலம் .
4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் .
5. தடாதகையாரின் திருமணப் படலம் .
6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் .
7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் .
🙏🇮🇳2
8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் .
9. ஏழுகடல் அழைத்த படலம் .
10. மலயத்துவசனை அழைத்த படலம் .
11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் .
12. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் .
13. கடல் சுவற வேல்விட்ட படலம் .
14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம் .
🙏🇮🇳3
Read 10 tweets
9 Feb
*நாம் வைக்கும் வணக்கத்தில் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றின் பயன்கள் என்ன?*

நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்...
பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் (Namaskar) செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் 'பிரணாமங்கள்' அல்லது 'வணக்கங்கள்' (Namaste) என்றழைக்கப்படுகின்றன.
நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன.

அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

1) அஷ்டாங்கணம்
- உடலின் எட்டு அங்கங்கள் (கால்விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை, மூக்கு, நெற்றி முதலியவை) தரையில் படும்படி, முழுமையாக விழுந்து வணங்குதல். (தெய்வங்களுக்கு மட்டும்)
Read 15 tweets
9 Feb
கடந்த 2020-ம் ஆண்டில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல்: மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

கடந்த 2020-ம் ஆண்டில் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் கடந்த 2020-ம்ஆண்டில் 5,133 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 46 பேர் இறந்தனர்.
Read 10 tweets
9 Feb
டெல்லி வன்முறை : தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது

டெல்லியில் டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில், தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த மோதல், செங்கோட்டையில் சீக்கிய மத கொடியை ஏற்றியது போன்ற சம்பவங்களில் தீப் சித்து இடம்பெற்றிருந்தது வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
தீப் சித்து உள்பட 8 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!