தற்போதைய தேர்தல் அரசியல் நடைமுறை என்பது, உதாரணத்துக்கு A, B, C, D என்று இருக்கும் கட்சிகளில் இருந்து ஏதாவது ஒரு கட்சியை தேர்ந்தெடுப்பது தான். இந்த கட்சியிகளிடம் நிறை குறைகள் கலந்து இருக்கும். #Winning_RisingSun
1/n
அவற்றில் குறைகளை விட நிறைகள் அதிகம் இருக்கும் ஒரு கட்சியை தேர்ந்தெடுக்க முடியும் என்பது தான் தேர்தல் நடைமுறையில் நம் முன் இருக்கும் சாத்தியம்.
அதை விட்டுவிட்டு இதில் எதுவுமே சரியில்லை என்று பொத்தாம் பொதுவாக பேசுவதும், அதனால் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதும், 2/n
நிறைகளை விட குறைகள் அதிகமாக இருக்கும் கட்சியை ஆட்சிக்கு வரவே அது வழி வகுத்து விடும்.
தமிழ்நாட்டின் உயிர்நாடிக் கொள்கைகளான சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, மொழியுரிமை, மதச்சார்பற்ற சகோதரத்துவம் போன்ற கொள்கைகளை "வலுவாக" பேசுகின்ற அதன்வழி "நிற்கின்ற" கட்சி எது?3/n
அப்படி இருக்கும் கட்சிக்கு அப்பழுக்கற்ற குற்றச்சாட்டுகள் இல்லாத தலைவர் இருக்கிறாரா..?
அப்படி இருக்கும் தலைவருக்கு அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறமையும் உள்ளதா..?
4/n
அந்த கட்சிக்கும் அதன் தலைவருக்கும் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், பெண்கள், இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் கல்வி, வேலைவாய்ப்பில் தொலைநோக்கு பார்வை உள்ளதா..?
5/n
அப்படிப்பட்ட தலைவருக்கு மக்கள் மீதான அக்கறை எப்படிப்பட்டதாக உள்ளது..?
மக்கள் மீது வரிகளை சுமத்தியும், விலைவாசியை உயர்த்தியும், வெறும் கடன்களை மட்டுமே பெற்று ஆட்சி நிர்வாகத்தை நடத்தாமல்.., 6/n
மக்கள் மீது பெரும் வரிச்சுமையை ஏற்றாமல், தொழில் வளம் பெருக்கி, முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டின் வரிவருவாயை உயர்த்தும் திறமை அந்த தலைவருக்கு உள்ளதா?
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தேவையான தோராயமாக 35% முதல் 40% வாக்குகள் அந்த தலைவரின் கட்சிக்கு இருக்கிறதா? 7/n
இது தான் தமிழ்நாட்டு தேர்தல் நடைமுறையில் ஆளும் அரசை தேர்ந்தெடுக்க மக்களுக்கு இருக்கும் எளிய அளவுகோல்.
இந்த அளவுகோல் படி திமுக என்ற கட்சியும் அதன் தலைவர் ஸ்டாலினும் குறைகளை விட நிறைகளை அதிகம் பெறுகிறார்கள். எனவே நான் திமுகவை ஆதரிக்கிறேன். 8/n
நீங்கள் திமுகவை விட, ஸ்டாலினை விட நிறைகள் அதிகம் உள்ள ஒரு தலைவரை, கட்சியை தற்போதை தமிழ்நாட்டு அரசியலில் காட்டுங்கள்.. அதனால் அந்த கட்சியை ஆதரிக்கிறேன் என்று சொல்லுங்கள். அது தான் நேர்மை. 9/n
அதைவிட்டுட்டு, துண்டுச் சீட்டு, வாரிசு அரசியல், டீ கடை சண்டை என்று உப்புசப்பு இல்லாத கதைகளை பேசினால், ஒன்று தாங்கள் ஆதரிக்கும் கட்சியும், தலைவரும் இந்த தகுதி இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அதனால் அவர்களை ஆதரிப்பதை வெளிப்படையாக வெளியே சொல்ல அசிங்கப்படுபவர்களாக இருக்க வேண்டும்.10/n
இல்லையென்றால் சாதிய அடிப்படையில் கட்சியை, தலைவர்களை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் தங்கள் சுயலாபத்துக்காக (பதவி, பணம்) அடிப்படையில் அரசியலை பார்க்க கூடியவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் புறம் தள்ளப்பட வேண்டியவர்கள்.n/n
கி.மீ கணக்கில் இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாயடைத்துள்ளது
இந்து -
இந்து, இந்துக்கள் என்று பேசும் பாஜக தான், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபற்றி மோடி இது வரை வாய் திறக்கவில்லை. #GoBackModi