மாளவிகா ஐயர் என்கிற இந்த பெண்மணியின் பெயரை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழ் நாட்டில் கும்பகோணம் என்ற ஊரில் பிறந்த இவர் தமிழை தாய்மொழியாகக் கொண்ட (தமிழ் பேசும்) இந்தியர்.

தந்தையின் பணி இடமாறுதல் காரணமாக ராஜஸ்தான் மாநில பிகானீர் என்னுமிடத்தில் வசித்து வந்தார் .
தன்னுடைய பதிமூன்றாவது வயதில் அங்கு நடந்த ஒரு கோரமான குண்டு வெடிப்பில் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்தார். வெடிகுண்டு விபத்தில் பலத்த காயங்கள் அடைந்ததனால் கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடினார் .
நீண்ட நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் ரெகுலர் பள்ளிப் படிப்பு தடைபெற்றது. தன்னுடைய பத்தாம் வகுப்பு எஸ்.எஸ். எல். ஸி தேர்வினை பள்ளிக்கூடம் செல்லாமல் பிரைவேட் கேண்டிடேட்டாக எழுதினார். அந்த தேர்வில் ஸ்டேட் ரேங்கில் தேர்வானது பலரது கவனத்தை கவர்ந்தது.
இதை கேள்விப்பட்ட அப்போதைய இந்திய ஜனாதிபதி மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இவரை ராஷ்ட்ரபதி பவனுக்கு வரவழைத்து பாராட்டினார்.
பின்னர் டெல்லியில் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீஃபன்ஸ் காலேஜில் எக்கனாமிக்ஸ் ஹானர்ஸ் பட்டப்படிப்பும் மாஸ்டர்ஸ் இன் சோஷியல் வர்க் என்ற முதுகலை பட்டப்படிப்பும் பயின்றார். பின்னர் சென்னையின் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வர்க் என்ற கல்வி நிறுவனத்தில் எம்.ஃபில். படிப்பையும் முடித்தார்.
இவரது எம்.ஃபில் படிப்பில் Best M.Phil. Thesis in 2012.என்ற விருதும் வழங்கப்பட்டது . 2017 இல் சோஷியல் வர்க் படிப்பில் பிஎச்டி பட்டமும் பெற்றார்.
உடல் ஊனமுற்றோர் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பங்களையும் சவால்களையும் பற்றி ஐநா சபை உட்பட ஏராளமான சர்வதச அரங்குகளில் ஆய்வறிக்கையும் சொற்பொழிவும் ஆற்றியுள்ளார் .
பல என்ஜிஓ க்களுக்கு உடல் ஊனமுற்றோர் சந்திக்கும் பிரச்சனைகளையும் அவற்ற்றை சமாளிக்கும் விதங்களை பற்றியும் ஆலோசனை வழங்கியுள்ளார் .

இவர் பெற்ற சில விருதுகளை இங்கே பட்டியலிடுகிறேன்.
(1) Outstanding Model Student Award by Wisdom International Magazine
(2) REX Karmaveer Chakra Global Fellowship in 2014,
(3) the first Women in the World Emerging Leaders Award in New York in 2016
(4) She was recognized as one of the 100 Change Agents and Newsmakers of the Decade by Deccan Chronicle in 2015.
(5) She was featured in the 3rd edition of Vodafone Foundation's coffee-table book Women of Pure Wonder: Vision, Valour, Victory and Gifted: Inspiring Stories of People with Disabilities
இது மட்டுமல்லாது இந்திய அரசு சாதனையாள பெண்மணிகளுக்கு வழங்கும் மிக உயரிய விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதை 2018 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவர் மேதகு ராம் நாத் கோவிந்த் கையால் வழங்கப்பட்டது.
இந்திய பிரதமர் திரு, நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய சோஷியல் மீடியா அக்கவுண்ட்டை இவர் கையாள பணித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதாவது என் இனிய தமிழ் மக்களே... உங்கள் வீட்டில் பள்ளி / கல்லூரி செல்லும் பெண்குழந்தைகள் இருந்தால் இவர் பற்றி கூறுங்கள். யார் கண்டது ? அவர்கள் இவரையே ஒரு ரோல் மாடலாக மனதில் கொண்டு வாழ்க்கையில் உருப்படலாம்.
இவரது சொற்பொழிவில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வாக்கியம். வாழ்க்கையில் உண்மையான ஊனம் என்பது தவறான மனப்பான்மை தான். (The only Disability in life is a bad attitude)
பின்குறிப்பு : பிப்ரவரி 18 1989 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 32 ஆண்டுகள் நிறைவுறும் தருணத்தில் அவருக்கு நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

22 Feb
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமாகச் சிதம்பரத்தில் உள்ள கடல்சார் அறிவியல் கல்லூரி முறையாக விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி அதன் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் மாணவர்களுக்கு 50 விழுக்காடு கல்விக் கட்டணத்தைத் திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லூரியை நடத்தும் அறக்கட்டளை சார்பில் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Read 5 tweets
22 Feb
இலங்கையில் பா.ஜ., காலத்தின் கட்டாயம்

இலங்கையின் தமிழ் முன்னோடிகளில் ஒருவர், மறவன் புலவு சச்சிதானந்தன். காந்தளம் பதிப்பகத்தின் அதிபர். தமிழக தலைவர்கள் பலரோடும் தொடர்பில் இருப்பவர்.
பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில், அந்த நாட்டில் கட்சி துவங்க போவதாக தெரிவித்துள்ளார். அவரை சந்தித்தபோது...
கட்சிக்கு 'இரவல் பெயர் எதற்கு?'

இந்தியாவின் விடுதலை இயக்கமான, இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாடுகளை பார்த்து, இங்கு சிங்களரும், தமிழரும் இணைந்து உருவாக்கியது தான், இலங்கை தேசிய காங்கிரஸ்.
ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில், காந்தியை வரவேற்ற அமைப்பு, யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ்.
Read 21 tweets
22 Feb
*இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!*

*இராமேஸ்வரம் தல வரலாறு*

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.🇮🇳🙏1
எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு "ராம ஈஸ்வரம்" என்று பெயர் ஆனது.

மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

🇮🇳🙏2
*22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்*

*1. மகாலெட்சுமி தீர்த்தம்*

இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

🇮🇳🙏3
Read 23 tweets
22 Feb
*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.*

*பஞ்சாங்கம்* ~ *மாசி ~ 10*

*{22.02.2021}*.- *திங்கட்கிழமை*

*1.வருடம் ~ ஸார்வரி வருடம். { ஸார்வரி நாம சம்வத்ஸரம்}.*

*2.அயனம் ~ உத்தராயணம் .*

*3.ருது ~ ஸிஸிர ருதௌ.*

*4.மாதம் ~ மாசி ( கும்ப மாஸம்).*

*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.*
*6.திதி ~ தசமி பிற்பகல் 03.31PM. வரை. பிறகு ஏகாதசி .*

*ஸ்ரார்த்த திதி ~ தசமி .*

*7.நாள் ~ திங்கட்கிழமை {இந்து வாஸரம்.} ~~~*

*8. நக்ஷத்திரம் ~ மிருகஸீர்ஷம் காலை 09.28 AM. வரை. பிறகு திருவாதிரை .*

*யோகம் ~ அமிர்த ,சித்த யோகம்.*
*கரணம் ~ வணிஜை, பத்ரம் .*

*நல்ல நேரம் ~ காலை 06.30 AM ~ 07.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*

*ராகு காலம் ~ காலை 07.30 AM ~ 09.00 AM.*

*எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM.*

*குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.*

*சூரிய உதயம் ~ காலை 06.32 AM.*

*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.16 PM.*
Read 11 tweets
21 Feb
“சாமியாரும் குரங்கும்” ~வாரியார் சுவாமிகள்

ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார்.
அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து ‘இலை போடு’ என்றார்.
குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது.
உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்தார்.

‘சாதம் போடு’ என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. தரும்பவும் தலையில் அடித்தார்.
அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அதற்கு பிரம்படி விழுந்து கொண்டே இருந்தது.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை. ‘சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே. அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.
Read 8 tweets
21 Feb
வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் மோடிக்குப் பாராட்டு: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கும், கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி கையாண்டதற்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்து, பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டம் முதல் முறையால டெல்லியில் உள்ள என்டிஎம்சி அரங்கில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!