சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி, வெள்ளிக்கிழமை காலை, பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' தளத்தில், வெளியிட்ட பதிவை, அந்த நிறுவனம் தடை செய்துள்ளது, பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'பாரதத் தாயின் அருந்தவப் புதல்வனான, சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளில், அவருக்குஎன் மரியாதையைதெரிவிக்கிறேன்.'அவருடைய வெல்ல முடியாத துணிச்சல், அற்புதமான வீரம், அசாதாரணமான புத்திசாலித்தனம் போன்றவை, ஒவ்வொரு இந்தியனையும், காலம் காலமாக உற்சாகப்படுத்தும்;
ஜெய் சிவாஜி!' என, பிரதமர் தன், டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.இந்தச் செய்தியில் என்ன பிழை? ஆனால், டுவிட்டர் நிறுவனம், இந்தச் செய்தியை மறைத்து, 'பிரதமர் வெளியிட்ட செய்தியில், சென்சிட்டிவான உள்ளடக்கம் இருக்கலாம்.
அதைப் பார்க்க, உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும்' என, குறிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, இது அனைவரும் படிக்கத்தக்க செய்தி அல்லவாம்.இதனால், அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுமாம். படிப்பவர்கள் இதனால், மனவருத்தம் அடையலாமாம்.
அதாவது, இது ஒருவிதமான 'அபாய எச்சரிக்கை.'ஏற்கனவே இதேபோன்று, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின், பல்வேறு செய்திகளுக்கு அபாய எச்சரிக்கை குறிப்புகளை வெளியிட்டது டுவிட்டர்.டிரம்ப் பேசிய பல செய்திகள், கலவரத்தை துாண்டக்கூடியதாக இருந்தது உண்மை. அங்கே அது, பொருத்தமாக இருக்கலாம்.
இங்கே... சிவாஜியின் பிறந்த நாளுக்கு, பிரதமர் மரியாதை செலுத்தக் கூடாதா? டுவிட்டர் கண்களுக்கு, வேறு அபாயங்கள் தெரியவில்லையா என்ற, கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்புகின்றனர்.'கோ பேக் மோடி' என, நடிகை ஓவியா எழுதிய போது, அதன் தலைமேல், இதுபோன்ற அபாய எச்சரிக்கை இல்லையே?
'மோடி பிளானிங் பார்மர்ஸ் ஜெனோசைட்' போன்ற, ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆன போது, அதைத் தடுக்க, டுவிட்டர் நிறுவனம் என்ன செய்தது; அங்கே என்ன அபாய எச்சரிக்கையை தெரிவித்தது; ஒன்றும் இல்லையே?
டுவிட்டரின் கருத்து சுதந்திர முகம் எவ்வளவு போலியானது, பாரபட்சமுள்ளது என்பதை, அதன் நடவடிக்கைகளே தெரிவிக்கின்றன என்கின்றனர் இணையவாசிகள்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமாகச் சிதம்பரத்தில் உள்ள கடல்சார் அறிவியல் கல்லூரி முறையாக விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி அதன் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் மாணவர்களுக்கு 50 விழுக்காடு கல்விக் கட்டணத்தைத் திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லூரியை நடத்தும் அறக்கட்டளை சார்பில் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தமிழ் முன்னோடிகளில் ஒருவர், மறவன் புலவு சச்சிதானந்தன். காந்தளம் பதிப்பகத்தின் அதிபர். தமிழக தலைவர்கள் பலரோடும் தொடர்பில் இருப்பவர்.
பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில், அந்த நாட்டில் கட்சி துவங்க போவதாக தெரிவித்துள்ளார். அவரை சந்தித்தபோது...
கட்சிக்கு 'இரவல் பெயர் எதற்கு?'
இந்தியாவின் விடுதலை இயக்கமான, இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாடுகளை பார்த்து, இங்கு சிங்களரும், தமிழரும் இணைந்து உருவாக்கியது தான், இலங்கை தேசிய காங்கிரஸ்.
ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில், காந்தியை வரவேற்ற அமைப்பு, யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ்.
ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார்.
அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து ‘இலை போடு’ என்றார்.
குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது.
உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்தார்.
‘சாதம் போடு’ என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. தரும்பவும் தலையில் அடித்தார்.
அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அதற்கு பிரம்படி விழுந்து கொண்டே இருந்தது.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை. ‘சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே. அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.
வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் மோடிக்குப் பாராட்டு: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கும், கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி கையாண்டதற்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்து, பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டம் முதல் முறையால டெல்லியில் உள்ள என்டிஎம்சி அரங்கில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்.