கோல்கட்டா: நிலக்கரி கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ரூரிஜா பானர்ஜிக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது.
சம்மனை நேரில் கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்றனர். ஆனால் ரூரிஜா வீட்டில் இல்லை. இதனையடுத்து, அங்கிருந்தவர்களிடம் சம்மனை அளித்து விட்டு சிபிஐ அதிகாரிகள் திரும்பினர்.
அவர் எப்போது வீட்டில் உள்ளாரோ அப்போது விசாரணை நடத்துவோம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மே.வங்க மாநிலத்தில் நிலக்கரியை கடத்துவதற்காக மாபியாக்கள், ஆளுங்கட்சி தலைவர்களுக்கு பணம் கொடுத்ததாக சிபிஐ குற்றச்சாட்டியுள்ளது.
இந்த பணம், அபிஷேக் பானர்ஜி தலைவராக உள்ள திரிணமுல் காங்கிரசின் இளைஞரணியில் பொது செயலராக இருக்கும் வினய் மிஸ்ரா மூலம் அக்கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், வினய் மிஸ்ரா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனையடுத்து அவர் தலைமறைவாக உள்ளார். அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமாகச் சிதம்பரத்தில் உள்ள கடல்சார் அறிவியல் கல்லூரி முறையாக விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி அதன் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் மாணவர்களுக்கு 50 விழுக்காடு கல்விக் கட்டணத்தைத் திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லூரியை நடத்தும் அறக்கட்டளை சார்பில் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தமிழ் முன்னோடிகளில் ஒருவர், மறவன் புலவு சச்சிதானந்தன். காந்தளம் பதிப்பகத்தின் அதிபர். தமிழக தலைவர்கள் பலரோடும் தொடர்பில் இருப்பவர்.
பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில், அந்த நாட்டில் கட்சி துவங்க போவதாக தெரிவித்துள்ளார். அவரை சந்தித்தபோது...
கட்சிக்கு 'இரவல் பெயர் எதற்கு?'
இந்தியாவின் விடுதலை இயக்கமான, இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாடுகளை பார்த்து, இங்கு சிங்களரும், தமிழரும் இணைந்து உருவாக்கியது தான், இலங்கை தேசிய காங்கிரஸ்.
ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில், காந்தியை வரவேற்ற அமைப்பு, யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ்.
ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார்.
அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து ‘இலை போடு’ என்றார்.
குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது.
உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்தார்.
‘சாதம் போடு’ என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. தரும்பவும் தலையில் அடித்தார்.
அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அதற்கு பிரம்படி விழுந்து கொண்டே இருந்தது.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை. ‘சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே. அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.
வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் மோடிக்குப் பாராட்டு: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கும், கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி கையாண்டதற்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்து, பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டம் முதல் முறையால டெல்லியில் உள்ள என்டிஎம்சி அரங்கில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்.