சேலம்: நாட்டை நிர்மாணிப்பதற்காக பா.ஜ., அரசியல் செய்கிறது என சேலத்தில் நடந்த பா.ஜ., கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், பா.ஜ., இளைஞரணி சார்பில், தாமரை இளைஞர்கள் சங்கமம் எனும் மாநில மாநாடு, நடந்தது. இதற்காக, தமிழக சட்டசபை அலுவலக தோற்றத்தில், மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் சட்டசபைக்குள் நுழைய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது.
நாட்டினை நிர்மாணிப்பதற்காகவே பா.ஜ., அரசியல் செய்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளினால், அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் .
நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. பங்குச்சந்தைகள் வேகமாக வளர்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக விவசாய கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
வாஜ்பாய் தான், அப்துல் கலாமை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தார். இது தமிழகத்திற்கு செய்த மரியாதை இல்லையா? 1974 ல் கச்சத்தீவை, இலங்கைக்கு காங்கிரஸ் அரசு தான் கொடுத்தது. இதற்காக கண்டனம் தெரிவித்த வாஜ்பாய் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
அதிமுக - பாஜ, கூட்டணியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லது செய்யும். உடலில் உயிர் இருக்கும் வரை ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுத்தர மாட்டோம். சீனாவுடன் 9 சுற்று பேச்சுவார்த்தை நடந்த பிறகு, நமக்கு சாதகமான சூழ்நிலை வந்துள்ளது.
சேலம் - சென்னை விரைவு சாலை திட்டப்பணிகள் 2021- 22ல் துவங்கப்படும். இந்திய அளவிலான 2 ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. கொரோனாவினால் சுகாதாரம் மட்டுமல்ல. பொருளாதாரமும் கெட்டு விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமாகச் சிதம்பரத்தில் உள்ள கடல்சார் அறிவியல் கல்லூரி முறையாக விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி அதன் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் மாணவர்களுக்கு 50 விழுக்காடு கல்விக் கட்டணத்தைத் திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லூரியை நடத்தும் அறக்கட்டளை சார்பில் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தமிழ் முன்னோடிகளில் ஒருவர், மறவன் புலவு சச்சிதானந்தன். காந்தளம் பதிப்பகத்தின் அதிபர். தமிழக தலைவர்கள் பலரோடும் தொடர்பில் இருப்பவர்.
பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில், அந்த நாட்டில் கட்சி துவங்க போவதாக தெரிவித்துள்ளார். அவரை சந்தித்தபோது...
கட்சிக்கு 'இரவல் பெயர் எதற்கு?'
இந்தியாவின் விடுதலை இயக்கமான, இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாடுகளை பார்த்து, இங்கு சிங்களரும், தமிழரும் இணைந்து உருவாக்கியது தான், இலங்கை தேசிய காங்கிரஸ்.
ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில், காந்தியை வரவேற்ற அமைப்பு, யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ்.
ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார்.
அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து ‘இலை போடு’ என்றார்.
குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது.
உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்தார்.
‘சாதம் போடு’ என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. தரும்பவும் தலையில் அடித்தார்.
அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அதற்கு பிரம்படி விழுந்து கொண்டே இருந்தது.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை. ‘சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே. அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.
வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் மோடிக்குப் பாராட்டு: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கும், கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி கையாண்டதற்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்து, பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டம் முதல் முறையால டெல்லியில் உள்ள என்டிஎம்சி அரங்கில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்.