#மாசிமகம் மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்று கோவில்களில் இருந்து சுவாமி புறப்பட்டு கடலில் அல்லது நதியில் நீராடி திரும்புவர். இதை தீர்த்தவாரி அல்லது கடலாடி என்பார்கள். பக்தர்களும் சுவாமியுடன் ஸ்நானம் செய்து புண்ணிய பலனை அடைவர். கங்கை,
காவிரி ஆகிய புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் இந்நாளில் நீராடி இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால் முன் ஜென்ம வினைகள் தீரும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறது சாஸ்திரம். தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவது இதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும். மாசி மாதம் மகம்
நட்சத்திரத்தில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் சிவ தீட்சை பெற்ற பலனைத் தரக்கூடியது. மாசி மக நன்னாளில் தான் பார்வதி தேவி தாட்சாயிணியாக அவதரித்தார். ஸ்ரீ மகாவிஷ்ணு பாதாளலோகத்தில் இருந்து பூலோகத்தை மீட்க வராக அவதாரம் எடுத்த திருநாளும் மாசி மகத்தன்று தான். முருகப்பெருமான் தன்
தந்தை சிவபெருமானுக்கு மந்திர உபதேசம் செய்வித்ததும் இந்த மாசி மாதத்தில் தான். ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்நாளில் முருக பெருமானை வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம். திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமியநாராயண பெருமாள் கோவிலில் மாசி மக திருநாள் சிறப்பாக கொண்டாடப்
படுகிறது. இக்கோவிலில் மாசி மக கிணறு என்னும் சிம்ம கிணறு இருக்கிறது. இதில் மக நாளில் நீராடுவது சிறப்பு. மந்திர உபதேசம் வேண்டி திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களிடம் ஸ்ரீ ராமானுஜர் 18 முறை தேடி வந்து உபதேசம் பெற்றது இங்கு தான். மாசி மகத்தன்று இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழாவில் மக்கள்
தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற தெப்ப குளத்தில் தீபமேற்றி வழிபடுவார்கள். மாசி மகத்தன்று காமதகன விழா நடைபெறும். மாசி மகத் திருநாளில் நெல்லையப்பர் கோவிலில் திருநாவுக்கரசருக்கு ” அப்பர்த்தெப்பம்” என்று தெப்ப விழா நடத்துவார்கள். மறைந்த முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்ய உகந்த நாளாக
கருதப்படுகிறது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் நீங்க மாசி மகம் மிக சிறந்த நாளாகும். இந்த நாளில் சூரியன் கும்ப ராசியிலும், சந்திரன் சிம்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். மகம் நட்சத்திரம் என்பது கேது பகவான் அதிபதியாக வரும் நட்சத்திரம்.
இதற்கு “பித்ருதேவ நட்சத்திரம்” என்றும் பெயர் உண்டு. இந்த நாளில் புனித தீர்த்தங்களில் நீராடுவது பிதுர் மஹாஸ்நானம் என்று கூறப்படுகிறது. நீர் நிலைகளில் நீராடுவதால் நம்முடைய பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. நீர் நிலைகளில் நீராட முடியாதவர்கள் அன்று கோவில்களுக்குச்
சென்று இறை தரிசனம் செய்வது நன்று. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசி மகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும். சிம்ம ராசியில் குரு பகவான் மற்றும் சந்திரன் மக நட்சத்திரத்திலும்
சஞ்சாரம் செய்யும் காலத்தில் வரும் பௌர்ணமி நாளே மகா மகம் ஆக கொண்டாடப்படுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாகும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமகக் குளம் வருவதாக ஐதீகம்.
கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோவில்களிலும், 5 பெருமாள் கோவில்களிலும் மாசி மக விழா கொண்டாடப்படும். அன்று அதிகாலை 4 மணி முதல் மகா மககுளத்தில் பக்தர்கள் புனித நீராடத் தொடங்குவர். மதியம் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள்
மகாமக குளக்கரையில் எழுந்தருள தீர்த்தவாரி நடக்கும். பெருமாள் கோவில்களிலிருந்து உற்சவர் புறப்பாடும், காவிரி சக்கர படித்துறையில் தீர்த்தவாரியும் நடக்கும். மாசி மகத்தன்று தானம் வழங்குவது, பெரியோரை வணங்கி ஆசி பெறுவது, மந்திர உபதேசம் பெறுவது நற்பலனை தரும். வடநாட்டில் இதனை கும்பமேளாவாக
கொண்டாடுகிறார்கள். சிவன், விஷ்ணு, முருகன்- மூன்று தெய்வங்களுக்கும் உகந்த நாளான மாசி மக நாளில் புனித நீராடி மாசி மக புராணம் படித்து, பிதுர் கடன் செய்வதன் மூலம் நாம் முக்தியை பெற முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. #மாசிமகம்#மகாமகம்#அர்த்தமுள்ள_இந்துமதம்#அர்த்தமுள்ளஇந்துமதம்
இன்று பார்த்தசாரதி பெருமாள் திருவல்லிக்கேணி கடற்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகிறார்🙏🏻 photo via @arvenky2
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#குலசேகரஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக, திருவஞ்சிக்குளம் என்னும் இடத்தில் கலி 28வதான பரபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பெருமாளின் மார்பில் இருக்கும் ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சம் ஆவார்.
இவர் திருவேங்கடவர் அருளாலே அவர் மீது பக்தி அதிகரித்து அதை அனுபவித்துக் கொண்டே ராஜ்ஜியம் நடத்தினார். அவர் சேர நாட்டை தவிர சோழ பாண்டிய தேசத்தையும் வென்று ஆட்சி புரிந்தார். கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழைக்கோன் என்று வழங்கப்பட்டார். ராமபிரான் மேல் அளவுகடந்த அன்பினால் ஒருமுறை
இராமாயணம் கதை கேட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் 14,000அரக்கர்களோடு ஜனஸ்தானம் என்னும் இடத்தில் போரிடுவதை கேட்டு எப்படி தனி ஒருவன் மாய அரக்கர்களோடு போராடுவார் என்று தன் சைனியத்தைத் திரட்டிக் கொண்டு அவருக்கு உதவ கிளம்பிவிட்டார். உடனே கதை சொல்பவர் அத்தனை போரையும் வதம் செய்து வென்றார்
#JayalalithaaBirthday Being her birthday today let us look at her achievements and her good qualities.
Jayalalithaa holds the record for having been the Tamil actress with maximum silver jubilee hits in her career—85 hits of 92 Tamil films as main female lead heroine and she
also has all 28 films in Telugu as silver jubilee hits. She was the highest-paid Indian actress from 1965 to 1980. She received praise for her versatility as an actress and for her dancing skills, earning the sobriquet "Queen of Tamil Cinema. She was academically brilliant and
could master a lot with her reading and comprehension skills. Most of her film world peers recall that the young Jaya never came to the sets without a book in hand. They say she never made small talk with the other stars and chose to devote her time to reading instead. She served
கலா மாஸ்டர் பிரயோகத்தை கடன் வாங்கிக் கொள்கிறேன். #நிர்மலாசீதாராமன் கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க! "இப்போ நாங்க கொடுத்த பாலிசியின் பயனால் தொழில்கள் எப்படி எழுந்து நிற்பது என்ற நிலையில் இல்லை, ஓடறதுக்கான முயற்சியில் இருக்காங்க. #இரும்புமனுஷி ஊறுகா மாமி இல்லை.
எல்லாமே மோடி அரசில் ஓபன் ஆக்ஷன் தான். தனிப்பட்டு எந்த கார்பரேட்டையும் அழைத்து வாய்ப்பு கொடுத்ததில்லை, ஆனால் கொடுப்பதாக குற்றச்சாட்டு வைக்கும் காங்கிரஸ் தான் கேரளாவில் அதானிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்துக் கூப்பிட்டு ஆக்ஷன் இல்லாமல் விழுஞ்சம் துறைமுகம் கட்ட வாய்ப்பு கொடுத்தது.
In BJP run government process is open. Process is transparent. Process is very well legally framed. This is a party with a difference.2014ல் இருந்து எந்த வங்கிக்காவது இது என் மாமா என் மச்சான் இவனுக்கு உதவி பண்ணுங்கன்னு நானாவது என் கேபினெட்டில் இருந்து யாராவது போன் பண்ணியிருக்கோமா
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார்.
அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம். துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது, அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார். செயல்படாத
தர்மம் அதர்மத்தை விட மோசமானது. அந்த பாவத்தினால்தான் நீ விரும்பியபடி மரணம் ஏற்படவில்லை என்று கூறினார். நான் செய்திருக்கும் மாபெரும் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வியாசர் யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே
WA forward😃
A Bengali, a Punjabi, a Gujarati & a Keralite were reluctant to take the Covid-19 vaccine. The Doctor called them in one by one. He told the Bengali, You must take your vaccine. The Bengali said no. The Doctor said, Every cultured and civilised man takes the vaccine.
The Bengali took his vaccine. Then the Punjabi came in. The Doctor said, Here is your vaccine. Punjabi said No. The Doctor said, your neighbours have all taken the vaccine. So the Punjabi took the vaccine. Then the Gujarati came in. The Doctor said, Take your vaccine. He said no.
And the Doctor said it’s an order from PM Modi. The Gujarati took his vaccine. Finally the Keralite came in. The Doctor said take your vaccine. Keralite said, No. The Doctor said, Every cultured and civilised man takes the vaccine. The Keralite said, Go away I will not take it.
மகா பெரியவா அருளிய தெய்வத்தின் குரலில் இருந்து-
*ஹிந்து மதமும் மதமாற்றமும்; முதல் மாற்றத்தைச் சரி செய்யும் மறுமாற்றம்*
பிறரைத் தம் மதத்திற்கு மாற்றும் கொள்கையை அடியோடு கைக்கொள்ளாத ஒரே பெருமதமான ஹிந்து மதத்திற்கு இவ்வாறு அதன் கொள்கைகளில் சுய விருப்பம் ஏற்பட்டதன் மீதேதான் பிற
நாட்டு நல்லறிஞர், அநுபவிகள் ஆகியோர் ஈர்க்கப் பெற்று அதனைத் தழுவியிருக்கின்றனர் என்பது கவனத்திற்குரியது. ஹிந்து மதத் தலைவர்களும் பழங்காலங்களில் பவுத்த - சமண மதத்தினரை ஹிந்து மதத்திற்கு மாற்றியுள்ளனரே என எதிர்க் கேள்வி விடுக்கலாம். இதற்கு நமது விடை, அதற்கு முற்காலங்களில்
ஹிந்துக்களாகவே இருந்து அப்புறச்சமயிகளின் பிரசாரத்தால் அச்சமயம்களுக்கு மாறியோரைத்தான் அத் தலைவர்கள் மீண்டும் தாய்ச் சமயத்திற்கு மாற்றினர் என்பதேயாம்.
கவனத்திற்குரிய ஒன்றுண்டு, யாதெனில், இந்நாட்டிலேயே தோன்றிய பவுத்த - சமண சமயங்களுக்கு வேறாகப் பிறநாட்டுச் சமயத்தினருக்கும் கிறிஸ்து