மகா பெரியவா அருளிய தெய்வத்தின் குரலில் இருந்து-
*ஹிந்து மதமும் மதமாற்றமும்; முதல் மாற்றத்தைச் சரி செய்யும் மறுமாற்றம்*
பிறரைத் தம் மதத்திற்கு மாற்றும் கொள்கையை அடியோடு கைக்கொள்ளாத ஒரே பெருமதமான ஹிந்து மதத்திற்கு இவ்வாறு அதன் கொள்கைகளில் சுய விருப்பம் ஏற்பட்டதன் மீதேதான் பிற
நாட்டு நல்லறிஞர், அநுபவிகள் ஆகியோர் ஈர்க்கப் பெற்று அதனைத் தழுவியிருக்கின்றனர் என்பது கவனத்திற்குரியது. ஹிந்து மதத் தலைவர்களும் பழங்காலங்களில் பவுத்த - சமண மதத்தினரை ஹிந்து மதத்திற்கு மாற்றியுள்ளனரே என எதிர்க் கேள்வி விடுக்கலாம். இதற்கு நமது விடை, அதற்கு முற்காலங்களில்
ஹிந்துக்களாகவே இருந்து அப்புறச்சமயிகளின் பிரசாரத்தால் அச்சமயம்களுக்கு மாறியோரைத்தான் அத் தலைவர்கள் மீண்டும் தாய்ச் சமயத்திற்கு மாற்றினர் என்பதேயாம்.
கவனத்திற்குரிய ஒன்றுண்டு, யாதெனில், இந்நாட்டிலேயே தோன்றிய பவுத்த - சமண சமயங்களுக்கு வேறாகப் பிறநாட்டுச் சமயத்தினருக்கும் கிறிஸ்து
சமயம் தோன்றியதற்கு முன்பிருந்தே, அலெக்ஸாந்தர் காலத்திலிருந்து நம் நாட்டுடன் தொடர்பு உண்டாகி, அவர்கள் அரசியல் ரீதியிலும் வாணிப ரீதியிலும் இங்கு குடியேறினரெனினும் அவர்களை ஹிந்து சமயத்திற்கு மாற்ற ஹிந்துக்கள் எண்ணியதுகூட இல்லை. பின்னாளில் முசல்மான்களும், கிறிஸ்துவர்களும் இங்கு
பெருமளவில் பிரவேசித்து, அதோடு நில்லாது, ஹிந்துக்களை வலிவுடனேயே மத மாற்றம் செய்தபோதுங்கூட பிறப்பாலேயே அப்பிற மதத்தாராக இருந்தோரை ஹிந்துக்களாக மாற்ற ஹிந்துக்கள் எண்ணவில்லை. அதனினும் குறிப்பிட்டத்தக்கதாக, அப்பிற மதங்களை ஏற்கனவே தழுவிவிட்ட ஹிந்துக்களைக்கூட மீண்டும் தாய்மதம் மாற்றாமல்
புதிதாக மேன்மேலும் ஹிந்துக்கள் அம்மதங்களுக்கு இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக மட்டுமே எதிர்ப் பிரசாரம் செய்தனர்.
கருத்தில் கொள்ளத்தக்க மற்றோர் அம்சம் உண்டு. யாதெனில், பொதுவாக ஹிந்து சமய மன்னர்கள் யாவரும் அந்த எல்லாப் புறச்சமயிகளும் அவரவரது ஆலயங்களை இங்கு எழுப்பிக் கொள்ளத் தாராளமாக
அநுமதித்தனர், அவர்களில் பலர் சமய சமரஸத்தில் மேலும் ஒரு படி சென்று அப்புறச் சமய ஆலயங்களுக்கு மானியம் முதலியன அளித்தனர், இன்னும் சில மன்னர்களோ தாங்களே புறச்சமயங்களுக்காக ஆலயங்கள் எழுப்பித் தந்துமிருக்கின்றனர். மொத்தத்தில், ஹிந்துக்கள் தாமாக offensive -ல் எதிர்த்துச் சென்று தமது
சமயத்திற்கு ஆள் சேர்த்ததே கிடையாது. மேன்மேலும் தம் மதத்தினரின் சங்கியை சிதைவுறாமல் தடுக்கும் தற்காப்பே ( defensive -ஏ) அவர்கள் செய்தது. இந்த அம்சத்தில் பழங்காலத்தில் செய்ததற்கும் இன்று செய்ய ஆரம்பித்திருப்பதற்கும் மாறுபாடொன்றுண்டு. அன்று பாரதத்திலேயே தோன்றிய பிற சமயங்களுக்கு
(பவுத்த - சமண மதங்களுக்கு) மாற்றப்பட்டோரை மீண்டும் ஹிந்து சமயத்திற்கு மாற்றினர். இன்று வெளிநாடுகளைச் சேர்ந்த பிற சமயங்களுக்கு அண்மைக் காலத்தில் மாற்றப்பட்டோரை ஹிந்து சமயத்திற்கு மாற்ற முயலப்படுகிறது. இம்மாறுபாட்டுக்குக் காரணம்: இங்கேயே தோன்றிய பர சமயங்களில் சரித்திரத்தின்
போக்கில் இந்நாட்டில் பவுத்தம் எடுபட்டேவிட்டதெனுமளவுக்குச் சுருங்கிவிட்டது. சமணமோ ஹிந்து மத அம்சங்களில் பலவற்றைத் தன்னிற் கொண்டு அதன் சகோதர மதம் போலாகிவிட்டது. மேலும் அவ்விரு மதத்தினர் இப்போது நமது நாட்டில் மதமாற்றத்தில் ஈடுபடவுமில்லை. மறுபுறத்தில், வெளிநாட்டுச் சமயங்களைச்
சார்ந்தோரின் மதமாற்ற நடவடிக்கைகளோ இன்றும் தீவிரம் குன்றாமலே நடைபெறுகின்றன.
மீண்டும் கவனித்தற்குரிய விஷயம், இத்தகைய நிலவரத்திலுங்கூட ஹிந்துக்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் முசல்மான்களாகவும், கிறித்துவர்களாகவும் இந்நாட்டிற்கு வந்தோரின் வம்சத்தினரை ஹிந்துக்களாக மாற்றுவதல்ல,
ஹிந்துக்களிலேயே சில தலைமுறைகளுக்கு முன் அப் புற மதங்களுக்கு மாறியோரின் வழி வந்தோரைக்கூட மீண்டும் ஹிந்துக்களாக்குவதற்கும் அல்ல. அண்மைக் காலத்தில் அவற்றுக்கு மாற்றப்பட்டோரை மீண்டும் தாய் மதத்திற்கு மாற்றுவதற்கே முயலப்படுகிறது.
*மதத் தொடர்பில்லாத உபாயங்கள்: கடும் தண்டனை விதித்தல்
வேண்டும்*
இதுவரை மதச்சுதந்திரம் பற்றிக் கூறியதெல்லாம் மத விஷயமாகவே பிரசாரம் செய்வது குறித்துத்தான். ஆனால் சரித்திரம் நிகழ்கால நடைமுறையில் காட்டியிருப்பதிலிருந்தோ, தவறான நோக்கம் கொண்ட மதப் பிரசாரம் என்பதைவிடவும் மிகவும் தவறாக, மதத் தொடர்பே இல்லாத உபாயங்களாலும் (உபாயங்களாலேயே அதிக
அளவில் என்றும் கூறலாம் ) மதமாற்றம் செய்வதாக ஏற்பட்டிருக்கிறது. எந்தச் சமுதாயத்திலும் அறிஞர்களாகவும், அநுபவிகளாகவும் ஆய்ந்தோய்ந்து பார்க்க அறியாதவர்களாக உள்ளோரே மிகப் பெரும்பாலாராயிருப்பதற்கேற்பவே ஹிந்து சமுதாயத்திலுமுள்ள அப்படிப்பட்ட பாமர மக்கள் இம்முறைகளால்தான் கூட்டம் கூட்டமாக
மதமாற்றம் கண்டுள்ளனர். இவ்வுபாயங்கள் இரண்டு வகையானவை. இரண்டும் மத அம்சங்களை விளக்கி அவற்றால் பிற மதத்தினருக்கு அதில் சுயமான பற்றுதல் ஏற்படுத்தாதவையே. ஒன்று பலவந்தம்: மிரட்டி உருட்டிக் கட்டாயக் கெடுபிடியால் மதமாற்றம் செய்வது. ஒரு மதஸ்தரின் ஆட்சி ஏற்படுகையில் பிற மதஸ்தருக்கு வரி
விதிப்பது போன்ற நடவடிக்கைகளும் இப்பலவந்தத்தைச் சேர்ந்தனவே.
இரண்டாவது, வசிய உபாயம்: கல்வியளிப்பது, நோய்ப்பிணி தீர்ப்பது, ஏனைய சமூக நலன்களைச் செய்வது ஆகியவற்றை மத ஸ்தாபனங்களின் மூலம் செய்து, உதவி பெறுவோருக்கு உதவி செய்வோரிடம் ஒரு கடப்பாடு உண்டாக்கி, அதை நேர்முகமாகவோ சாதுரியமாகவோ
எடுத்துக்காட்டி மதமாற்றம் செய்வது.
இவை யாவற்றினும் கேவலம், லஞ்சமாகப் பொருள் கொடுத்தே ஒரு மதத்தரை வேறு மதத்துக்கு மாற்றுவது.
பலவந்தம், வசியம் ஆகிய இவ்விரண்டுமே பொய்ப் பிரசாரத்தைவிடவும் தவறான வஞ்சகச் செயற்பாடாக இருப்பதால் சட்டபூர்வமாகப் பெருங்குற்றமாக்கப்பட்டு அவற்றுக்குக் கடும்
தண்டனை விதிக்க வேண்டும்.
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

23 Jan
WA forward😃
A Bengali, a Punjabi, a Gujarati & a Keralite were reluctant to take the Covid-19 vaccine. The Doctor called them in one by one. He told the Bengali, You must take your vaccine. The Bengali said no. The Doctor said, Every cultured and civilised man takes the vaccine.
The Bengali took his vaccine. Then the Punjabi came in. The Doctor said, Here is your vaccine. Punjabi said No. The Doctor said, your neighbours have all taken the vaccine. So the Punjabi took the vaccine. Then the Gujarati came in. The Doctor said, Take your vaccine. He said no.
And the Doctor said it’s an order from PM Modi. The Gujarati took his vaccine. Finally the Keralite came in. The Doctor said take your vaccine. Keralite said, No. The Doctor said, Every cultured and civilised man takes the vaccine. The Keralite said, Go away I will not take it.
Read 5 tweets
22 Jan
#குபேரன் நான்முகனின் மகன் புலஸ்திய முனிவருக்கு பிறந்தவர் விச்ரவசு. அவருக்கு இரண்டு மனைவிகள், அதில் மூத்த மனைவிக்குப் பிறந்தவர்தான் குபேரன். அப்போது அவரின் பெயர் வைஸ்ரவணன். இளையவளான கேகசிக்கு பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை. ஆரம்பத்தில் இலங்கையை வைஸ்ரவணன்
ஆண்டு வந்தார். ராவணன் தவம் இயற்றி வரங்கள் பல பெற்றதும், வைஸ்ரவணனைத் தோற்கடித்துவிட்டு, ஆட்சியை அபகரித்துக் கொண்டான். நாடிழந்த வைஸ்ரவணன் ஒரு தவசியாக நாடு தோறும் அலைந்து கொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய், தந்தையர் விரும்பினார்கள். அதன்படி பெண் தேடவும்
தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பெண்ணையும் வைஸ்ரவணனுக்கு பிடிக்கவில்லை. பேரழகாகவும் குணவதியாகவும் இருக்கும் பெண்ணைத் தேடி நாடெங்கும் சுற்றிவரத் தொடங்கினார். சிவபெருமானின் மீது மாளாத பக்திகொண்ட குபேரன், சிவாலயம் தோறும் சென்று அழகிய பெண் வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். நாளடைவில் பல
Read 13 tweets
22 Jan
"முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்ய வேண்டிய தர்மங்களை எண்-நான்கு — அதாவது முப்பத்திரண்டு -– அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள்
என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன? ஒரு கோவுக்கு உடம்பிலே அரிக்கிறது. நமக்கு எங்கே அரித்தாலும் நாம் கையை வளைத்துச் சொறிந்து கொள்கிறோம். கோவோ பின்னங்காலைக் கொண்டுதான் சொறிந்து கொள்வது. அப்போது சில இடங்களில்
அரித்தால் அதற்கு ஸரியாக சொறிந்து கொள்ள வராது. அந்த மாதிரி ஏற்படும்போது அது அரிப்பெடுக்கிற பாகத்தை நேரே வைத்துத் தேய்த்துச் சொறிந்து கொள்வதற்கு வாகாகக் கல்லை நட்டு வைப்பதுதான் ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’. ஆங்காங்கே இந்த மாதிரி நட்டு வைத்தார்கள். அந்த வழியில் போகிற மாடுகள் அவற்றில்
Read 5 tweets
19 Jan
#DrShanta சென்னை மயிலாப்பூரில் (1927) பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் MBBS 1955-ல் MD பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண்
மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் எம்.டி. பட்டம் பெற்ற உடனே பணியில் சேர்ந்தார். கொள்கைப் பிடிப்பும், தொலைநோக்கும், கண்டிப்பும் கொண்ட டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை தனது குருவாகப் பெற்றார். 12 படுக்கைகளுடன் இயங்கி வந்த
அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து உலகத் தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றினார். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 63ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக்கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக
Read 7 tweets
15 Jan
#திருவள்ளுவர்தினம் 13-14ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட மயிலை திருவள்ளுவர் கோவிலில் ஆரம்பம் முதல் வைகாசி-அனுஷ தினத்தன்றுதான் திருவள்ளுவர் அவதாரதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில்தான் திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் அதே தினத்தன்று 18 மே-1935) மாநாட்டை ஏற்பாடு செய்தனர்
மறைமலை அடிகளும் அதே வைகாசி அனுஷ தினத்தைத்தான் தன்னுடைய ஆராய்ச்சி முடிவாக அம்மாநாட்டில் அறிவித்தார். அம்மாநாட்டின் முக்கிய நோக்கமே திருவள்ளுவர் பிறந்த தினத்தை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒரே தினத்தில் கொண்டாட வேண்டும் என்பதும் அத்தினத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்
என்பதும்தான். அம்மாநாட்டில் பங்கு பெற்ற நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும் ஒரே மனதாக வைகாசி அனுஷமே திருவள்ளுவர் அவதார தினம் என்று முடிவு செய்தனர். ஆனால் கருணாநிதி பொய்யாக அந்த மாநாட்டில், அதுவும் பொய்யாக நடக்கவே நடக்காத தேதியில் -1921-ல் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன்
Read 11 tweets
13 Jan
கோவை திமுக ஹோட்டல் நடத்துநரின் வாட்ஸ் ஆப் பதிவின் சுருக்கம். #திருட்டு_திமுக

சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் மலிவு விலை சமூக உணவகத்தை ஆரம்பித்து மற்ற ஹோட்டல்கள் உணவை விட தரமான உணவை அவர்கள் விற்கும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு கொடுக்க ஆரம்பித்தவுடன் பல ஹோட்டல்கள் அதனால்
பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இவரும் அவரை சந்தித்து இது எப்படி முடிகிறது என்று கேட்டபோது அவர் சொன்னது, பெரிய முதலீடு செய்து ஆடம்பரமாக கடையை கட்டவில்லை, குறைந்த முதலீடு அதிக வியாபாரம், இரண்டாவது அனைத்து பொருட்களையும் விவசாயிகளிடமே நேரடியாக வாங்குவதால் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு
கொடுக்கமுடிகிறது என்று கூறியிருக்கிறார்.
சில நாட்களில் அந்த ஏரியா திமுக செயலர் அப்பகுதி அனைத்து ஹோட்டல்காரர்களையும் திரட்டி சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க அழைத்து சென்று விலையை ஏற்ற வேண்டும் என்று அவர்கள் முன்னிலையில் மிரட்டியிருக்கிறார். அசராத சுப்ரமணியம் இன்னும் விலையை
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!