கதை : எல்டோவும் ,எல்சியும் காது கேளாதா, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தம்பதிகள். உடம்புக்கு முடியாத சின்ன மகளை மருத்துவமனையில் இருந்து இரண்டு நாட்கள் கண்விழித்து கவனித்துவிட்டு வீடு திரும்பும் எல்டோ, மெட்ரோ ரயிலில் தூங்கிவிடுகிறார்.
அரபுநாட்டிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் சமீர், சமூக வலைத்தளங்களில் forward மெசேஜ்கள் அனுப்புவதால் தன்னை ஒரு சமூக போராளியாக காட்டிக்கொள்பவர். எல்டோ பயணம் செய்யும் மெட்ரோ ரயிலில் செல்லும் சமீர், எல்டோவினை குடிகாரன் என நினைத்து படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்.
அது கேரளா முழுதும் வைரலாகிறது. அதானால் எல்டோ வேலையை இழக்கிறார், மகனுடன் மனஸ்தாபம் ஏற்படுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது? இதுதான் இந்தப்படத்தின் கதை. கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.
படம் முழுவதும் பல காட்சிகள் உங்களை கண்கலங்கவைக்கும்.
ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளாமல் அதை வெளியிடுவதால்/forward செய்வதால் அச்செய்தியுடன் சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் அது இன்னலுக்கு உள்ளாக்குகிறது என்பதை முகத்தில் அறைவது போல காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
IMDb Rating : 7.4
Available on : Netflix, Telegram
Suraj Venjaramoodu எல்டோவாகவும் Soubin Shahir சமீராகவும் நடிப்பில் கலக்கி இருப்பார்கள். இந்த Duo நடிப்பில் வெளிவந்த இன்னொரு படம்தான் "Android Kunjappan Ver 5.25". இருவரில் யார் ஒருவர் நடித்திருந்தாலும் அந்த படத்தை நம்பி பார்க்கலாம் என்பது போல உள்ளது இவர்களின் கதைத்தேர்வுகள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அறிவியல் வளர்ச்சியும் படிப்பறிவும் உள்ள இந்த காலத்திலே, உலகையே ஆட்டி வைத்து பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்திய 'கொரோனா" வைரஸ் நோய்க்கிருமிக்கு 'கொரோனா தேவி' என்று பெயர் வைத்து, சிலையும் வைத்து கடவுளாக்கி விட்டார்கள்.
ஒவ்வொரு கடவுளரையும் எப்படி உருவாக்கியிப்பார்கள் என்று யோசிக்க முடிகிறது. தன் இஷ்டத்துக்கு ஒரு கடவுளும், அதன் பின்னணியில் ஒரு ovop கதையும் சேர்த்து ஒரு கூட்டத்தையே அடிமுட்டாள் ஆக்கி வேண்டுதல்களும்,பரிகாரமும், விரதமும், பூசையும் என்று சொல்லி எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்.
உலகின் தீயவர்களை அழிக்க தேவிபராசக்தி கோரோனா தேவியாக அவதாரம் எடுத்து வந்தார், உலகை காத்தார் என்று
காதிலேயே செய்வார்கள். தீர்த்தமாக மாட்டு மூத்திரத்தையும், நைவேத்தியமாக மாட்டு சாணியையும் கொடுத்தாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை.
IMDb Rating : 8.4/10
சைபர் கிரைம் குற்றங்களையும், அதை கண்டுபிடிக்கும் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகளையும், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் temporary பணியாட்கள் இருவர் முகம்கொடுக்கும் பிரச்சனைகளையும் பற்றிய படம்தான் இது.
படத்தில் உண்மையில் நடந்த மூன்று சைபர் கிரைம் குற்றங்களையும், அதன் குற்றவாளிகளை கண்டுபிடித்த முறைகளையும் ரொம்ப எளிமையாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். Cyber crime என்றதும் ஆங்கில படங்களில் வரும் high tech, hacking போன்று இல்லாமல் இயல்பான வழிகளில் கண்டுபிடித்திருப்பார்கள்.
அதன் இடையே, நாம் கவலையீனமாக விடும் சிறு தவறுகள் மூலம் நடக்கும் வெவ்வேறு குற்றங்கள் : Data theft, Identity fraud, Cyberextortion, phishing பற்றியும் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
படத்தில் ஒரு காட்சியில்,
"They want what you've got. Don't give it to them."
குடும்ப நாவல்களின் சூப்பர் ஸ்டார் முத்துலட்சுமி ராகவன் இறந்துவிட்டார். எங்க அம்மா அவங்களோட பெரிய ரசிகை. அம்மாக்காக வாரம் 2 புத்தகம் லைப்ரரில எடுத்து கொடுக்கிறது வழக்கம். முத்துலட்சுமி ராகவன் புத்தகங்களுக்கு என்றே தனியா இரண்டு rack ஒதுக்கியிருப்பாங்க.
அவங்க புத்தகம் எல்லாம் தொடர்ச்சியா பெண்களால் வாசிக்கப்படுற புத்தகம். எப்போ போனாலும் அந்த rackல ரெண்டு பேர் புத்தகம் எடுத்திட்டு இருப்பாங்க. 2,3,4,5,6,7,8 பாக நாவல்களை எழுதி இருக்கிறார். ஒவ்வொன்றும் 300 தொடக்கம் 500 பக்கங்கள் வரை இருக்கும்.
'எப்பிடி அம்மா முத்துலட்சுமி ராகவன் இப்பிடி எழுதுறாங்க?' என்று ஒரு தடவை கேட்டபோ 200 ஆவது நாவலை 20 பாகங்களாக எழுதப்போவதாக சொன்னார். இப்போ வரை 164 நாவல்கள் எழுதி இருக்கிறார். இலக்கியவாதிகள் தட்டையான எழுத்து என்று விமர்சித்தவரை ஆதர்சமாக வைத்து பல பெண்கள் எழுத ஆரம்பித்திருந்தார்கள்.
Nudity normalising என்றால் அவுத்து போட்டுட்டு ரோட்ல போறதுன்னு நினைச்சிட்டு இருக்கானுங்க. அது
ஆபாசம், அசிங்கம், அருவருப்பு, கற்பு, புனிதம், மானம், கௌரவம் என்று பெண் உடல் மீது வைத்திருக்கும் கற்பிதங்களை உடைத்தெறிந்து நிர்வாணமும் இயல்பானதுதான், பெண் உடல் உடைமை இல்லை என்பதை பேசுவது.
நிர்வாணம் இயல்பானது என்று இருந்திருந்தால் Drishyam படத்தில் ஜோர்ஜ் குட்டியின் மகள் அஞ்சு, வருண் வீடியோ காட்டி மிரட்டிய போதே 'உன்னால் புடுங்க முடிந்ததை புடிங்கிக்கோ' என்று அதை கடந்து வந்திருப்பாள்.
Drisiyam மற்றும் அதன் இன்ன பிற ரீமேக்குகளும் வந்திருக்காது.
தமிழ் சினிமா இயக்குனர்கள் பலருக்கு கதையே கிடைத்திருக்காது. பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட முதலாவது பெண்ணே கயவர்களை செருப்பைக்கொண்டு அடித்திருப்பாள்.
ஆணின் நிர்வாணத்தைக் காட்டிலும் பெண் நிர்வாணமென்றால் ஏன் இங்கு அதிக பதட்டமாகிறது? பொதுவாக பெண்மீதான உடைமையுணர்வைத்தான் காதல் என்றும் அன்பென்றும் கருதும் சமூகம் இது. உடமையுணர்வு என்பது அவளின் உடலை சொந்தம் கொண்டாடுவதின் வழியே வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
உன் நிர்வாணத்தை நான் மட்டுமே காண வேண்டும் அப்படி எனக்கு மட்டுமே காணத்தருவதின் வழியாகத்தான் உன் காதலை நீ எனக்கு உணர்த்த முடியும் என்பதைத்தான் காதலின் கற்பிதமாகக் கொண்டிருக்கிறார்கள். அதனை அவள் உடைக்கும்போது பதறுகிறான்.
யார் வேண்டுமானாலும் பார்த்துவிடக்கூடிய நிர்வாணத்தில் எனக்கான முக்கியத்துவம் என்ன இருக்கிறது? நிர்வாணம் கவுரவமான ஒன்று அல்லவா அந்த கவுரவத்தை நீ என்னிடம் தருவது எத்தனை உயரியவனாக என்னை எண்ணவைக்கும் தெரியுமா? நீ அதைத் தகர்க்கிறாய்.
சுபாவின் கதையில் வரும் ஏதாவது ஒரு சூழ்நிலைக்கேற்ற புகைப்படத்தை திரு.கே.வி.ஆனந்த் எடுத்துத் தர, அட்டைப்படங்களாக வெளியிடுவது ‘சூப்பர் நாவல்’ இதழின் வாடிக்கை. இந்த அட்டைப்படமும் அப்படி ஒரே க்ளிக்கில் தயாரானதுதான். #RIPKVAnand
போட்டோஷாப் இல்லாத காலத்தில் எப்படி இதைச் சாதித்தார்கள்? இரண்டு டேபிள்கள் அடுத்தடுத்து போடப்பட்டன. அதில் கடற்கரை மணலை நிறையக் கொட்டியாயிற்று. இரு டேபிளுக்கும் இடையில் பாலகிருஷ்ணன் (சுபா) அமர்ந்து கையை மட்டும் டேபிளுக்கு மேலே நீட்ட, கையைச் சுற்றிலும் மணல் பரப்பியாயிற்று.
பின்னணியில் தொங்கவிடப் பட்டிருந்தது இறுகக் கட்டிய கறுப்பு நிறத் துணி ஒன்று. அதில் மின்னலின் ப்ளாஷை வரைந்து வைத்திருந்தார் ஆனந்த். இப்படிச் செய்த செட்டப்பை க்ளோஸப்பில் வைத்து, ப்ளாஷுடன் படம் எடுக்க, அட்டகாசமாக ஒரு புகைப்படம் தயார்.