சுபாவின் கதையில் வரும் ஏதாவது ஒரு சூழ்நிலைக்கேற்ற புகைப்படத்தை திரு.கே.வி.ஆனந்த் எடுத்துத் தர, அட்டைப்படங்களாக வெளியிடுவது ‘சூப்பர் நாவல்’ இதழின் வாடிக்கை. இந்த அட்டைப்படமும் அப்படி ஒரே க்ளிக்கில் தயாரானதுதான். #RIPKVAnand
போட்டோஷாப் இல்லாத காலத்தில் எப்படி இதைச் சாதித்தார்கள்? இரண்டு டேபிள்கள் அடுத்தடுத்து போடப்பட்டன. அதில் கடற்கரை மணலை நிறையக் கொட்டியாயிற்று. இரு டேபிளுக்கும் இடையில் பாலகிருஷ்ணன் (சுபா) அமர்ந்து கையை மட்டும் டேபிளுக்கு மேலே நீட்ட, கையைச் சுற்றிலும் மணல் பரப்பியாயிற்று.
பின்னணியில் தொங்கவிடப் பட்டிருந்தது இறுகக் கட்டிய கறுப்பு நிறத் துணி ஒன்று. அதில் மின்னலின் ப்ளாஷை வரைந்து வைத்திருந்தார் ஆனந்த். இப்படிச் செய்த செட்டப்பை க்ளோஸப்பில் வைத்து, ப்ளாஷுடன் படம் எடுக்க, அட்டகாசமாக ஒரு புகைப்படம் தயார்.
நாவலின் லோகோவும், ஆசிரியர் பெயரும் சேர்க்கப்பட்டு அழகாக வாசகர் கரங்களைச் சென்றடைந்தது.
நினைவுப்பகிர்வு : கணேஷ் பாலா.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Nudity normalising என்றால் அவுத்து போட்டுட்டு ரோட்ல போறதுன்னு நினைச்சிட்டு இருக்கானுங்க. அது
ஆபாசம், அசிங்கம், அருவருப்பு, கற்பு, புனிதம், மானம், கௌரவம் என்று பெண் உடல் மீது வைத்திருக்கும் கற்பிதங்களை உடைத்தெறிந்து நிர்வாணமும் இயல்பானதுதான், பெண் உடல் உடைமை இல்லை என்பதை பேசுவது.
நிர்வாணம் இயல்பானது என்று இருந்திருந்தால் Drishyam படத்தில் ஜோர்ஜ் குட்டியின் மகள் அஞ்சு, வருண் வீடியோ காட்டி மிரட்டிய போதே 'உன்னால் புடுங்க முடிந்ததை புடிங்கிக்கோ' என்று அதை கடந்து வந்திருப்பாள்.
Drisiyam மற்றும் அதன் இன்ன பிற ரீமேக்குகளும் வந்திருக்காது.
தமிழ் சினிமா இயக்குனர்கள் பலருக்கு கதையே கிடைத்திருக்காது. பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட முதலாவது பெண்ணே கயவர்களை செருப்பைக்கொண்டு அடித்திருப்பாள்.
ஆணின் நிர்வாணத்தைக் காட்டிலும் பெண் நிர்வாணமென்றால் ஏன் இங்கு அதிக பதட்டமாகிறது? பொதுவாக பெண்மீதான உடைமையுணர்வைத்தான் காதல் என்றும் அன்பென்றும் கருதும் சமூகம் இது. உடமையுணர்வு என்பது அவளின் உடலை சொந்தம் கொண்டாடுவதின் வழியே வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
உன் நிர்வாணத்தை நான் மட்டுமே காண வேண்டும் அப்படி எனக்கு மட்டுமே காணத்தருவதின் வழியாகத்தான் உன் காதலை நீ எனக்கு உணர்த்த முடியும் என்பதைத்தான் காதலின் கற்பிதமாகக் கொண்டிருக்கிறார்கள். அதனை அவள் உடைக்கும்போது பதறுகிறான்.
யார் வேண்டுமானாலும் பார்த்துவிடக்கூடிய நிர்வாணத்தில் எனக்கான முக்கியத்துவம் என்ன இருக்கிறது? நிர்வாணம் கவுரவமான ஒன்று அல்லவா அந்த கவுரவத்தை நீ என்னிடம் தருவது எத்தனை உயரியவனாக என்னை எண்ணவைக்கும் தெரியுமா? நீ அதைத் தகர்க்கிறாய்.
Alternate history/Althist என்று ஒரு கதை சொல்லல் முறை உள்ளது. வரலாற்று சம்பவங்களை வைத்து கதை சொல்லும்பொழுது, எற்கனவே நடந்த வரலாற்றுடன் ஒரு முக்கிய கட்டத்தில் 'இவ்வாறு நடந்திருந்தால்' வரலாறு எப்படி மாற்றம் அடைந்திருக்கும் என்ற அனுமானத்துடன் கதை சொல்வதாகும்.
வரலாற்றில் நாஜிக்களினால் யூதர்கள் சித்திரவதைகள் அனுபவித்து கொல்லப்பட்டதை பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் Quentin Tarantino இயக்கிய
Inglourious Basterds (2009) படத்தில் ஒரு யூத பெண்ணும், அமெரிக்க யூத படைவீரர்களும் நாஜித்தலைவர்களை பழிவாங்குவது போல காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
QT இன் 'Django Unchained (2012)' படத்தில் வரலாற்றில் வெள்ளையர்களால் அடிமையாக்கப்பட்ட கறுப்பர்களின்
பழிவாங்குதல்தான் கதை. தமிழ் சினிமாவில் கபாலி, காலா, அசுரன், கர்ணன் திரைப்படங்களை இதே வகையில்தான் பார்க்கிறேன்.
இருள் சூழ்ந்த நேரத்தில் தெருவில் இருக்கும் நியான் விளக்கு மஞ்சள் வெளிச்சத்தை பரப்பிக்கொண்டிருக்கிறது. பரபரப்பான அந்த மாடி வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்கிறது. மிகவும் பவ்யத்துடன் ஒருவர் வந்து கதவை திறந்து உள்ளிருந்தவரை அழைத்து செல்கிறார்.
அது ஒரு விபச்சார விடுதி. காரில் இருந்து இறங்கி சென்றவருக்கு மரியாதை தடபுடலாக இருக்கிறது. பெரிய சோபா ஒன்றில் அனந்த சயன நிலையில் படுத்திருக்கிறான். இரு புறமும் அடியாட்கள் நிற்கின்றனர். அவன் முன் நிற்கும் ஐந்து அழகிகளையும் வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறான்.
இன்று கூடிக்களிக்க ஒருத்தியை தேர்ந்தெடுக்க வேண்டும். பார்வையை தாழ்த்திக்கொள்கிறான். அடியாட்களில் ஒருவன் எல்லோரையும் போக சொல்கிறான். விடுதியின் மனேஜர் போல இருப்பவர், "வழக்கமா இல்லாம, புது பீஸ் வந்திருக்கு. காட்டவா?" என்று கேட்கிறார். அடியாளும் சீக்கிரம் வர சொல்கிறான்.
@imkayalsai சொன்ன, "நெஞ்சம் மறப்பதில்லை" பற்றிய சொல்லாத கதைகள்.
Part 2.
படைத்தளபதியின் மகனாக பிறக்கும் பரமேசு எகிப்தின் பத்தொன்பதாவது அரச மரபை தோற்றுவிக்கிறான். அரச பரம்பரையை சேராத பரமேசு, ராம்சே என்னும் பெயரில் எகிப்தை ஆள்கிறான். நாட்டை சுற்றி வரும் ராம்சேக்கு எகிப்தியர்களை விட இஸ்ரேலியர்கள் "பணம், அறிவு, பலம்" இல் உயர்ந்து இருப்பதை காண்கிறார்.
இதனால் எகிப்தியர்களுக்கு ஆபத்து நிகழலாம் என்று நினைத்து இஸ்ரேலியர்களை அடிமையாக்குகிறார். காலம் உருண்டோடுகிறது. மன்னனின் சோதிடர்களில் ஒருவன், குறிப்பிட்ட ஒரு நாளில் இஸ்ரேலியர்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க ஒருவன் பிறப்பான், அவனால் மன்னன் உயிருக்கு ஆபத்து என எதிர்வு கூறுவான்.
மரியம் : இயேசுவின் அவதாரம்.
ராம்சே : சாத்தான்
கண்ணாடி தாத்தா : ஏஞ்சல்.
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையேயான போராட்டமே நெஞ்சம் மறப்'பதில்'லை திரைப்படம். Title இல் 'பதில்' மட்டும் வேறு நிறத்தில் ஏன்? படத்தில் Title வரும் இடம்.
ஆரம்பத்துல S. J சூர்யா, நந்திதா பெயர்லாம் red lightingல காட்டி இருப்பாங்க. இதுல S. J சூர்யா character சாத்தான் என்றும் நந்திதா, வேலைக்காரர்கள் characters எல்லோரும் சாத்தானின் பிடியில் இருப்பவர்கள் என்றும் எடுத்துப்போம்.
அடுத்து ரெஜினா பெயர் ஜீசஸ் உடனும் மற்றவர்கள் பெயர் ஜீசசை ஆதரிப்பவர்கள் உடனும் வருகிறது. இது தான் மரியம், ஜீசஸ் என்பதுக்கு முதல் குறியீடு.
அடுத்து இயேசுவினை வழிபடுபவர்கள் இயேசுவின் பக்கமும், சாத்தானின் பக்கமும் இருக்கலாம்.