பூணூல் அறுப்பு, குடுமி கத்தரிப்பு பற்றி "அந்தக்கால" கம்யூனிஸ்ட் ஜீவானந்தம்:
"ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் ஈவேரா நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்...
இனி பெரியாரின் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா, 'காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும்' என்றும் அப்பால் 'இந்து மதம் ஒழிய வேண்டும்' என்றும்,
அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும்' என்றும் சொல்லிக் கொண்டே போனார்!
விரும்பினால் பி.ராமமூர்த்தியை ஆதரிப்பார்: ராஜாஜியை ஆதரிப்பார்: மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் 'அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன்' என்று ஆவேசம் காட்டுவார்.
நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார்: அதற்காகக் காரணம் சொன்னார். இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்.
அவர் காட்டிய வழியால் தமிழ் நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப் பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல: மாறாகப் பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.
காவேரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்கு நேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள்- குளித்துக் கொண்டு இருந்தார்கள் தங்கள் வழக்கப்படி குளித்து, பூசை செய்து கொண்டிருந்தார்கள்.
சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கிக் காவிரி ஆற்றில் எறிந்தார்கள்: அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்: அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள். ஓட ஓடத் துரத்தினார்கள். பெரியாரைப் பின்பற்றுகிற திக வினர் எடுத்த 'ஜாதி ஒழிப்பு' நடவடிக்கை இது!
சொம்பைத் தூக்கிக் காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா? காவிரி வெள்ளம் ஒரு தனி மனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபோதே ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா?
நாலைந்து ஆட்களுடைய உச்சிக் குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம்?
குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதி முறையைக் கல்லால் அடித்ததாகுமா?
ஓட்டல்களில் உள்ள டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கினால் சாதி முறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா?
பூணூலையும் உச்சிக் குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதும் உள்ள பூணூல்களையும், உச்சிக் குடுமிகளையும் உடையவர்களை எல்லாம் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா?
எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக் குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால்...- என்று வைத்துக் கொள்ளுவோம்: சிலரிலிருந்து பலராக விரியும்.
உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும்!(சிரிப்பு). குறிப்பிட்ட ஜாதியைத் தனிமைப்படுத்தி அநாகரிகமான முறையில் கண்மூடித் தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதும் பரவி நிற்கும் ஜாதி முறையை ஒழித்துவிட முடியாது."
1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் ப ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் பகுதிகள்) -
("மேடையில் ஜீவா" நூல் - ஆதாரம் ஈ வே ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் by ம வெங்கடேசன்)
Remember இது 1957 ல் "அந்தக்காலத்து" கம்யூனிஸ்ட் ப ஜீவானந்தம் அவர்கள் பேசியது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக செய்த ஊழல்கள் தில்லுமுல்லுகளை எல்லாம் நாம் புட்டுப்புட்டு வைக்கும் போது இந்த உ.பி.க்கள் பெரிய அறிவாளிகள் மாதிரி, 'இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா? நிரூபிக்கப்பட்டிருக்கா?' எனக் கேட்பார்கள்.. சொந்த மகனுக்குப் பதவி & சீட் கொடுப்பதைக் கூட பொதுக்குழு,
செயற்குழுன்னு, "நாதாரித்தனத்தையும் நாசூக்காக" செய்யும் கும்பல் அது.. குடும்ப அரசியல்னு நாம பேசிரக் கூடாதாம்.. அப்படிப்பட்டவர்கள், திருட்டு வேலையை மட்டும் எளிதாக மாட்டும்படியா செய்வார்கள்? இதோ சமீபத்திய நாதாரித்தனம் ஒன்று கீழே..
2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.. அந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஓட்டுக்குக் கொடுக்க வைத்திருந்த பல கோடி பணம் துரைமுருகனுக்குச் சொந்தமான இடத்தில் சிக்கியது..
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.
‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.
‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது.
தலையசைத்து விட்டு பறந்தது பறவை.
பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.
‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்', என்றார் சாது.
குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.
மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).
ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.
வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் சக்கிலியன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான். சக்கிலியன் ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான்.
அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார்.
சக்கிலியன் எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால்
அவர்களுடைய ஆசியால் புத்திரன் உண்டாகும் என்றார்.
தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான்.
இது யாருக்காக உருவான பழமொழி என்று தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரை #மோடிக்காக உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.
Demonitisation, GST என்று ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிக்கப்பட்டு இருந்தும் அதையே அசால்ட்டாக கடந்து வந்தவருக்கு....
இந்த விவசாய போராட்டங்கள் பெரிய
விஷயம் அல்ல.
பஞ்சாப் ஹரியானா என்கிற இரண்டு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டத்தினால் நாடு முழுவதும் புரட்சி உண்டாகி விடும் என்று மோடி எதிர்ப்பாளர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.
பாரத் பந்த் என்று எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு நாடு முழுவதும் நடத்திய போராட்டத்தினால் ஒன்றும் புரட்சி உருவாகவில்லை.
அடுத்து டெல்லி பார்டரில் விவசாயிகள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தை முடித்து வைக்க மத்திய அரசு இறங்கி வரும் என்று நினைத்தார்கள். ஆனால்
அதுவும் நடைபெறவில்லை.