நான் அடிப்படையில் ஒரு திமுக ஆதரவாளனாக தான் இருந்தேன். ஆனால், 2009ல் தீவிரமாக திமுக-காங்கிரஸ் எதிர்ப்பாளனாக அன்றைய உணர்ச்சி மேலிட்ட நிலை மாற்றியது. இத்தனைக்கும் 2009ல் கம்யுனிஸ்ட்டுகள் ஆதரவுடன் நடந்த காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக தான் இருந்தது. 2011 ல் ஈழத்தாய் ஜெயித்தது எல்லோருக்கும்
தெரியும். ஈழத்தமிழர்களுக்கு அவர் ஒன்றும் புடுங்கியதில்லை, புடுங்கப்போவதில்லை என்றெல்லாம் என் அறிவுக்கு எட்டாமலில்லை.
நிற்க!
அப்படியே 2014 தேர்தலுக்கு வருவோம். நான் அப்போதும் திமுக ஆதரவாளனாக மாறிவிடவில்லை. ஆனால், மோடி என்பவன் ஒரு மனித குல விரோதி, மத வெறியன்,
பச்சை பாஸிஸ்ட் என்ற அடிப்படை அரசியல் அறிவு இருந்தது. மிக கடுமையாக மோடியை எதிர்த்தேன். லண்டனில் தனியொரு திராவிடனாய் வடவர்களுக்கு மத்தியில் மோடி எதிர்ப்பாளனாய் இருந்தேன். மோடி ஜெயித்த இரவு என்னால் தூங்க முடியவில்லை. ஒரு மூத்த எழுத்தாளரின் inbox ல் புலம்பி தள்ளினேன்.
என்னை அவர் தேற்றினார்.
இன்று என்னால் தெளிவாக சொல்ல முடியும். நான் சரியான திசையில் தான் இருந்திருக்கிறேன். எனக்கிருந்த அரசியல் புரிதலோ, அறமோ பலரிடம் இல்லாததை கவனிக்கிறேன். காலம் கடந்து புலம்புவதை காண்கிறேன்.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசிய அதே சீமானின் நாறவாய் தான்
மோடியின் குஜராத்தையும் சிலாகித்து பேசியது. மும்பையில் ஆர்எஸ்எஸ் கட்சிக்கு ஆதரவு தந்தது.
2014 க்கு பிறகு மதசார்ப்பின்மை தான் கொள்கை என தெளிவான பாதைக்கு வந்துவிட்டேன். 2016ல் ஐந்து வருட காட்டாட்சிக்கு பிறகு ஜெயலலிதாவால் ஜெயிக்க முடிகிறது என்றால், தமிழ்நாட்டின் திராவிட அடித்தளத்தை
ஆர்எஸ்எஸ் அசைத்துப்பார்க்கிறது என்று புரிந்தது. இனி, பெரியாரின் தடியுடன் திமுகவை தூக்கிப்பிடிப்பது தான் சரி என்ற தெளிவு வந்துவிட்டது.
நிலையான ஒரு மத்திய ஆட்சிக்காக 1999ல் வாஜ்பாயின் பாஜகவை ஆதரித்த கலைஞரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கழுவில் ஏற்றுவார்கள். 2004ல் இருந்து
இன்றுவரை 14 ஆண்டுகள் பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவை வசதியாக மறந்துவிடுவார்கள். இந்த 14 வருட கூட்டணி தான்
இன்று தமிழ்நாட்டையே கூட்டிக்கொடுக்கும் நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கும்!
இன்றும் திமுகவை நொட்டை சொல்லும் யாருக்கும், அடிப்படை அரசியல் அறிவும், அறமும் இருக்குமானால்
சிந்தியுங்கள்.இல்லைங்க,திமுகனா அடிப்போம்.எங்களுக்கான புரட்சிக்கட்சி இன்னும் பிறக்கவில்லை.நாங்க ஸ்டரைட்டா ஆட்சியை புடிச்சி தமிழ்நாட்டை தலை கீழாக மாற்றப்போகிறோம்.அதுவரை காத்திருக்கிறோம் என்றால் மனமார்ந்த வாழ்த்துகள்!
ராகுல் காந்தியை பப்பு என ட்ரோல் பண்ணி மோடி மஸ்தானை பிரமாண்டமாக காட்டி ஆட்சி பிடிக்க வைத்து.. நம்மை வதம் செய்த அதே பார்முலாவை தமிழ்நாட்டில் காவிகள் ஸ்டாலினுக்கு செய்கிறார்கள். நாமும் அந்த விஷம பிரச்சாரத்துக்கு பழியாகிறோம். நமக்குள் எதிரியை உருவாக்கிவிட்டு..
அவர்கள் வந்து நம் மேல் உட்கார வழி செய்கிறார்கள்.
திமுக என்பது ஊழல் கட்சி என்று 2ஜி வழக்கில் வெற்றி பெற்ற பின்னும் மக்களை பேச வைப்பது என்பது காவிகளின் உளவியல் யுத்தத்தின் வெற்றி.
காலம் காலமாக தங்களை எதிர்த்தவர்கள் மீது ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துவிட்டு..நாம் அந்த பிம்பத்தை
போக்க போராடிக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் தங்கள் வேலைகளை செவ்வனே செய்து முடிக்கிறார்கள். இந்த நுண்ணரசியலை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர்களாக தான் நம் மக்கள் அறிகிறார்கள். இதுக்கு திக சரியான பிரச்சாரம் செய்யவில்லை என்று
மிசா காலத்தில் அப்பாவை சிறையில் சென்று அடைத்தார்கள்.., ஒரு வருடம் சிறையில் இருந்தார் என் அப்பா.. நானும் என் தம்பியும் பள்ளி படிக்கும் குழந்தைகள். ஸ்டாலின் உட்பட எல்லோருமே சிறையில் இருந்தார்கள்.. சிறையில் அடித்து துன்புறுத்தல் என்ற செய்தி தான் எங்களுக்கு கிடைத்தது..
யார் எந்த சிறை என்று யாருக்கும் தெரியாது..
என்னுடைய தாய் இரண்டு குழந்தைகளோடு மதுரை கலக்டர் ஆபிஸ் வாசலில் நின்று செய்வது அறியாது திகைத்து நின்றார்.. எங்களோடு ஏகப்பட்ட திமுக குடும்பங்கள் கலக்டர் வாசலில் நின்று அழுதுகொண்டு இருந்தார்கள்..
ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறையில் இருந்த திமுக குடும்பங்கள் மளிகை சாமான் வாங்க முடியாமல் கஷ்டப்படும் செய்தி அறிந்து சென்னையில் இருந்து மளிகை சாமான்களோடு ஒவ்வொரு திமுக குடும்பத்திற்கும் சென்று மளிகை சாமான்கள் கொடுத்து ஆறுதல் கூறிவிட்டு வந்த ஒப்பற்ற தலைவர் எங்கள் தலைவர் கலைஞர்..
உலக பிராமணர்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பு, பாஜக ஆதரவு எடுத்திருக்கிறது என்ற ஒரு செய்தியைப் பகிர்ந்து இருந்தேன். கூடவே பெரியாரின் ஒரு வாசகத்தையும் சொல்லியிருந்தேன். சில நண்பர்கள் எனக்கு இன்பாக்ஸில் வந்து, தாங்கள் பிறப்பால் பார்ப்பனர்கள். ஆனால், பல காலமாக திமுகவை
ஆதரிப்பவர்கள் என்றார்கள். திமுக ஆதரவில் இருக்கும் பல பார்ப்பனர்களை நான் அறிவேன். அவர்களில் பலர் என் நட்பு பட்டியலில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை பார்ப்பனர்கள் என்று எங்கேயும் குறிப்பிட்டு கொள்ள மாட்டார்கள். நாங்களும் திராவிடர்கள் என்று சொல்பவர்கள் உண்டு.
திராவிடம் பிறப்பால் மனிதர்களை பிரிப்பதில்லை. பிறப்பால் மனிதர்களை பிரிப்பது சாதிய அமைப்பு (அ) பார்ப்பனியம் (அ) வர்ணாசிரம தர்மம் அல்லது இந்துத்துவம். எல்லோரும் சமம் என்று சொல்வது திராவிடம். பார்ப்பனிய எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பே தவிர மனிதர்களை எதிர்ப்பது அல்ல.
இந்துத்துவ அரசியல் என்றால் தமிழர் பார்வையில் என்ன?
தமிழர் நலன், தமிழர் பண்பாடு, தமிழர் மெய்யியல், தமிழ் மொழி ஆகியவற்றை அழித்து ஹிந்து, ஹிந்து பண்பாடு, ஹிந்து மதம், சமஸ்கிருதம் என மாற்றுவது. சிறுபான்மையினர் மதங்கள், பிற்படுத்தப்பட்ட பட்டியிலின
மக்களுக்கு எதிரான உயர் சாதி ஆதிக்க அரசியல் செய்வது.
இந்துத்துவம் தனது நேரடி எதிரியாக யாரைப் பார்க்கிறது? ஏன்?
இந்துத்துவம் தனது நேரடி எதிரியாக திராவிட கொள்கையை பேசும் கட்சிகளையும்,தமிழர் உரிமை பேசும் கட்சிகளையும், பொதுவுடமை பேசும் கட்சிகளையும் பார்க்கிறது. அதாவது, திமுக, விசிக,
கம்யுனிஸ்ட் கட்சிகளை நேரடி எதிரியாக பார்க்கிறது. அதில் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வாய்ப்புள்ள திமுகவை தனது முதல் எதிரியாக பார்க்கிறது.
ஒருவேளை, தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமையாவிட்டால் என்ன நடக்கும்?
தமிழ்நாட்டு அரசாங்கத்தை பாஜக தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
தாம் வாக்கு பிரிக்கவே களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறோம் என்பதும், தம்மால் ஜெயிக்க முடியாது, பல இடங்களில் டெப்பாசிட் கூட கிடைக்காது என்பதும் கமலுக்கும், சீமானுக்கும் இன்னும் பிற B team களுக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனால், அவர்களை நம்பிச் செல்லும் அப்பாவி தொண்டர்களுக்கு அது
இப்போது தெரியாது.
மூன்றாம் அணியினருக்கு, தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை தொடர்ச்சியாக தேர்தல்கள் காட்டி வந்திருக்கிறது.
உண்மையை சொன்னால்,இங்கே இன்னும் ஒரு மூன்றாம் அணி உருவாகவேயில்லை.
மூன்றாம் அணி என்பதை “ஆளும் அதிகாரம்” உருவாக்கி, எதிர்கட்சியின் வாக்குகளை பிரிப்பதற்காக தான்
பயன்படுத்தப்படுகிறது.
2016 முடிவுகளுக்கு பின், மூன்றாம் அணி அமைத்தவர்கள் பலர், தவறு செய்துவிட்டோம் என புலம்பியதை கண்கூட பார்த்தோம்.
இருப்பினும், அரசியலில் வியாபாரத்தை தவிர்க்க முடியாது. அதனால், இதையெல்லாம் பார்த்துத்தான் ஆக வேண்டும்.
கழக ஆட்சி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல், ஒரு இனத்தின் ஆட்சியாக அமையும்.
தனிப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் கொள்கையாக மட்டுமில்லாமல், இந்த மனித சமுதாயத்தின் உயர்ந்த லட்சியங்களை அடையக்கூடிய ஆட்சியாக அமையும்.
நாம் கொள்கைக்கு சொந்தக்காரர்கள். அந்த கொள்கையை செயல்படுத்தக்கூடிய கடமை நமக்கு தான் இருக்கிறது. அந்த கடமையை நாம் தான் செய்தாக வேண்டும். நம்மை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தந்தை பெரியாரின் கனவுகளை, அறிஞர் அண்ணாவின் கனவுகளை, முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுகளை செயல்படுத்தும் கடமை
எனக்கு இருக்கிறது. நம்மால் முடியும். நம்மால் மட்டும் தான் முடியும்.
வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சியுற வைப்போம். இன்னும் இரண்டே மாதங்கள் தான் இருக்கின்றன. பறந்து விரிந்த இந்த தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமையப்போகிறது.