— Read Full Thread —அரவக்குறிச்சி பயணம் முடித்து உற்சாகமாக வந்திறங்கிய கழுகாரிடம் தகிக்கும் வெயிலுக்கு இதமாக இளநீர் பாயாசத்தை நீட்டினோம்.
அதை வாங்கி மேசையின் ஓரத்தில் வைத்த கழுகார், அரவக்குறிச்சியா? கோவையா? என்ற கேள்வியை நம்மிடம் கேட்க, அரவக்குறிச்சி என்றோம்.
அண்ணாமலையின்(1/14)
அத்தனை வெறுப்பை
தூண்டும் பேச்சுகளையும் அமைதியாகவே எதிர்க்கொண்ட இஸ்லாமியர்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர். தன் முயற்சிகள் தோல்வி அடைந்ததை உணர்ந்த அண்ணாமலையும் சோர்ந்துவிட்டார்.
தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள் தனித்தனியாகவும், கட்சிப் பிரமுகர்களை முன்னிறுத்தியும் பணம் கறக்க(2/4)
முயற்சிப்பதையும் தாங்க முடியாமல் தவிக்கிறார்.60கோடி இறக்குவதற்கு அண்ணாமலை தயார் என்ற வதந்தி கொடிக்கட்டிப் பறப்பதாலும், தேர்தல் நாளுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதாலும், முடிந்தளவு மிச்சம் பிடிக்க அண்ணாமலைக்கும், மொத்தமாக கறந்துவிட அதிமுகவினருமக்கும் நடக்கும் கயிறு இழுக்கும்(3/14)
போட்டியால் திமுக சத்தமே இல்லாமல் வெற்றிக் கோட்டை நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
கோவை ஸ்பெசல் என்ன கழுகாரே என்றோம்
இளநீரை குடித்துவிட்டு தொண்டையை செருமிக்கொண்டபடியே ஆரம்பித்தார் கழுகார்...
ஒரே நாளில் காலையும் மாலையுமாக வந்த அரசியல் தலைவர்கள் வருகையால் கோவை நாள்(4/14)
முழுவதுமே பரபரப்பாகவே இருந்தது.பாஜக வானதிக்காக காலை கோவை வந்திறங்கிய யோகியை வரவேற்க சுமார் 1000மோட்டார் சைக்கிளுடன் பாஜகவினர் குவிய கேவை விமான நிலையம் திணறியது.
அங்கிருந்து ஆரவாரமாக கிளம்பிய பேரணியில் கலந்துக்கொண்டிருந்த வடஇந்தியர்கள் வீதியில் இந்தியில் கோஷம் போட்டுக் கொண்ட(5/14)
வந்ததை வித்தியாசமாக வேடிக்கை பார்த்தனர் கோவை மக்கள்.
ஆரம்பம் முதலே இந்த வருகையால் என்னாகுமோ என்ற பயத்துடனே இருந்த வியாபாரிகளிடம் கடையை அடைக்கச் சொல்லி பாஜகவினர் சொல்ல, என்ன ஏதென்றே புரியாமல் பலர் கடைகளை அடைக்க தொடங்கினர்.
கோவை தெற்குப் பகுதிக்குள்ளடங்கிய டவுன் ஹால்,(6/14)
ராஜ வீதி பகுதிக்குள் ஊர்வலம் நுழைந்ததும் அங்கிருந்த கடைகளையும் அடைக்க சொல்லி பாஜகவினர் வற்புறுத்த ஏன் எதற்கு என்று கேள்வி கேட்ட கடைக்காரர்கள் சிலர் தாக்கப்பட்டனர். இந்த கோபம் மொத்தமும் அருகே இருந்த ஒரு செருப்பு கடை மீது திருப்பிவிடப்பட கல்வீச்சால் அப்பகுதியில் கலவர சூழ்நிலை(7/14)
உருவானது.
அடிவாங்கிய கடைக்காரர்களும் இஸ்லாமியர்களும் வழக்கத்துக்கு மாறாக அமைதியாகவே வேடிக்கைப் பார்க்க அதற்குள் காவ்துறையினர் உள்ளிறங்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நடந்த நிகழ்வுகள் அதுவரை உற்சாகமாகயிருந்த வானதியை முற்றிலுமாக செயலிழக்க செய்துவிட்டது. அதே சமயம்(8/14)
காங்கிரஸ் ஜெயகுமாரின் செலக்டிவ் பிரச்சாரத்தால் சோர்ந்துப் போயிருந்த திமுகவினர் உற்சாகமடைந்தனர்.
அவர்களை மேலும் உற்சாகப்படுத்தவோ என்னவோ மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்துக்காக கோவை விமான நிலையம் வந்திறங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேராக ஆர்எஸ்.புரம் போய் இறங்கிவிட்டார்.
(9/14)
இரவு 10மணியை நெருங்கிவிட்ட நிலையில் தனக்காக காத்திருந்த தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேயசிவசேனாபதியுடன் அப்பகுதியில் நடக்க துவங்கிவிட்டார்.செய்தி தெரிந்த லோக்கல் கட்சியினரும் மக்களும் வேடிக்கை பார்க்க கூடிவிட்டனர்.வழக்கம் போல தன்னை நோக்கி வந்த பொதுமக்களுடன் புகைப்படம்(10/14)
எடுக்கவும்,கைகுலுக்கவும் ஸ்டாலின் உற்சாகமாக நடக்க,சில நிமிட நேர பரபரப்புக்கு பிறகு வண்டி ஏறிவிட்டார்.தன்னுடைய பயணப்பட்டியலில் இல்லாத இடத்துக்கு இரவு நேரம் மு.க.ஸ்டாலின் வந்ததும் யோகியின் வருகையையொட்டி காலையில் நடந்த கலவரமும் கோவை மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் இருப்பதாக(11/14)
திமுகவினர் மத்தியில் பேச்சிருக்கிறது.
தேர்தல் நாள் தேய்பிறையில் வருவதால் எஸ்.பி.வேலுமணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று கேரள ஜோதிடர் ஒருவர் சொல்லிவிட்டதாக பரவிய தகவலால் ஏற்கனவே தன் தொகுதியை விட்டே வெளியில் செல்வதை முடிந்தளவு தவிர்க்கும் வேலுமணி நேற்று நடந்த இரு (12/14)
நிகழ்வுகளாலும் தூக்கத்தை தொலைத்திருக்கிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெறயிருக்கும் உதயநிதியின் தொண்டாமுத்தூர் வருகை என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற கவலை அதிமுகவினரை சூழ்ந்துள்ளது.
முதல்வர், துணை முதல்வர் தொகுதி களநிலவரம் எப்படி என்ற கேள்வியை கழுகாரை நோக்கி வீசினோம்.
(13/14)
இது தான் கோவை ஸ்பெசல் என்று நீங்களே சொல்லிவிட்டீர்களே என்று சிரித்தபடி சொன்ன கழுகார், சனிக்கிழமை வருகிறேன் என்று விருட்டென பறந்துவிட்டார் (14/14)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ன தெரியுமா? என்று கேட்டபடியே வந்து அமர்ந்தார் கழுகார். தெரியவில்லையே என தோல் சீவிய வெள்ளரி சாலட்டை நீட்டினோம். அதிமுக சார்பில் வாக்குக்கு 2000 ரூபாய் வெள்ளிக்கிழமை வந்துவிடும் என ஏற்கனவே கூறியிருந்தார்கள். சென்ற தேர்தலின் அனுபவங்கள் அடிப்படையில்(1/6)
அதிமுக அனுதாபிகளும் இதை பெரிதும் நம்பியிருந்தனர். சிலர் அட்வான்ஸ் புக்கிங்காக, எங்கள் வீட்டில் நாலு ஓட்டு. 8000 வரும். பணம் வந்த உடன் கடனை அடைத்து விடுகிறேன் என இதை நம்பி கடன் வேறு வாங்கியிருந்தனராம்.
பல ஊர்களில் நேற்று இரவு கரண்ட் கட் ஆனதும் மிகவும் ஆசையுடன் வாசலில் (2/6)
காத்திருந்திருக்கின்றனர். ஆனால் நடந்ததோ வேறு ஒரு வீட்டுக்கு வெறும் 500 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஐடி ரெய்டு, போலிஸ் கெடுபிடி, இப்போதைக்கு இதை வச்சுக்கோங்க என்று. முக்கியமாக விருதுநகர் மாவட்டத்தில் நாய்க்கு பெயர் போன தொகுதியில் பணம் கொடுக்க (3/6)
தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் இன்று காலை ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் மத்திய வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று பாஜக நம்பிய (1/7)
நிலையில் திமுக நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. திருச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ரெய்டு நடத்தும்படி அழைப்பு விடுக்க, திமுக வேட்பாளர்கள் அனைவரும் பிரதமர் தங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும், அது தாங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் (2/7)
வெற்றிபபெற உதவும் என்றும் டூவிட்டரில் பதிவிட, இது பாஜகவை திகைக்க செய்திருக்கிறது.
இதுவரை தாங்கள் நடத்திய ரெய்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு பணிவதையே பார்த்து பழகியவர்கள் இம்முறை இந்த வித்தியாசமான அழைப்பை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.
அமித்ஷா வருகிறார் என்று மொத்த நெல்லையையும் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு வியாபாரம் நடந்தால் தான் வீட்டில் அடுப்பெரியும் என்று பிழைப்பு நடத்துகிற பெட்டிக்கடைகள், கரும்புச்சாறு விற்கும் கடைகள் முதற்கொண்டு சாலையோரக் கடைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. வண்ணாரப்பேட்டையில்
உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைக் கடந்த போது தான், அமித்ஷா அங்கு இறங்குவதற்கு ஹெலிபேட் அமைத்திருப்பது தெரிந்தது. அந்தக் கல்லூரியில் வேலை பார்ப்பவர்களையே சோதனை என்கிற பெயரில் உள்ளே அனுமதிப்பதற்குப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒருவகையில் கடைகளை அடைப்பது நல்லது தான்.
இரண்டு நாட்கள் முன்பு
கோவையில் நடந்தது போல இங்கேயும் "எய்ம்ஸை" தூக்கி கடைகளில் எறியும் சம்பவமோ, பேருந்துகளைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் சம்பவங்களோ நடக்கலாம். வியாபாரிகளும் பொதுமக்களும் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கூட்டம் வருகிறதென்று பிரியாணி கடைகளைத் திறந்து
தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து விட்டு தன் ஹோட்டல் அறைக்கு வந்த அமித்ஷா பாஜகவின் நிர்வாகிகளோடு கலந்தாலோசனை செய்துள்ளார்.களநிலவரம் பற்றி மத்திய உள்துறை ரிப்போர்ட்டை எடுத்து வீசியுள்ளார் அமித்ஷா. என்ன தான் நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தன் நிர்வாகிகளை பார்த்து கோவப்பட்டாராம்.
இதுவரை அமித்ஷா இவ்வளவு கோவப்பட்டு நாங்கள் யாரும் பார்த்ததில்லை என்றார் அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக நிர்வாகி.
அமித்ஷா வின் கோவத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் பாஜக உட்கட்சி பூசலும் அவர்கள் தமிழகத்திற்கு வகுத்த திட்டம் ஒன்று கூட பலனளிக்கவில்லை
என்றும் 20 தொகுதிகளில் பல இடங்களில் பாஜக டெப்பாசிட் இழக்கும் என்று உள்துறை கொடுத்த ரிப்போர்ட்டும் தான் அதற்கு காரணம் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.
எடப்பாடி தாயை குறித்து ஆ. ராசா பேசியதாக பாஜக ஐடி செல்கள் பரப்பிய வீடியோவிற்கு மக்களிடையே அனுதாபம் ஏற்படாமல் தன் தாயையே
இதுவரை வந்துள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தமிழக பாஜகவுக்கு எதிராகவே உள்ளன. இது பாஜக தலைகளைக் கடுப்பேற்றும்... கடைசி நேரத்தில் வேறு ஏதேனும் திட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றுவார்கள் எனத் தோன்றுகிறது. அதேபோல இன்று யோகி ஆதித்யநாத் கோவைக்கு (1/6)
வந்ததையொட்டி, பைக் பேரணி என்ற பெயரில் ரவுடிகளைக் குவித்து, மசூதி அருகே கோஷங்களை எழுப்பி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம், வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் இதில் பெருமளவு பங்கேற்றிருக்கிறது.
வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்து (2/6)
பணியாற்றுவதை மனிதாபிமான அடிப்படையிலும், அனைவரும் இந்தியர்கள் என்ற பார்வையிலும் தவறு சொல்ல முடியாது. அது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதேவேளை, பாஜகவினர், தங்கள் ஓட்டு வங்கியாகவும், இந்துத்துவ ரவுடியிசத்துக்கான கருவியாகவும் இவர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பது(3/6)
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆலாந்துரை பகுதியில் நடந்த கூட்டத்தில் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரிக்க முடிவு செய்திருக்கின்றனர் வெள்ளாள கவுண்டர்கள் சங்க நிர்வாகிகள்.
வேலுமணியால் நாம் பயன் அடைந்திருக்கிறோம், மறுக்கவில்லை (1/7)
அவர் அமைச்சராக இருந்த காரணத்தால் மட்டுமே தான் நமக்கு ஏதாவது செய்தார். நமக்கு மட்டும் செய்யவில்லை அவருக்கும் அவர் குடும்பத்திற்க்கும் சேர்த்து தான் செய்திருக்கிறார்.
வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை, எதிர்கட்சி MLA வால் என்ன பெரிய நன்மை செய்துவிட முடியும் ? (2/7)
சொந்த காசை போட்டு நம்ம பங்காளி எதுவும் செய்ய மாட்டார் அது நம் எல்லாருக்கும் தெரிந்தது தான். தொகுதியின் வளர்ச்சி தேங்கி விட வாய்ப்பு உள்ளது வேலுமணி வெற்றி பெற்றால் என்று மூத்த நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார்.
எதிரில் இருந்து நம்ம கோயில், குளம் எதுனா நல்லது கெட்டது (3/7)