Navnit Profile picture
3 Apr, 17 tweets, 6 min read
என் அரசியல் உணர்வு தொடங்கியது 1996ல்.

அப்போது என் வயது 8. ஜெயலலிதாவின் ஊழல்கள் வெளிவந்த நேரம். #ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து குவித்த அதிருப்தியில் மக்கள். அதேசமயம், #திமுக மீதும் மக்களுக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. 1/17 #TamilNaduElections2021
அப்போது ஒரு நல்லவர் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் தான் டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி. அவரது கட்சி தான் மக்கள் சக்தி இயக்கம். மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும், மக்களை அதிகாரப்படுத்தும் மற்றும் மாற்று அரசியல் நடைமுறைக்கு கொண்டு வரும் நோக்கில் 2/17
டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியால் பிப்ரவரி 1988 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவரின் கதை தான் @ikamalhaasan நடிப்பில் வந்த உன்னால் முடியும் தம்பி படம். 3/17

#TNElection2021 #TamilNaduElections2021
தற்போது இருக்கும் #சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் #மக்கள்நீதிமய்யம் பல்லாவரம் வேட்பாளருமான திரு செந்தில் ஆறுமுகம் @sentharu அப்போது மக்கள் சக்தி இயக்கத்தில் இருந்தார். 4/17

#TNElection2021 #TamilNaduElections2021
என் அப்பா பெரிய பணக்காரர் இல்லை. ஏழை குடும்பத்தில் பிறந்து 4ஆம் வகுப்புவரை படித்து எந்த பூர்வீக சொத்தும் இல்லாமல் சிறுவயதிலேயே வேலைக்கு சென்று தொழில்பயின்று கடின உழைப்பால் தொழில் அதிபர் ஆனவர். அவர், டாக்டர் எம். எஸ். 5/17
உதயமூர்த்தியின் கொள்கைகளின் மீது பற்று கொண்டும் மாற்றம் வேண்டும் என்றும் அவரது கட்சியில் சேர்ந்தார்.

கட்சி கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அப்பாவோடு சென்றிடுவேன். உதயமூர்த்தி ஐயாவுடன் நிறைய பேசியிருக்கேன். 6/17
ஒருமுறை அவருக்கு எழுத்துப்பிழைகளுடன் ஒரு கடிதம் எழுதினேன் வேகத்தடைகளை(ஸ்பீட் பிரேக்கர்) ஒழிக்க வேண்டும் என்று. அதை ஐயா படித்துவிட்டு அடுத்த முறை என்னை பார்த்தபோது என்னிடம் கேட்டார் ஏன் என்று. "மக்களிடம் சுயஒழுக்கம் இல்லாததே வேகத்தடைகளின் தேவை. 7/17
மக்களுக்கு சுயஒழுக்கத்தின் நன்மைகளை உணர்த்திவிட்டால் வேகத்தடைகள் தேவை இல்லை" என்றேன். அவர் சிரித்துக்கொண்டே என்னை பாராட்டினார்.

1996ல் கட்சியின் சார்பில் கோவையில் சட்டமன்ற தேர்தலில் மணி(Bell) சின்னத்தில் போட்டியிட்டார். 8/17
அந்த மணி மனுநீதி சோழனின் மணியை போல ஒரு நாள் ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்.

அப்போது பள்ளிகள் கோடை விடுமுறை. நானும் கிளம்பி சென்றுவிடுவேன் பிரச்சாரத்திற்கு. காலை 8மணி முதல் இரவு 11மணி வரை அப்பாவுடனே சுற்றிக்கொண்டிருப்பேன். பிரச்சாரங்களில் "தந்தானன தான தான! தந்தானன தான தான! 9/17
மக்கள் சக்தி இயக்கமடா! மாமனிதன் இயக்கமடா! எம்.எஸ்.உ தலைமைதானடா! ஓ தந்தானே! எதிர்காலம் நமக்கு தானடா..." என்று பாட்டுப்பாடி வாக்கு சேகரிப்பேன்.

முதலில் விளையாட்டாக தான் சென்றேன். ஆனால் அங்கு சென்று மக்களின் நிலைமையை பார்க்கும் போது என்னுள் பல கேள்விகள் எழுந்தது. 10/17
8 வயதில் என்னால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இருந்த இடைவெளியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருநாள் என் தந்தையின் தேர்தல் அறிக்கையை எடுத்து படித்தேன். இதெல்லாம் நடந்தா எவ்ளோ நல்லாருக்கும்னு தோன்றியது. பரவால்ல நம் அப்பா நமக்காக ஒரு மாற்றம் வேண்டும் என்று அரசியல் செய்கிறார். 11/17
நாம் பெரியவனாவதற்குள் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தேன்.

அப்போது #ரஜினி அதிமுகவிற்கு எதிராக ஒரு நிலைபாட்டை எடுத்து #திமுக மேடையில் நின்று "நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க"னு சொன்னார். 12/17
நாங்கள் எங்கு ஓட்டு கேட்க சென்றாலும், சார் இந்தமுறை திமுகவிற்கு போடுகிறோம் இல்லனா அதிமுக ஜெயிச்சிரும்னு சொன்னாங்க! அந்த வயதில் மிகவும் நம்பிக்கையோடு இருந்த எனக்கு ஏமாற்றம். #திமுக ஜெயிச்சது! என் அப்பா வாங்கிய ஓட்டுகள் 117. 13/17
25 வருடங்கள் கடந்தன இன்றும் அதே நிலை அவல நிலை தொடர்கிறது. ஏழைக்கும் பணக்காரனுக்கு உள்ள இடைவெளி அதிகரித்திருக்கிறது. #மாற்றம் மட்டும் இன்னும் எட்டிக்கூட பார்க்கவில்லை. கழகங்கள் என்றுமே எனக்கு ஓட்டு போடு இல்லனா அவங்க வந்துருவாங்கனு சொல்லி தான் ஒட்டு கேட்கும் 25 வருடமா. 14/17
இன்றும் ஒரு கழகம் #பிஜேபி உள்ள வந்துரும் அதனால எனக்கு ஒட்டு போடுனு சொல்லுது, இன்னொன்று #அராஜக ஆட்சி வந்திரும் எனக்கு ஓட்டு போடுனு சொல்லுது. 2026லும் இதுபோல் ஒரு வாதம் நிச்சயம் முன்வைப்பார்கள். 15/17
நேர்மையா உண்மையா ஆட்சி நடத்த முடியும்னு சொன்னா மக்கள் நம்ப முடியாத அளவிற்கு மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள்.

இப்போ என் மகளுக்கு வயது 7, அவள் வளர்ந்து வந்தாலும் இதே நிலை தான் தொடரும். மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு ஆதரிக்கும் வரை. 16/17
என் மகளுக்காக கேட்கிறேன், உங்கள் பிள்ளைகளுக்காக கேட்கிறேன். மாற்றத்திற்கு வாக்களியுங்கள். அழுக்கை கழுவ அழுக்குநீர் உதவாது!

சிறந்த சொல் செயல். சிறந்த நாள் இன்று! வாய்ப்பு கொடுங்கள்! Please... #TNElection2021 #TamilNaduElections2021 17/17

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Navnit

Navnit Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!