‘சிவன் சொத்து குல நாசம்’ என்று கூறுவதால் சிவன் கோவிலில் தரும் பிரசாதங்களை அங்கேயே போட்டுவிட்டு வருவது சரியா? தவறா?
உண்மையில் இதன் அர்த்தம் தான் என்ன?
சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழியை நம்பி பலரும் சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களை கூட வீட்டிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர்.
எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த பழமொழி திகழ்கிறது.
சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் தான் என்ன? சிவன் கோவிலில் தரும் வீபூதி முதலான இன்னபிற பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வருவது நல்லதா? கெட்டதா?
சிவன் கோவில் மட்டுமல்ல எந்த ஒரு கோவிலில் இருந்தும் நீங்கள் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் உங்கள் குலமே(வம்சம்) நாசம் அடையும் என்பது தான் சாஸ்திர நியதி. கோவில் சொத்து மேல் ஆசைப்படுபவர்கள் உடைய சந்ததிகள் அடியோடு நாசமாகி சீர்குலையும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
வரம் கொடுத்த இறைவன் தலையிலேயே கையை வைத்த பஸ்மாசுரன் உடைய நிலை தான் அவர்களுக்கும் ஏற்படும்.
உண்மையில் சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதி, குங்குமம் முதலான பிரசாதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
இந்த பிரசாதங்களை வீட்டில் சேர்த்து வைத்துக் கொண்டே வந்தால், ஈசனுடைய அருள் மற்றும் பாதுகாப்பு உங்கள் வீட்டிற்கு அரணாக அமையும். இதனால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் தன் பலத்தை இழந்து வெளியேறிவிடும்.
பழமொழியின் உண்மை அர்த்தம் தெரியாத காரணத்தால் இந்த நன்மைகளை எல்லாம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரியது.
அனைத்து விதமான ஆசைகளையும் அடக்கி, பந்த பாசங்களை அறுத்து, முழுமையாக தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சித்தர்கள் அக்காலத்தில் அதிக வித்தைகளை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர்.
சித்தர் எனும் மகா புருஷர்கள் பிரம்மச்சரியத்தை கடைபிடித்து யோகப் பயிற்சிகள் மூலம் குண்டலினி சக்தியை பெற்றார்கள்.
சித்தி பெற்ற ஒருவரே சித்தன் ஆகிறான். முற்றும் துறந்து உச்சி முதல் பாதம் வரை அடக்கி, அஷ்டமா சித்திகளை பெற்று ஞானத்தை அடைந்து மோட்சம் பெறும் சித்தர்கள், உடலால் அழிந்தாலும் ஆன்மா பல நூறு ஆண்டுகளுக்கு அழியா நிலையை பெறுகிறது.
இதைத்தான் சிவன் சொத்து குல நாசம் என்று கூறி வைத்தனர்.
சிவனுடைய சொத்து மட்டுமல்ல, எந்த கடவுளின் சொத்தாக இருந்தாலும், அதனை அடைய நினைப்பவர்களுக்கு வம்சம் நாசமடையும். சிவன் கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வருவதால் எந்த ஒரு ஆபத்தும் நேர போவதில்லை.
மற்ற கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்கள் போலவே, சிவன் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களும் வீட்டிற்கு நன்மைகளை மட்டுமே வழங்கும்.
எந்த ஒரு தீங்கையும் இழைத்து விடாது. சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதியை, வீட்டின் நான்கு மூலைகளிலும் தூவிவிட்டால் போதும்.
எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, தெய்வ சக்தி ஊடுருவி நேர்மறை ஆற்றல் பெருகும். தினமும் சிவன் கோவில் விபூதியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெற்றியில் வைத்துக் கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.
அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனமும் அமைதி அடைந்து நிம்மதியான தூக்கமும் பெறுவீர்கள்.
ஓம் நமச்சிவாய!*
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: மஹாராஷ்டிரா அமைச்சர் அனில்தேஷ் முக் ராஜினாமா
மும்பை : மாதம் ரூ. 100 கோடி வசூலித்து தர தன்னை மிரட்டியதாக அமைச்சர் அனில் தேஷ் முக் மீது மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றம்சாட்டியதையடுத்து இன்று அமைச்சர் அனில் தேஷ் முக் ராஜினாமா செய்தார்.
தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடியிருப்புக்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்து சச்சன் வாஸே என்ற போலீஸ் அதிகாரியை கைது செய்தனர்.
வழக்கு விசாரணையை தவறாக வழி நடத்தியதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தமிழக தலைவர் பெரும்தலைவர் காமராசர் .....
காமராசருக்கும் பாஜகவிற்கும் என்ன சம்மந்தம் .... ???
வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம் ....!!!
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளில் காங்கிரசாரால் இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்வோம் ....!!!
ரூபாய் மதிப்பிழப்பு விசயத்தில் காமராசர் பெயரை பிரதமர் ஏன் பயன்படுத்தினார் எனவும் காமராசருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம் எனவும் பல அதிமேதாவிகளும் காங்கிரஸ்காரர்களும் கேட்டுவருகின்றனர் ..... !!!
மக்களுக்கு மறதி வியாதி எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது.......!!!
உண்மையில் தேசபக்தர்கள் எல்லோரும் எங்களின் தலைவர்கள்தான்......!!!
காமராஜர் காங்கிரஸ் தலைவர் இல்லை.. ஸ்தாபன காங்கிரசின் தலைவர்...... !!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர், இந்திராவை பிரதமராக நியமித்தார் ....!!!
மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
புதுடில்லி: 'நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நாளன்று நீங்கள் நடந்து கொண்டது, மேற்கு வங்கம் மற்றும் வேறு சில மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
'இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.
இம்மாநில சட்டசபைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரது கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி, அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.இந்தத் தொகுதிக்கு, ஏப்.,1ல் தேர்தல் நடந்தது.
காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க உ.பி., அரசு திட்டம்
புதுடில்லி: அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
ஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ - மெயில்: லீக் ஆனதால் தி.மு.க.,வில் பரபரப்பு
சென்னை:சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி வெளியான, கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, தி.மு.க.,வுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி,
ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்படும், ரகசிய, 'இ - மெயில்' வெளியில் கசிந்துள்ளது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடக்க உள்ளது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என, ஊடகங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில், பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
பெரும்பாலான கருத்து கணிப்புகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது, தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தையும், அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம் தரிசிக்க முக்தி தரும் தலம் பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம் ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம் அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
🙏🇮🇳1
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம் சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. 🙏🇮🇳2
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. 🙏🇮🇳3