*திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள புனித தீர்த்தங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.*
🇮🇳🙏1
திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும்.
🇮🇳🙏2
திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும்.
🇮🇳🙏3
திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும்.
🇮🇳🙏4
அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது.
🇮🇳🙏5
திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.
🇮🇳🙏6
திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
🇮🇳🙏7
திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார்.
🇮🇳🙏8
திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.
🇮🇳🙏9
நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.
🇮🇳🙏10
திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். 🇮🇳🙏11
இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.
🇮🇳🙏12
திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும்.
🇮🇳🙏13
திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம்.
🇮🇳🙏14
திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர்.
🇮🇳🙏15
அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.
🇮🇳🙏16
திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும்.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: மஹாராஷ்டிரா அமைச்சர் அனில்தேஷ் முக் ராஜினாமா
மும்பை : மாதம் ரூ. 100 கோடி வசூலித்து தர தன்னை மிரட்டியதாக அமைச்சர் அனில் தேஷ் முக் மீது மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றம்சாட்டியதையடுத்து இன்று அமைச்சர் அனில் தேஷ் முக் ராஜினாமா செய்தார்.
தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடியிருப்புக்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்து சச்சன் வாஸே என்ற போலீஸ் அதிகாரியை கைது செய்தனர்.
வழக்கு விசாரணையை தவறாக வழி நடத்தியதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தமிழக தலைவர் பெரும்தலைவர் காமராசர் .....
காமராசருக்கும் பாஜகவிற்கும் என்ன சம்மந்தம் .... ???
வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம் ....!!!
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளில் காங்கிரசாரால் இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்வோம் ....!!!
ரூபாய் மதிப்பிழப்பு விசயத்தில் காமராசர் பெயரை பிரதமர் ஏன் பயன்படுத்தினார் எனவும் காமராசருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம் எனவும் பல அதிமேதாவிகளும் காங்கிரஸ்காரர்களும் கேட்டுவருகின்றனர் ..... !!!
மக்களுக்கு மறதி வியாதி எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது.......!!!
உண்மையில் தேசபக்தர்கள் எல்லோரும் எங்களின் தலைவர்கள்தான்......!!!
காமராஜர் காங்கிரஸ் தலைவர் இல்லை.. ஸ்தாபன காங்கிரசின் தலைவர்...... !!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர், இந்திராவை பிரதமராக நியமித்தார் ....!!!
மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
புதுடில்லி: 'நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நாளன்று நீங்கள் நடந்து கொண்டது, மேற்கு வங்கம் மற்றும் வேறு சில மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
'இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.
இம்மாநில சட்டசபைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரது கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி, அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.இந்தத் தொகுதிக்கு, ஏப்.,1ல் தேர்தல் நடந்தது.
காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க உ.பி., அரசு திட்டம்
புதுடில்லி: அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
ஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ - மெயில்: லீக் ஆனதால் தி.மு.க.,வில் பரபரப்பு
சென்னை:சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி வெளியான, கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, தி.மு.க.,வுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி,
ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்படும், ரகசிய, 'இ - மெயில்' வெளியில் கசிந்துள்ளது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடக்க உள்ளது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என, ஊடகங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில், பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
பெரும்பாலான கருத்து கணிப்புகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது, தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தையும், அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம் தரிசிக்க முக்தி தரும் தலம் பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம் ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம் அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
🙏🇮🇳1
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம் சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. 🙏🇮🇳2
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. 🙏🇮🇳3