கடைசி நேரத்தில் மேலிடம் நெருக்கடி ; மன உளைச்சலில் தி.மு.க., வேட்பாளர்கள்
கொரோனா அச்சுறுத்தல், வருமான வரித் துறை சோதனை என, தி.மு.க.,வை அச்சுறுத்தி முடக்க, களத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் சென்று கொண்டிருக்கின்றனர், தி.மு.க., தலைவர்கள்.
கடைசியாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர் மகளிர் அணி செயலர் கனிமொழி. கட்சியின் தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும், அவர், மதுரையில் துவங்கி கன்னியாகுமரி வரை பிரசாரம் செய்தார். இப்போது தொற்று உறுதியாகி மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி இருக்கிறார்.
இதே அச்சுறுத்தல், அவரை விட மூத்தவரான ஸ்டாலினுக்கும் இருக்கிறது. அவரும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். மகன் உதயநிதியும்மாநிலம் பூராவும் சுற்றி வருகிறார்.
இதற்கெல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை என, கடைசியாக எடுக்கப்பட்ட, 'சர்வே' முடிவுகள், தி.மு.க.,வுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றன. அ.தி.மு.க., தரப்பு கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, பெரும்பாலான ஊர்களில் பட்டுவாடாவை முடித்து விட்டதால்,அக்கட்சியினரும்,
மேலிடத்தில் இருப்பவர்களும் தெம்பாக இருப்பதாகவும், தி.மு.க., தலைமைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தி.மு.க., தரப்பிலும் வாக்காளர்களை கவனித்தால் மட்டுமே, இழுபறியாக இருக்கும் பல தொகுதிகளில் ஒன்றிரண்டாவது பிடிக்க முடியும் என, கள தகவல்கள் சொல்வதால்,
மேலிடத்தில் இருந்து வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் நொந்து போயிருப்பவர்கள் வசதி குறைவான வேட்பாளர்கள். திருத்தணி சந்திரன் நகர செயலராகவும், நகர்மன்ற தலைவராகவும் இருந்து நிறைய சம்பாதித்தவர் தான். ஆனால், கட்சிக்காக நிறைய செலவழித்து விட்டதால்,
தற்போது கையில் பணமில்லை. அதை சொன்னால் தலைமை ஏற்க மறுக்கிறது. '5 கோடி ரூபாய் செலவழிப்பேன் என்று சொல்லிதானே, 'சீட்' வாங்கினீர்கள்' என, கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.
திருநெல்வேலி ஏ.எல்.எஸ்.லட்சுமணன். இவர் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர். அப்பாவும் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஆனால், கை சுத்தம்; அதனால் வாய் நீளம். நேர்காணலிலேயே, 'என்னிடம் சல்லி பைசா கிடையாது. கட்சி காசு கொடுத்தால் செலவு செய்கிறேன்;
நாந்தான் திரட்ட வேண்டும் என்றால் எனக்கு சீட்டே வேண்டாம். யாரை நீங்கள் வேட்பாளராக நிறுத்தினாலும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்' என்றவர்.
அதன் பிறகும் அவரையே வேட்பாளராக அறிவித்து விட்டு, இன்று வரை செலவுக்கு பணம் கொடுக்கவில்லை மேலிடம். 'கடன் வாங்கி செலவு செய்யுங்கள்;
தேர்தலுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம்' என, அறிவாலயத்தில் இருந்து போன் போட்டு சொன்னால், 'தோற்று விட்டால், கடனை எப்படி அடைப்பேன்?' என, கேட்கிறார் லட்சுமணன். அதே நிலை தான், பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல் வஹாபுக்கும். நிறைய செலவழிக்க முடியும் என்று நேர்காணலில் சொல்லிவிட்டார்.
ஆனால், அதற்கு முன்பே கட்சிக்காக நிறைய கடன் வாங்கி செலவழித்து விட்டதால், வேட்பாளர் ஆன பின், அவர் கேட்ட இடங்களில் கடன் கிடைக்கவில்லை. மேலிட நெருக்கடி அதிகமாவதால், எதிரில் வரும் எல்லாரிடமும் கடனுக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்கிறார். இந்த மூவரைப் போலவே,
திருவிடைமருதுார் கோவி செழியன், சங்கரன்கோவில் ராஜா என, பணப் பிரச்னையில் சிக்கி தடுமாறும், தி.மு.க., வேட்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தி.மு.க., நிச்சயமாக ஆட்சிக்கு வரும் என பரவலாக பேசப்பட்டதால்,
அக்கூட்டணியின் வேட்பாளர்கள் உற்சாகமாக இருந்தனர். இப்போது நிலவரம் கலவரமாகி விட்டது என தெரிந்ததும், கடன் தருவதாக உறுதி அளித்தவர்கள்கூட போன் போட்டால் எடுப்பது இல்லை. இதனால், தி.மு.க., வேட்பாளர்கள் பலர், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தகவல்.
இன்னும், இரண்டு நாட்களை செலவு செய்யாமல் கடக்கும்வேட்பாளர்கள், வெற்றியோ - தோல்வியோ கடன் வலையில் சிக்காமல் தப்பித்து விடலாம்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: மஹாராஷ்டிரா அமைச்சர் அனில்தேஷ் முக் ராஜினாமா
மும்பை : மாதம் ரூ. 100 கோடி வசூலித்து தர தன்னை மிரட்டியதாக அமைச்சர் அனில் தேஷ் முக் மீது மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றம்சாட்டியதையடுத்து இன்று அமைச்சர் அனில் தேஷ் முக் ராஜினாமா செய்தார்.
தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடியிருப்புக்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்து சச்சன் வாஸே என்ற போலீஸ் அதிகாரியை கைது செய்தனர்.
வழக்கு விசாரணையை தவறாக வழி நடத்தியதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தமிழக தலைவர் பெரும்தலைவர் காமராசர் .....
காமராசருக்கும் பாஜகவிற்கும் என்ன சம்மந்தம் .... ???
வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம் ....!!!
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளில் காங்கிரசாரால் இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்வோம் ....!!!
ரூபாய் மதிப்பிழப்பு விசயத்தில் காமராசர் பெயரை பிரதமர் ஏன் பயன்படுத்தினார் எனவும் காமராசருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம் எனவும் பல அதிமேதாவிகளும் காங்கிரஸ்காரர்களும் கேட்டுவருகின்றனர் ..... !!!
மக்களுக்கு மறதி வியாதி எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது.......!!!
உண்மையில் தேசபக்தர்கள் எல்லோரும் எங்களின் தலைவர்கள்தான்......!!!
காமராஜர் காங்கிரஸ் தலைவர் இல்லை.. ஸ்தாபன காங்கிரசின் தலைவர்...... !!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர், இந்திராவை பிரதமராக நியமித்தார் ....!!!
மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
புதுடில்லி: 'நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நாளன்று நீங்கள் நடந்து கொண்டது, மேற்கு வங்கம் மற்றும் வேறு சில மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
'இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.
இம்மாநில சட்டசபைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரது கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி, அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.இந்தத் தொகுதிக்கு, ஏப்.,1ல் தேர்தல் நடந்தது.
காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க உ.பி., அரசு திட்டம்
புதுடில்லி: அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
ஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ - மெயில்: லீக் ஆனதால் தி.மு.க.,வில் பரபரப்பு
சென்னை:சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி வெளியான, கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, தி.மு.க.,வுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி,
ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்படும், ரகசிய, 'இ - மெயில்' வெளியில் கசிந்துள்ளது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடக்க உள்ளது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என, ஊடகங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில், பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
பெரும்பாலான கருத்து கணிப்புகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது, தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தையும், அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம் தரிசிக்க முக்தி தரும் தலம் பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம் ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம் அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
🙏🇮🇳1
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம் சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. 🙏🇮🇳2
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. 🙏🇮🇳3