என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் தரக்குறைவாக பேசும் போது, அவர்கள் மீது, இ.பி.கோ., பிரிவுகளின்படி எத்தனையோ அவதுாறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், அவை எல்லாம் காலப்போக்கில் வலுவிழந்து, காலாவதியாகி விடுகின்றன.'பேச்சுரிமை' என்பதை, நம் அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளனர். அதனால் தான், அவர்கள் அத்துமீறி அநாகரிகமாக பேசுகின்றனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த அ.ராசா, நம் முதல்வரின் தாயைப் பற்றி, தவறாக பேசுகிறார் என்றால், அவருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?
முன்னாள், தி.மு.க., மத்திய அமைச்சரான தயாநிதி மாறன், 'அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதாவை, 'மம்மி' என்கின்றனர். பிரதமர் மோடியை, 'டாடி' என்கின்றனர்.
அப்படியானால், இந்த இரு தலைவர்களுக்கும் என்ன உறவு ?' என, இழிவாகப் பேசி இருக்கிறார். பேசக் கூடாததை எல்லாம் பேசி நாறடித்து விட்டு, எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாத நிலை வரும்போது, வேண்டா வெறுப்பாக, மன்னிப்பு கோருகின்றனர்.அவதுாறு வழக்கு என்பது, இப்போது செல்லாக் காசாகி விட்டது.
அதனால், அநாகரிக பேச்சு அதிகரித்து விட்டது.ராஜாஜியைப் பார்த்து, 'நான்சென்ஸ்' என, நம் நாட்டின் முதல் பிரதமர் நேரு ஒருமுறை கடிந்துக் கொண்டார்.
உடனே, நேரு மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்து, ௧ லட்சம் ரூபாய் நஷ்டஈடு வாங்கினார், ராஜாஜி. காரணம், அப்போது, நீதி பரிபாலனம் மிக நேர்த்தியாக நடந்தது.
இப்போது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வது எப்படி என்பது, அரசியல்வாதிகளுக்கு கைவந்தக் கலையாகி விட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, 20 ஆண்டுகளாக இழுத்து அடிக்கப்பட்டதை, நாம் அறிவோம். அவதுாறு வழக்கு எல்லாம், இப்போது வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே போடப்படுகின்றன.
அதில், தீர்ப்பு ஏதும் கிடைப்பதில்லை; ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து, வழக்கை புதைத்து விட முடியும்.அதனால் தான், அரசியல் வியாபாரிகள் அநாகரிகமாகப் பேசுகின்றனர். அரசியல், சாக்கடையாக மாறிப் போய் ரொம்ப நாட்களாகின்றன. அதனால் தான், அரசியல் வியாபாரிகள் பேசும் பேச்சில், துர்நாற்றம் வீசுகிறது
தரம் தாழ்த்திப் பேசும் இழிபிறவியின் உருவப் பொம்மையை எரிப்பதாலோ, செருப்பால் அடிப்பதாலோ, அவர் மனம் திருந்த போவதில்லை. இவரைப் பாராட்டி, சீராட்டி வளர்க்கும் கட்சித் தலைவருக்கு, தேர்தலில் சரியான முறையில் பாடம் கற்பிக்க வேண்டும்.
நீதிமன்றங்களால் தண்டிக்க முடியாத இந்த ஜென்மங்களுக்கு, மக்கள் மன்றத்தில் தான் தண்டனை கிடைக்க வேண்டும்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம்: மஹாராஷ்டிரா அமைச்சர் அனில்தேஷ் முக் ராஜினாமா
மும்பை : மாதம் ரூ. 100 கோடி வசூலித்து தர தன்னை மிரட்டியதாக அமைச்சர் அனில் தேஷ் முக் மீது மும்பை போலீஸ் கமிஷனர் கூறிய குற்றம்சாட்டியதையடுத்து இன்று அமைச்சர் அனில் தேஷ் முக் ராஜினாமா செய்தார்.
தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடியிருப்புக்கு வெளியே வெடிபொருட்களுடன் கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்து சச்சன் வாஸே என்ற போலீஸ் அதிகாரியை கைது செய்தனர்.
வழக்கு விசாரணையை தவறாக வழி நடத்தியதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தமிழக தலைவர் பெரும்தலைவர் காமராசர் .....
காமராசருக்கும் பாஜகவிற்கும் என்ன சம்மந்தம் .... ???
வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போம் ....!!!
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளில் காங்கிரசாரால் இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்வோம் ....!!!
ரூபாய் மதிப்பிழப்பு விசயத்தில் காமராசர் பெயரை பிரதமர் ஏன் பயன்படுத்தினார் எனவும் காமராசருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம் எனவும் பல அதிமேதாவிகளும் காங்கிரஸ்காரர்களும் கேட்டுவருகின்றனர் ..... !!!
மக்களுக்கு மறதி வியாதி எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது.......!!!
உண்மையில் தேசபக்தர்கள் எல்லோரும் எங்களின் தலைவர்கள்தான்......!!!
காமராஜர் காங்கிரஸ் தலைவர் இல்லை.. ஸ்தாபன காங்கிரசின் தலைவர்...... !!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர், இந்திராவை பிரதமராக நியமித்தார் ....!!!
மம்தா மீது கடும் நடவடிக்கை; தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
புதுடில்லி: 'நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நாளன்று நீங்கள் நடந்து கொண்டது, மேற்கு வங்கம் மற்றும் வேறு சில மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
'இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.
இம்மாநில சட்டசபைக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரது கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி, அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.இந்தத் தொகுதிக்கு, ஏப்.,1ல் தேர்தல் நடந்தது.
காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க உ.பி., அரசு திட்டம்
புதுடில்லி: அயோத்தியிலிருந்து, காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை, உத்தர பிரதேசத்தில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
ஸ்டாலினுக்கு வந்த ரகசிய இ - மெயில்: லீக் ஆனதால் தி.மு.க.,வில் பரபரப்பு
சென்னை:சட்டசபை பொதுத் தேர்தலை ஒட்டி வெளியான, கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, தி.மு.க.,வுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வகையில், அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி,
ஸ்டாலினுக்கு அனுப்பியதாக கூறப்படும், ரகசிய, 'இ - மெயில்' வெளியில் கசிந்துள்ளது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடக்க உள்ளது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என, ஊடகங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில், பல்வேறு விதமான கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
பெரும்பாலான கருத்து கணிப்புகளில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது, தி.மு.க.,வினரிடம் உற்சாகத்தையும், அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம் தரிசிக்க முக்தி தரும் தலம் பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம் ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம் அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம்
🙏🇮🇳1
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம் சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம்
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. 🙏🇮🇳2
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. 🙏🇮🇳3