"இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது", இது பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனம். இது எதுக்கு இப்போது என்று நினைத்தால், படியுங்கள்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக
அமர்விற்கு துறைசார் நிபுண உறுப்பினராக, தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல அறமற்ற செயலும் கூட.
பசுமை தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் சூழலியல் துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றி இருக்கவேண்டும், ஆனால்
கிரிஜாவிற்கு அந்த அனுபவம் கிடையாது. அவருடைய நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் அவர் பசுமை தீர்ப்பாயத்தின் "தென்னக அமர்வுக்கு" நிபுண உறுப்பினராக அமர்த்தப்பட்ட உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது அறமற்ற செயல்,
ஏனெனில், அவர் தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்துள்ளார்.தலைமை செயலர் என்பதால் "சூழலியல் திட்டங்கள்" தொடர்பாக பல்வேறு முடிவுகளை அரசின் சார்பாக எடுத்திருப்பார், குறிப்பாக அவர்”சதுப்பு நில பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராகவும்"இருந்துள்ளார். அப்போதெல்லாம் அவர் எடுத்த முடிவுகள் தொடர்பாக
வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன அல்லது தாக்கல் செய்யப்படவுள்ள.
இந்த வழக்குகளை இனிமேல் விசாரித்து தீர்ப்பு சொல்லப்போவது அன்றைய தலைமை செயலர், இன்றைய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினர் கிரிஜா வைத்தியநாதன். அதாவது அதிகாரியாக தான் முடிவெடுத்த விஷயங்கள்
குறித்து நீதிபதியாக தீர்ப்பு எழுதவுள்ளார் கிரிஜா.
இந்த பெருமை யாருக்கு கிடைக்கும்? அதாவது விளையாட்டு வீரரும் அவரே, நடுவரும் அவரே.
இது விசித்திர வழக்கு இல்லாமல் வேறு எதுவாம்?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"எனக்கு மாதவிடாய் நாட்களே புடிக்காது, 6-7 நாட்களுக்கு என்னால் எதுவும் செய்யமுடியாது, சானிடரி நாப்கின் வாங்கும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை, அந்த நாட்களில் பள்ளிக்கு செல்லமுடியாமல் போய்விடும்" என்கிறார் ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்டத்தை சேர்ந்த 14வயது நிவேதிதா மொஹபத்ரா. இதில்
நிவேதிதா மட்டும் தனித்தல்ல, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவியர் மாதவிடாயால் பள்ளிக்கு செல்லமுடியாமல் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேசிய "குடும்ப சுகாதார கணக்கெடுப்பில்", ஒடிசாவில் மட்டும் சுமார் 53% பெண்கள் சுகாதாரமற்ற வழிமுறைகளை பின்பற்றி மாதவிடாயை
கையாளுகிறார்கள் என்று தெரியவந்தது .
இந்த அவலநிலையை போக்குவதற்காக கடந்த2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஒடிசா அரசாங்கம் "குஷி" திட்டத்தை துவக்கியது.இந்த திட்டத்தின் படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 17லட்சம் மாணவியருக்கு இலவசமாக "சானிடரி நாப்கின்"
கடந்த மாதம் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனேக கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன,அந்த பகுதிக்கு் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.திமுக சுற்றுச்சூழல் அணியின் கார்த்திகேய
சிவசேனாபதி, விசிக தலைவர் தோழர் திருமாவளவன் அந்த பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது தோழர் திருமாவளவனிடம், "தோழர் கட்சிக்கென்று சுற்றுச்சூழல் அணி உருவாக்கவேண்டுமென்ற கோரிக்கையை வைத்தோம்". அதற்கு அவர்"தோழர் கட்சியே சுற்றுச்சூழல் அணிதான்"
என்றார்.மகிழ்ச்சி தோழர் என்றோம். அவர் சொல்லியதை போலவே விசி கட்சிக்கு பானை சின்னம் கிடைத்துள்ளது.
பானை - சுயசார்பின் சின்னம்
பானை - சூழல் பாதுகாப்பின் சின்னம்
பானை - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சின்னம்
பானை - மரபுசார் தொழில் நுட்பத்தின் சின்னம்
பானை - ஊரக பொருளாதாரத்தின் சின்னம்
அதானியின்”காட்டுப்பள்ளி துறைமுக” விரிவாக்கத் திட்டம் தேவையற்ற திட்டம்.இதன் நோக்கம் சென்னை, எண்ணூர்,தூத்துக்குடி துறைமுகங்களை மூடவைப்பதுதான். கொரோனா காலகட்டத்திற்கு முன்னுள்ள துறைமுக பயன்பாட்டு தரவுகளை வைத்து பார்க்கும்போது இந்த சந்தேகம் உறுதியாகிறது. தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய
துறைமுகங்களின் சரக்குகளை கையாள்வதற்கான கூட்டுதிறன் வருடத்திற்கு 274.9 மில்லியன் டன்கள். ஆனால் 2019-20ல் இந்த மூன்று துறைமுகங்களும் சேர்ந்து கையாண்டது 122.3மி.டன்கள். அதாவது 44% மட்டுமே.ஏற்கனவே உள்ள துறைமுகங்களின் நிலையே இப்படி இருக்கும் போது காட்டுப்பள்ளி துறைமுகம் 320மி.டன்களை
கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுக கையாளும் திறனில் இது ஒன்றில் 6 பங்கு. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கூட்டு திறனைவிட 20%க்கும் கூடுதல். அப்படியெனில் அதானி துறைமுகம் வெற்றிபெறவேண்டுமெனில் மற்ற துறைமுகங்கள் கையாளும் சரக்கு இங்கே
பூச்சிகள் சூழ் உலகம் :
இவ்வுலகில் உள்ள மக்கள் தொகையை விட 17 மடங்கு அதிகமான பூச்சிகள் உள்ளன. கடந்த பல பத்தாண்டுகளாக உரம் சார்ந்த விவசாயம், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பூச்சிகள் அழிவை சந்தித்து வருகின்றன. பாலூட்டிகள், பறவைகள் ஊர்வனவற்றிற்கு ஏற்படும் அழிவை விட பூச்சிகள் 8
மடங்கு அதிக அழிவுகளை சந்திக்கின்றன.40% பூச்சிகள் அழியும் நிலையில் உள்ள என்றும் வருடத்திற்கு 2.5% பூச்சிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்கின்றன உலகளாவிய ஆய்வுகள், இந்த ஆய்வுகளை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி பல்கலைக்கழக ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.இந்த நிலை தொடர்ந்தால்
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூச்சிகள் இல்லா உலகமாகிவிடும்.
பூச்சிகள் இல்லைனா சூப்பர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள், ஒரே ஒரு செய்தி, பூச்சிகள் இல்லையெனில் மனிதகுலம் இல்லாமல் போய்விடும், அவ்வளவுதான்.
பூச்சிகள்தான் பறவைகளுக்கு உணவு, பறவைகள் இல்லையெனில் .....? மரகந்த சேர்க்கை
அதானிக்கு இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய நிலப்பரப்பு தேவை. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த, லட்சகணக்கான மக்களின் மீன்பிடி பகுதியாகவுள்ள இந்நிலத்தில் யாருமே கோராத துறைமுகத்தை அமைக்க இந்த நிலப்பரப்பை ஆக்கிரமிக்க போகிறது. #StopAdaniSavePulicat @NityJayaraman
துறைமுகத் திட்டம் பல்லுயிரியத்தை அழிக்கப்போவதோடு மட்டுமல்லாமல் சென்னையை நிரந்திரமாக தண்ணீர் பஞ்சத்திலும், வெள்ள அபாயத்திலும் வைக்கப்போகிறது. பழவேற்காடு சதுப்பு நிலத்திற்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே உள்ள குறுகிய நிலப்பரப்பு அதானி துறைமுகம் ஏற்படுத்தப்போகும் கடலரிப்பால்
காணாமல் போய் கடல்நீர் உட்புகுந்து இரண்டும் ஒன்றோடுஒன்று கலந்துவிடும்.பல்வேறு நாடுகளில் உள்ள பூர்வகுடி மக்கள் அதானியை வரவிடாமல் தடுத்து வருகிறார்கள், இந்தியாவில் மட்டும் அவருடைய கரங்கள் விரிவடைந்து வருகின்றன, பலம்பொருந்திய நண்பர்களின் துணையால் @NityJayaraman#StopAdaniSavePulicat
கொரோனா போன்ற தொற்று நோய்களை அதிகரிக்க விரும்புகிறாரா அமைச்சர் கடம்பூர் ராஜு ?:-
8 வழிச்சாலை திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படவில்லை- மத்திய அரசு வழங்கியுள்ள அற்புதமான திட்டம் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
10,000 ஏக்கர் விவசாய நிலம், நூற்றுக்கணக்கான நீர்நிலைகள்,
ஆயிரக்கணக்கான கிணறுகள், வழிபட்டு தலங்கள், பள்ளிகள் வீடுகள், சிறு வணிக வளாகங்கள்,19 கி.மீ தூரத்திற்கு காப்பு காடுகள், பல்லாயிரக்கணக்கான மரங்கள் என இவை அனைத்தையும் அழித்து 277 கி.மீ தூரத்திற்கு அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த சாலையினால் ஏற்படும் ஏதாவது ஒரு நன்மையை சொல்ல முடியுமா
அமைச்சரே? சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையில் நினைத்த இடத்தில் எல்லாம் இணைய முடியாது. சாலையின் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போடப்படும் இந்த சாலையில் மூன்று இடங்களில் மட்டுமே இணையமுடியும். இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது, கார்கள்,பேருந்துகள், பெரிய