மே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோரின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர், ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் சூழலில், திரிணமுல் காங்., கட்சிக்கு தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ‛ஐ-பாக்' நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது.
‛மே.வங்கத்தில் பா.ஜ., இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப்போகிறது. பா.ஜ., வெற்றிப்பெற்றால், தான் டுவிட்டரில் இருந்தே வெளியேறி விடுகிறேன்,' என்றும் அவர் நம்பிக்கையாக கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசியதாக மூத்த தலைவர் அமித் மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிளப்ஹவுஸ் உரையாடலில் பிரசாந்த் கிஷோர் பேசியதாக கூறப்படும் ஆடியோவில் அவர் பேசியதாவது:
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்., மீது மக்களிடையே கடும் அதிருப்தி உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மீது அதிருப்தியில்லை. திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய சர்வேயில் கூட பா.ஜ.,வுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த தேர்தலில், மோடிக்கு ஆதரவான அலை, மம்தா கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி மற்றும் அக்கட்சியின் சிறுபான்மை ஆதரவு போக்கு ஆகிய 3 விஷயங்கள் பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது.
மேற்குவங்கத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதே அரசியலாக இருந்து வருகிறது.
இதன் காரணமாக பட்டியலின மக்கள் வாக்குகள் பா.ஜ.,வுக்கு செல்கிறது. மேற்குவங்கத்தில் ஹிந்தி பேசுவோர் ஒரு கோடி பேர் உள்ளனர். இவர்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளனர்.
மதுவாஸ் சிறுபான்மையினரில் 75 சதவீதம் பேரும், இடதுசாரி ஆதரவாளர்கள் கூட 10 முதல் 15 சதவீதம் பேரும் பா.ஜ., தான் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
50 முதல் 55 சதவீத ஹிந்துக்களின் ஆதரவு பா.ஜ.,வுக்கு உள்ளது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு, நவுரு. ஜனத் தொகை, 10 ஆயிரம் பேர் மட்டுமே; 30 நிமிடத்தில் சுற்றி வரக் கூடிய நாடு.
கடந்த, 1968-ம் ஆண்டுக்கு முன் வரை, மீன் பிடித்தல், விவசாயம் என, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பின், மிகப் பெரிய, வரம் பெற்ற நாடாக உருமாறியது.
காரணம், பறவை வாழ்வதற்கு ஏற்ற இடமாக, நவுரு தீவு இயற்கையிலேயே இருப்பதால், அந்த பகுதியில் தான் அவை கழிவிறக்கம் செய்து வந்துள்ளன. அவை, 'பாஸ்பேட்' எனும் தாதுவாக மாறி இருந்தன.பாஸ்பேட் தாதுவிற்கு, சர்வதேச சந்தையில் கிராக்கி. எனவே, பன்னாட்டு கம்பெனிகள், நவுரு தீவுக்கு வந்திறங்கின.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
சபரிமலை: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார்.
அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
🇮🇳🙏1
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்
கோவில் யானைக்கு மகாவிஷ்ணு வரம் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தலம் ஆகும். இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். 🇮🇳🙏2
அந்த யானை கஜேந்திரன் என்ற பெயருடன் யானைகளுக்
கெல்லாம் தலைமை தாங்கியது.
மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள்; உயர்நீதிமன்றம் நம்பிக்கை
மதுரை: கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக் கோரியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது.
மதமாற்ற தடைச் சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி, சட்டத்தை அரசுத் தரப்பில் அமல்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில், கிறிஸ்தவர்கள் ஈடுபடுகின்றனர்.
ஏழை ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற பல யுக்திகளை கையாள்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சில சமூக விரோத சக்திகள் போராடின. இதனால் அம்மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டன.
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.
🇮🇳🙏1
இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.
🇮🇳🙏2
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.