விவசாயிகளின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு.
வேளாண் சந்தையில் விவசாயிகளுக்கு முழுமையான விலை சென்று சேர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இடைத்தரகர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஆனால், பஞ்சாப் அரசு இடைத்தரகர்கள் வழியாக விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கும் முறையைத் தொடர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பஞ்சாப் மாநில நிதி மற்றும் உணவுத் துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அந்தச் சந்திப்பில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக குறைந்தபட்ச ஆதார விலையைச் செலுத்துவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு செலுத்தாவிட்டால் பஞ்சாபிடமிருந்து வேளாண் பொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்யாது என்றும் பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் இடைத்தரகர்களுக்கு தனியாக 2.5 சதவீத கமிஷன் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்றராபி பருவத்திலிருந்து இந்த பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் நில ஆவணத்தின் நகலை ஊராட்சி நிர்வாகியிடம் கையெழுத்து பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறலாம். 48 மணி நேரத்தில் இந்தப் பரிவர்த்தனை செயல்படுத்தப்படும்.
மேலும் ஆறு மாதங்களில் விவசாயிகளின் விளைநில விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்து
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு, நவுரு. ஜனத் தொகை, 10 ஆயிரம் பேர் மட்டுமே; 30 நிமிடத்தில் சுற்றி வரக் கூடிய நாடு.
கடந்த, 1968-ம் ஆண்டுக்கு முன் வரை, மீன் பிடித்தல், விவசாயம் என, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பின், மிகப் பெரிய, வரம் பெற்ற நாடாக உருமாறியது.
காரணம், பறவை வாழ்வதற்கு ஏற்ற இடமாக, நவுரு தீவு இயற்கையிலேயே இருப்பதால், அந்த பகுதியில் தான் அவை கழிவிறக்கம் செய்து வந்துள்ளன. அவை, 'பாஸ்பேட்' எனும் தாதுவாக மாறி இருந்தன.பாஸ்பேட் தாதுவிற்கு, சர்வதேச சந்தையில் கிராக்கி. எனவே, பன்னாட்டு கம்பெனிகள், நவுரு தீவுக்கு வந்திறங்கின.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
சபரிமலை: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார்.
அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
🇮🇳🙏1
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்
கோவில் யானைக்கு மகாவிஷ்ணு வரம் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தலம் ஆகும். இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். 🇮🇳🙏2
அந்த யானை கஜேந்திரன் என்ற பெயருடன் யானைகளுக்
கெல்லாம் தலைமை தாங்கியது.
மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள்; உயர்நீதிமன்றம் நம்பிக்கை
மதுரை: கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக் கோரியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது.
மதமாற்ற தடைச் சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி, சட்டத்தை அரசுத் தரப்பில் அமல்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில், கிறிஸ்தவர்கள் ஈடுபடுகின்றனர்.
ஏழை ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற பல யுக்திகளை கையாள்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சில சமூக விரோத சக்திகள் போராடின. இதனால் அம்மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டன.
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.
🇮🇳🙏1
இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.
🇮🇳🙏2
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.