தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு
சந்தோஷமடைதல் என்று பொருள்.
தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று பொருள்
கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ
என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை
சொற்களை பிரயோகித்தபொழுது நீரில்
உள்ள மூலக்கூறுகள் ஒரு
முறைமையுடனும் ஒழுங்குடனும்
வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறை சொற்களை
அந்த நீரில் பயன்படுத்தியபொழுது
அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக
அமைந்ததைகண்டார்.
இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின்
அடித்தளம்.
தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை
அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்ய
வேண்டும் என்று கூறுவார்கள்.
அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது
முன்னோர்களை முன்னிட்டு கூறும்
பொழுது அந்த சொற்கள் நீரின்
மூலக்கூறுகளை சென்று அடைகின்றது.
நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள்
வளிமண்டலத்தில் கலக்கின்றன.
அதாவது, சந்தோஷமடையுங்கள்
என்று நாம் கூறிய எண்ண அலைகள்
ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன்
வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.
அதீத உளவியல் (Para psychology)
என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள்
மரணத்தின் பின் மனிதனின் நிலை
பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அந்த
ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின்
ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக
நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.
மேலே கூறிய இந்த நிகழ்வை
மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை
கொல்வேன் என்று சபதம் செய்து
நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும்
சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள்
என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்து
கொள்ளலாம். அதாவது மனம் மற்றும்
எண்ண அலைகள் மறைவதில்லை
என்று புரிந்துகொள்ளலாம்.
ஆத்மா
சாவதில்லை என்ற கருத்து இந்த
இடத்தில் நினைவு கூறத்தக்கது.
நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை
பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது
என்பது நமது கோட்பாடு.
ஜடபரதர் என்ற முனிவர் சித்தி
அடையும் தருவாயில் ஒரு மான் படும்
வேதனையை நினைத்தார் என்பதினால்
அவர் ஒரு மானாக பிறந்தார் என்று
யோகவாசிஷ்டம் கூறுகின்றது.
இதனால்தான் மனமிறக்க வாயேன்
பராபரமே என்று பாடினார் தாயுமான
சுவாமிகள்.
உடல் உகுத்தவர்கள் ஆழ்மன
எண்ணங்கள் மறைவதில்லை என்றும்
அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன
என்றும் அதீத உளவியல்
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சில மகான்களின் சமாதி அருகிலோ
அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ
நாம் செல்லும்பொழுது நமது மனதில்
ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச
உணர்சிசி அவர்களின் ஆன்மீக
எண்ணங்கள் தரும் அதிர்வுகள்
காரணமாக இருக்குமென்று
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு
தர்ப்பணம் செய்யும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று நாம்
திரும்ப திரும்ப சொல்லும் எண்ண
அலைகள் நீரின் மூலக்கூறுகளில்
சென்றடைந்து நமது முன்னோர்களின்
எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது
என்று நம்புவதற்கு இமொட்டோவின்
ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.
சிரார்த்த காரியங்கள் செவ்வனே
செய்தால் வம்ச விருத்தி அதாவது
குலம் தழைக்கும் என்று தர்ம
சாஸ்திரம் கூறுகின்றது.
சந்தோஷமடையுங்கள் என்று கூறி
தர்ப்பணம் செய்வதால் நமது
முன்னோர்கள் சந்தோஷமடைந்து
நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல்
மீண்டும் நமது குடும்பத்தில்
பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு
இடமுண்டு.
நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம்
சொல்லுகின்ற வார்த்தையினை
உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்
தான் நமது சடங்குகளில் நீர் ஒரு
முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக
கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி
போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.
இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே
நமது முனிவர்கள் தமது தவ
வலிமையினால் கண்டு தெளிந்து
நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை
கண்டு நாம் மெய்சிலிர்த்து
போகின்றோம்.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடு, நவுரு. ஜனத் தொகை, 10 ஆயிரம் பேர் மட்டுமே; 30 நிமிடத்தில் சுற்றி வரக் கூடிய நாடு.
கடந்த, 1968-ம் ஆண்டுக்கு முன் வரை, மீன் பிடித்தல், விவசாயம் என, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பின், மிகப் பெரிய, வரம் பெற்ற நாடாக உருமாறியது.
காரணம், பறவை வாழ்வதற்கு ஏற்ற இடமாக, நவுரு தீவு இயற்கையிலேயே இருப்பதால், அந்த பகுதியில் தான் அவை கழிவிறக்கம் செய்து வந்துள்ளன. அவை, 'பாஸ்பேட்' எனும் தாதுவாக மாறி இருந்தன.பாஸ்பேட் தாதுவிற்கு, சர்வதேச சந்தையில் கிராக்கி. எனவே, பன்னாட்டு கம்பெனிகள், நவுரு தீவுக்கு வந்திறங்கின.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
சபரிமலை: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.
கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார்.
அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
🇮🇳🙏1
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்
கோவில் யானைக்கு மகாவிஷ்ணு வரம் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தலம் ஆகும். இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரின் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். 🇮🇳🙏2
அந்த யானை கஜேந்திரன் என்ற பெயருடன் யானைகளுக்
கெல்லாம் தலைமை தாங்கியது.
மதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள்; உயர்நீதிமன்றம் நம்பிக்கை
மதுரை: கிறிஸ்தவ மிஷினரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக் கோரியதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது.
மதமாற்ற தடைச் சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி, சட்டத்தை அரசுத் தரப்பில் அமல்படுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனு: ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில், கிறிஸ்தவர்கள் ஈடுபடுகின்றனர்.
ஏழை ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற பல யுக்திகளை கையாள்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக சில சமூக விரோத சக்திகள் போராடின. இதனால் அம்மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டன.
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.
🇮🇳🙏1
இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.
🇮🇳🙏2
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.