இயற்கைப் பண்பாட்டு வாழ்வியலுக்கு எதிராகப் #பிராமணியம் தலையெடுத்தபோது அதை வீழ்த்துவதற்கான வரலாறு #புத்தர் தோற்றுவித்தார் புத்தரியம் இருக்கும்வரை பிராமணியம் வெற்றிபெறாது என உணர்ந்தவர்கள் அதன் அடையாளமாக புத்தர் சிலைகளில் இருந்த (1/10)
தலையற்ற புத்தர் சிலையின் அடையாளம் என்பது பகுத்தறிவுக்கு முரணான மூடநம்பிக்கை வாழ்வியலைத் திணித்ததற்கான அடையாளக் கூறாகும். இந்த அடையாளத்தில் இந்து மதக் (2/10)
கண்டுபிடிப்பில் முதன்மையானது ஜாதிக் கட்டமைப்பு. தன்னை விட ஒரு தாழ்ந்த ஜாதி இருக்கிறது என்கிற ஆனவத்தை உருவாக்கித் தந்ததில் அது வெற்றி பெற்றிருக்கிறது.
நேர்மை, ஒழுக்கம், அன்பு வாழ்வியலுக்குப் பேர் போன காட்டூர் மக்களுக்கு எதிர்த்துருவமாக இடைஜாதி இந்துக்கள் வாழ்கிறார்கள்.
(3/10)
கழுதையோட குணம் உதைப்பதாக இருந்தாலும் முன்கால்கள் கட்டப்பட்டால் அது ஓடுவதைக் கூட மறந்து போயிருக்கும். அது ஓடத் தொடங்கினால் தான் அதற்கும் உதைக்கத் தெரியும் என்பதை உணரத் தொடங்கும்.“நீங்கள் கீழ் ஜாதி” என்கிற பொய் கயிற்றை மனதில் கட்டிவைத்துவிட்டால் அவர்களால் எதிர் உதை கொடுக்க
(4/10)
முடியாது என்பதையே இந்துத்துவா சொல்லி வருகிறது
“நீ கீழ் ஜாதி இல்லை” என்கிற உண்மையை ஒவ்வொருவரும் உணரும்போது உருவாகும் ஒற்றுமைஆற்றல் எவ்வளவு பெரிய ஆனவப்பட்டாளத்தையும் அடித்துத் தூள்தூளாக்கிவிடும்
என் ஊர் மக்களைக் காப்பாற்ற வக்கில்லாதபோது எல்லையில் எனக்கெதற்கு இராணுவப்பணி?
(5/10)
என்ற கேள்வியைச் சாதாரணமாக எழுப்பினால் #antiindian என்ற பெயரைச் சூட்டிவிடுவார்கள். ஆனால் அப்படியான பெயர் சூட்டலுக்கு வாய்ப்பே கொடுக்காமல் நியாயங்கள் அடுக்கப்பட்டுள்ளன.
எப்போதுமே காவல்துறை அதிகாரமும் ஆதிக்கஜாதியும் மட்டுமே ஈகோ பார்த்துக் கொண்டிருக்கும்.அதற்கு எதிர்வினையாக (6/10)
#காட்டூர்மக்கள் சுயமரியாதை பார்க்கத் தொடங்கினால் என்ன நிகழும்? என்பதற்கான சூழல்கள் தெளிவாகத் திரைக்கதையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“காட்டூர் மக்களுக்காக ஒரு பேருந்தும் நிற்காது என்ற பிரச்சினையை தீர்க்க போராடுற இளைஞனுக்கு எதிராக ஜாதி ஆதிக்கம், முதலாளித்துவம் இவை இரண்டையும் (7/10)
பேசத் தொடங்குகிற கதை இறுதியில் தனிமனித ஆவன சிந்தனை கொண்ட காவல் துறை அதிகாரி என்ற ஒற்றை எதிரியிடம் முற்றுப்பெறுகிறது. ஜாதி ஆதிக்கம், முதலாளித்துவம் இவை இரண்டையும் விட அரசு அதிகாரம் கொடூரமானது என்பதைக் கதையாக்கிக் கொள்கிறார் #மாரிசெல்வராஜ் .. (8/10)
இந்தியாவின் அதிகார மையத்தை ஜாதிக்கட்டமைப்பும் முதலாளித்துவமே நிர்ணயிக்கிறது என்கிற உண்மைக் கூற்றிலிருந்து கதையாசிரியராக மாறுபட இயக்குநருக்கு உரிமையுண்டு.
தான் எடுத்துக் கொண்ட கதைக்கு எவ்வாறு திரைக்களம் அமைப்பது, அதற்குச் சாதகமான கதாபாத்திரங்கள், வாழ்விடங்கள், உடன் வாழ் (9/10)
உயிரிகள் என அனைத்தையும் எவ்வாறு ஒருங்கிணைப்பது உள்ளிட்ட திரைமொழி இலக்கணத்தை வகுத்திருக்கிற இயக்குநர் தமிழ்த் திரையுலகின் புதையல்.. இந்துத்துவா அடையாளப் பெயர்களால் நாங்கள் சூழப்பட்டிருக்கிறோம். ஆனால் எங்கள் வாழ்வியல் சுயமரியாதைக்கானது என்பதை அழுத்தம் சொல்லியிருக்கிறது #கர்ணன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஜி.டி.நாயுடு அவருடைய வழக்கு ஒன்று அப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அதை ஒரு வழக்கறிஞராக ஏற்று நடத்தி முடித்துக் கொடுத்தவர்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறைய பணத்தை கொண்டு போய் பாபாசாகேப்புக்கு கொடுத்திருக்கிறார்
ஜி.டி.நாயுடு.
பாபாசாகேப் சொன்னாராம் “இந்தப் பணம் எனக்கு வேண்டாம், அதற்கு பதிலாக நான் எப்போது தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயண செலவையும் அங்கே நான் தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று.