#கர்ணன் திரைப்படத்தின் களம் 1990களில் அமைந்துள்ளது.. படம் பார்க்கும் போது புரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால் இந்த இணையத்தில் தான் தமிழகம் பெரியார் மண், கருணாநிதி மண், திராவிட மண்ணாக இருந்துள்ளது.. நிஜத்தில் வேறாக இருந்துள்ளது;
தலீத் மக்களின் குரலை லாவகமாக ஒடுக்க இவர்கள் பயன்படுத்தும் வார்த்தை தான் சமூகநீதி மண், திராவிட மண்.. ஆனால் உண்மைலயே பிராமணர்களின் ஆதிக்கத்தை தான் ஒழித்தார்களே ஒழிய சாதிய ஆதிக்கத்தை அல்ல! இடைநிலை சாதிகளின் ஆதிக்கம் ஓங்கியது தான் இவர்களது சாதனை.
இந்த படத்தில் அழகம் பெருமாள் கதாப்பாத்திரம் கழக தலைவர்களின் இயல்பை பிரதிபலிப்பதாகவே உள்ளது.. வெளியில் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என வேஷம் போட்டுக்கொண்டு மனதிற்குள் கீழ் சாதி துவேஷத்தை ரசிப்பது என அசலாக கதாப்பாத்திர வார்ப்பு உள்ளது
இங்கு ஒரு ஒடுக்கப்பட்டவனின் குரல் உயர்ந்தால் அதிகாரம் எந்தளவிற்கு சென்று அந்த குரலை நசுக்க முயலும் என்பதையும் மாரி தெளிவாக காண்பித்துள்ளார்.. அந்த அதிகாரம் இவர்கள் கூறும் திராவிட கழகங்களிடம் தான் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பஸ்ஸை நொறுக்குவது முதற்கொண்டு காவல் நிலையத்தை சூறையாடுவது வரை... அதிகாரத்திற்கு எதிரான வெளிப்பாடாகவே தெரிந்தது..
தமிழகம் சமூகநீதி மண், திமுகவால் பண்பட்ட மண் என இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் furnitureஐ சல்லி சல்லியாக மென்மேலும் நொறுக்க வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் ❤️ #Karnan
அதன் வரலாறு ஒன்றும் சொல்லி கொள்ளும்படி கடந்த 30 ஆண்டுகளாக இல்லை.. மக்களுக்கான திட்டங்களை இந்த திராவிட திருடர்கள் தீட்டவே இல்லை என நாங்கள் கூறவில்லை! தீட்டிய திட்டங்களில் பெருகி போன கையாடல்களால் தான் திராவிட கட்சிகளை வெறுக்கின்றோம்.
திராவிடம் என்பது ஒரு இனக்குழு பெயரே அன்றி..அது கொள்கையே அல்ல!! அது பேசும் சமூகநீதியை பல ஆண்டுகளுக்கு முன்பே கம்யூனிசம் பேசிவிட்டது.. திராவிடத்தின் கொள்கை என்பது அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ..அதுவே அதன் கொள்கை..
உண்மையிலேயே திராவிடம் ஓர் சிறந்த கொள்கை என்றால் இன்று தமிழகத்தின் ஒப்பீடு உலக நாடுகளின் தலைநகரங்களுடன் இருந்திருக்க வேண்டும்! ஆனால் பஞ்சத்தில் அடிப்பட்ட பீகார், வங்கத்துடன் ஒப்பீடு செய்யும் போதே புரிகிறது திராவிடம் காலாவதியான கொள்கை என்று..
IBC tamil யூட்யூப் சேனலில் முதல்வன் 2021 பார்த்தேன்.. பட்டிமன்ற பாணியிலான நிகழ்ச்சி.. அதுல @sindhan கலந்துகிட்டார்.. எதிர்தரப்புல இருக்குறவர், தமிழகம் அனைத்து தளங்களிலும் பின்தங்கி இருக்குனு சொன்னதுக்கு.. பிஹாரை பார், மற்ற மாநிலங்களை பார்.. நாம் மேல் என சிந்தன் கூறினார்
அதே எதிர்தரப்பை சேர்ந்தவர் தேசிய கல்லூரிகள் தர பட்டியலில் நமது தமிழக கல்லூரி நிறுவனங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது என சொன்ன போது.. நமது சிந்தன் தோழர் ஆவேசத்துடன் இவ்வாறு கூறுகிறார் "முன்னனியில் இருக்கும் IITs மட்டும் ஒழங்கா? உலக கல்லூரி நிறுவனங்களுக்கு முன் அவை ஒன்றுமே அல்ல!"
இங்கு தான் நமக்கு ஓர் கேள்வி எழுகிறது.. பொதுவாக தமிழகம் பின்தங்கியுள்ளது என சொல்லும் போது பிஹாரை பார், குஜராத்தை பார் என சொல்லும் இவர்கள், NIRF போன்ற கல்லூரி தரவரிசையை மட்டும் ஏன் பார்ப்பதில்லை?! அதற்கு மட்டும் ஏன் உலக கல்லூரி நிறுவனங்களை பார் என்கிறார்கள்?!
#3RevolutionaryYearsOfMNM
மக்கள் நீதி மய்யம் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய நாளில், அதன் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை இந்த ட்வீட்டின் quote retweetல் பதிவிடுகிறேன்
#3RevolutionaryYearsOfMNM
சாதியற்றவர் என்கிற சான்றிதழை வாங்கிய முதல் தமிழரை பாராட்டிய முதல் தலைவர் கமல்ஹாசன் மட்டுமே
#3RevolutionaryYearsOfMNM
ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரின் போதும் அரசுக்கு ஆக்கபூர்வ ஆலோசனைகள் வழங்குவதுடன் கேள்விகளையும் கேட்ட வண்ணம் இருந்துள்ளது @maiamofficial