குஜராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகள் மொத்தம் ஆறுதான்.
சில வலைத்தளங்கள் 17 என்று காண்பிக்கும். உண்மை என்னவென்றால் மீதமிருக்கும் 11 கல்லூரிகளில் அரசு நிர்வாகம் மட்டுமே இருக்கும். அரசு நிதி ஒதுக்காது. அவை சுயநிதி கல்லூரிகள் போல இயங்கும்.
எடுத்துக்காட்டாக AMCMET மருத்துவக்கல்லூரியை துவங்கியது அகமதாபாத் மாநகராட்சியின் ட்ரஸ்ட். ஆனால் அங்கு செமஸ்டர் கட்டணம் ரூ. 3,65,500/-. தவிர மேனேஜ்மென்ட் கோட்டாவும் இருக்கும்.
கொரோனா தொடர்பான மருத்துவ சாதனங்கள் எதையும் மாநிலங்கள் வாங்க கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டு, கொரோனா இந்தியாவில் நுழைந்து 8 மாதங்களுக்கு பிறகு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கான டென்டரை அறிவித்தது சோம்பேறி மோடி அரசு!