Touring talkies மற்றும் இதர சினிமா சம்மந்தப்பட்ட youtube channelகளை பார்த்தால் தெரியும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாத்துறை கடந்த பத்தாண்டுகளில் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகியதுன்னு.
கந்து வட்டி, தற்கொலை, தயாரிப்பு சிக்கல், அதிக வரி, etc etc என்று பல தொல்லைகள் சந்தித்திருக்கிறது அந்த துறை.
பத்தாண்டுகளுக்கு முன் வந்த படங்களின் எண்ணிக்கையும் தற்போது வெளிவரும் படங்களின் எணணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே உண்மை புரியும்.
திமுக ஆதிக்கம் செலுத்தியது என்ற பொய் narrativeஐ நம்பி மோசம் போன முக்கியமான துறை சினிமாத்துறை. இன்றைக்கு அத்தனை சினிமா பிரபலங்களும் வரித்துக்கட்டிக்கொண்டு திமுக தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பதை பார்த்தால் அதிமுக ஆட்சி அகல வேண்டும் என்று அதிக ஏக்கத்தில் இருந்தது அவர்கள் தான் போல.
கழக ஆட்சியில் சினிமாத்துறை சீரமைப்பு செய்யப்பட வேண்டும். அந்த துறை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற வேண்டும்.
நல்ல வேளை அந்த அதிமுக பெண் திமுக கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக வந்தாங்க. இதுவே அதிமுக வில் அழையா விருந்தாளியா வந்த ஒரு பெண்ணுக்கு என்ன ஆச்சுனு ஒரு குட்டி கதை சொல்றேன் கேளுங்க...
1987 எம்ஜிஆர் இறந்து பிணமாக கிடக்கிறார் ராஜாஜி ஹாலில். அதுவரை அவரை incapable to be CM, அவரை தூக்கிட்டு என்ன முதலமைச்சர் ஆக்குங்கனு ராஜீவ் காந்திக்கு கடிதம் மேல் கடிதம் எழுதிய முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரும், முன்னாள் கொ. ப. செவும் அந்த ஹாலுக்கு வந்தார்
இந்த அம்மா வை யாருடா உள்ள விட்டது என்று அங்கிருந்தவர்கள் சலசலக்க நேரா தலைமாட்டில் போய் நின்று கொண்டார். அவரை அப்புறப்படுத்த அவரின் எதிர் கோஷ்டி அவரின் பின் புறத்தில் ஊசியால் குத்தியவாறு இருந்தது. ரத்தம் சொட்டச்சொட்ட அவர் அந்த இடத்தை விட்டு கடைசிவரை நகரவில்லை.
தமிழருவி மணியன், மதுவந்தி, லதா ரஜினிகாந்த் போன்றவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்கின் கீழ் கைது செய்ய சட்டத்தில் ஏதும் இடமுண்டா??
உங்கள் வீட்டில் வயது முதிர்ந்தவர் இருந்தால் அவரை சுரண்டி பிழைக்க நினைப்பீர்களா இல்லை ஓய்வெடுக்க சொல்வீர்களா??
அதுவும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்த ஒருவரை தங்கள் சுயலாபத்திற்காக படத்தில் நடிக்க வைப்பது, அது கூட பரவாயில்லை. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் மக்களை அனுதினமும் சந்திக்க வேண்டிய அரசியலில் ஈடுபட வைப்பீர்களா??
தங்கள் சுய லாபத்திற்காக ஒரு மனிதனை கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உறிந்து தள்ளுவது.சக்கையாக பிழிந்து வீசுவதை உண்மையாக ரஜினி மீது அன்பு வைத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
இதை திமுக vs ரஜினியாக மாற்றத் துடிக்கும் பார்ப்பனருக்கும் பார்ப்பன அடிவருடிகளிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்
நேற்றிலிருந்து உடன்பிறப்புகள் எல்லாரும் அக்கா Rekha Priyadharshini அவர்கள் 24 வயது இருக்கும் போதே மேயர் ஆனார் என்று பதிவுகளை பகிர்ந்திருந்தனர். அவர் ஒரு பட்டியலின சமூகம் என்று தனியாக குறிப்பிட வேண்டியதில்லை.
அதில் பலர் குறிப்பிட மறந்த பெயர் அய்யா வீரபாண்டியார் உடையது. ஆம் அக்காவின் திறமைகளை இனம் கண்டு தலைவர் கலைஞரிடம் மேயர் பதவிக்கு பரிந்துரை செய்தவர் அவர்தான்.
இன்றும் அக்கா அய்யாவின் மாணவராக தான் தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறார்.
இன்று ஆண்ட பரம்பரை பெருமை பேசும் சிலரை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று மாங்கா பாய்ஸ் அக்னி சட்டி என்றும் முற்போக்கு மொண்ணைகளால் கூறப்படும் சமூகத்தை சேர்ந்தவர் தான் அய்யா வீரபாண்டியார்.
மநு தர்மத்தை எதிர்ப்பேன் என்பார்கள் ஆனால் மநு தர்மத்தை ஆதரிக்கும் கமல்ஹாசனை கண்டிக்க மறுப்பாளர்கள்.
அனு உலையை எதிர்ப்பார்கள் ஆனால் கூடங்குள அனு உலையை ஆதரிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு உறவாடுவார்கள். ஏன் சில திமுக தலைவர்களிடம் கூட இவர்கள் குழைவார்கள்.
குறைந்தபட்சம் தங்களின் கொள்கையின்பால் நிற்க கூட முடியாமல் எல்லா பக்கமும் கம்பு சுற்றும் இவர்கள் திமுக வெறுப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் இணைவது ஒன்றும் தற்செயலானது அல்ல.
தமிழருவி மணியன் தொடங்கி பழ. கருப்பையா வரை இது நீள்கிறது. இன்னும் இது நீண்டு கொண்டே இருக்கும்.
திமுக வை ஏற்க மனமில்லாமல் எடப்பாடிக்கு கூட முட்டு கொடுக்க இவர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டுண்ணிகளை போல் திமுகவுடன் இணைந்துவிடுவார்கள். இதை தான் கடந்த சில நாட்களாக நாம் பார்த்து வருகிறோம். இவர்களை திமுக வினர் இனம் கண்டு ஒதுக்கிட வேண்டும்.
- பிடி வாரன்ட் கொடுக்கப்பட்டது
- எந்த வழக்கில் அவர் கைது. செய்யப்படுகிறார் என்று தெளிவாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
-மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
- காலை 6.45 மணிக்கு கதவை தட்டியிருக்கிறார்கள் போலீஸார்.. கதவை திறக்காமல் காவல்துறையினரின் பணிக்கு இடையூறு செய்ததோடு போலீஸார் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார் அர்னாப். அதன் பின்னே அவரை இழுத்து சென்றுள்ளது போலீஸ்.
- அர்னாபிற்கு வயது 47.
- அர்னாபால் நாட்டிற்கு விளைந்த நன்மை ஒன்று கூட இல்லை.
- மத்தியில் பாஜக அரசு.
அப்படியே 2001க்கு செல்வோம்.
அம்மையார் ஜெயலலிதா ஆட்சி.