குடிக்கனும், தம் அடிக்கனும், ஜாலியா இருக்கனும், கண்ட நேரத்துக்கு சாப்டனும், கண்ட நேரத்துக்கு தூங்கனும்..
இதையெல்லாம் யாரும் சொல்லாமையே செஞ்சிடுவான்.
வயசு இருக்குற வரை உடம்பு தாங்கும். வயதாக வயதாக உடல் தனது வேலையை காட்டத்தொடங்கும்.
இவனுக்கு வயசாகுது, இவன் ஆடின ஆட்டத்துக்கு தான் உடல் பிரச்சனை தருகிறது என்பதையெல்லாம் விட்டுவிட்டு..
இத்தன நாள், நல்லா தானே இருந்தேன். இப்ப ஏன் பிரச்சனை வருதுன்னு டிப்ரஸ் ஆவான்.
இவன் ஒரு மருத்துவர் கிட்ட போவான். அவரு இதுதான் உன் பிரச்சனை. இந்த உறுப்புல இந்த பிரச்சனை இருக்கு.
இந்த மருந்தை சாப்பிடு சரியாகும்ன்னு சொல்லுவாரு.
முதல்ல சாப்பிட ஆரம்பிப்பான். எவனாச்சும் சொந்தக்காரன் வாட்சாப் பாத்துட்டு, இதுக்கு ஏன் மாத்திர... இதை மாத்திரையே இல்லாம குணப்படுத்தலாமே என்று சொல்வான்.
உடனே, நம்மாலு, திஸ் வாட் ஐ வான்ட். என் உடம்பு மருந்தில்லாமயே சரியாகும்.
ஆடு மாடு பல்லு விளக்குதா? இல்ல டைனோசர் தான் சிசேரியன் பண்ணிச்சா.. எல்லாம் பன்னாட்டு சதியென ஆரம்பிப்பான். அப்டியே, இயற்கை விவசாயம், ஆர்கனிக், இலுமினாட்டி, ஸ்வஸ்திக், ஹிட்லர் எங்கள் வழிகாட்டி என்று போய்க்கிட்டே இருப்பான்.
திடீர்னு ஒடம்பு மோசமாகும்.
திரும்ப ஆப்பரேசன் என ஏதேனும் தனியார் மருத்துவமனைக்கு போவான். (அரசாங்க மருத்துவமனைக்கு போக மாட்டோம். ஏன்னா அங்க இலவசம்லா).
ஆப்பரேசனுக்கு சில லட்சங்களை செலவழிப்பான். அப்புறம் மீண்டும் ஆரம்பிப்பான்.. பார்த்தீர்களா மருத்துவ கொள்ளையை, கார்ப்பெரட் சதி, பன்னாட்டு சதி, etc..
இன்னொரு சொந்தக்காரன் வருவான். இதுக்கு போய் ஏன் கத்தியெல்லாம் வச்சிக்கிட்டு, நமக்கு தெரிஞ்ச ஒரு ஓலர் இருக்காரு.. கைய வச்சே சரி செஞ்சிடுவாருன்னு சொல்லுவான்.
அந்த ஓலருக்கு தண்டம் அழுது முடிச்சி பார்த்தா, உடம்பு படுமோசமா ஆகி இருக்கும்.
மீண்டும் ஒரு தனியார் மருத்துவமனையில் இலட்ச கணக்கில் செலவு செய்து, சிகிச்சை பலனிக்காமல் செத்துப்போவான்.
இவன் செத்ததுக்கு யார் காரணமென்று கேட்டால்.. என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சீமானின் தந்தை இறப்பிற்கு ஆறுதல் சொல்ல தலைவர் @mkstalin அவர்கள் தொலைப்பேசியில் பேசியதை கேட்டேன்.
அவரின் மீதும், தலைவர் கலைஞர் மீதும், பேரறிஞர் அண்ணா மீதும் வன்மமாக பேசியவர் சீமான். ஆனால், அதை எதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதை பலரும் வியந்து பாராட்டுகிறார்கள். ஆனால், தலைவர் மு.க. ஸ்டாலின் என்றுமே ஒரு சிறந்த அரசியல் பண்பாளராக, சிறந்த மனிதராக தான் இருந்திருக்கிறார்.
என் திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி “அரசியல் பண்பாளர் மு.க. ஸ்டாலின்” எனும் தலைப்பிலான கட்டுரை தான்.
பல்வேறு காலக்கட்டங்களில் அவரிடம் வெளியான அரசியல் நாகரீகம், அரசியல் பண்பு, மனிதநேயம், நிதானம் போன்ற பல பண்பு நலன்களை கொண்ட சம்பவங்கள் தொகுக்கப்பட்ட கட்டுரை அது.
அந்த கட்டுரை திராவிட வாசிப்பு - The Dravidian Herald மின்னிதழிலும் வெளியானது.
இத்தனை ஆற்றல் வாய்ந்த தலைவரான ஸ்டாலின் அவர்களுக்கு இத்தனை நாள் முதல்வராக வாய்ப்பு தராமல் போய்விட்டோமே என்கிற குரல்களை கேட்க முடிகிறது.தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளையே 2018 க்கு பிறகு அறிந்தவர்கள் தான் அதிகம். இன்றைய தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆற்றல் குறித்தும் பலருக்கு தெரியாது.
நானும் அவரை பற்றி வாசிக்க ஆரம்பித்த பின் தான் எத்தனை பெரிய தலைவர் அவர் என்பதை உணர்ந்தேன். அவரது ஆற்றல், பண்புநலன், உழைப்பு, கனவு ஆகிய அனைத்துமே மிகப்பெரியவை. அதை நாம் நிச்சயம் உணர வேண்டும். உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நம் தமிழ்நாட்டுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை
அனைவருக்கும் உணர்த்த வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது, அவரைப் பற்றி வாசிப்பதும், எழுதுவதும் தான்...
முதல்வர் @mkstalin அவர்கள் குறித்து வாசிக்க வேண்டிய முக்கிய புத்தகங்கள் என எதை சொல்வீர்கள்?
நான் அவரைக் குறித்து எனது “திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின்” புத்தகத்திற்காக
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய கோவை மகேந்திரன் அவர்களின் பேட்டியை பார்த்தேன்.
1) தோல்விக்கு நீங்கள் அனைவரும் தான் காரணம். நீங்களா ராஜினாமா பண்ணுறீங்களா? இல்ல நான் பண்ண வைக்கவா என்று கமலஹாசன் கேட்டதாக கூறுகிறார்.
2) இது என் கட்சி என்று கமல் சொல்லி இருக்கிறார். கட்சிக்கு அவர் தான் நிரந்தர தலைவர் என்று தீர்மானம் போட்டதை நினைவு கூறுகிறார்.
3) தீர்மானங்கள் எல்லாம் கட்சியின் பொதுச்செயலாளர்களுக்கு கூட தெரியாது. மீட்டிங் நடப்பதற்கு முன்பு, இந்த இரண்டு தீர்மானத்தை நீங்க படிச்சுடுங்க, அந்த இரண்டு தீர்மானத்தை நீங்க படிச்சுடுங்க என பிரித்து கொடுத்து படிக்க வைத்துவிடுவார்கள் என்கிறார்.
Kubler - Ross Theory. குருநாதர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு உளவியல் பாடம் இது. பல விசயங்களுக்கு இதை பொருத்திப்பார்க்கலாம். இது தியரியாக பார்த்தால் “துக்கத்தின் ஐந்து நிலைகள் (5 Stages of grief)” என்று சொல்வார்கள்.
ஒரு விரும்பத்தகாத அல்லது ஒரு துக்க நிகழ்வு நிகழ்கிறது.
இப்படி யாராவது வருவார்கள். அதிமுக ஆட்சியில் எப்படி திமுகவுக்கு மட்டும் அட்வைஸ் தந்தார்களோ, அதுப்போல பன்மடங்கு இப்போது தருவார்கள்.
அவர்களின் பிரச்சனை, நீங்கள் எப்போதுமே பேசிக்கொண்டிருப்பது தான்.
சாதி வெறியுடன் “பேசாமல்”, “அமைதியாக” அதிமுகவுக்கு ஓட்டுப்போடுவது அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் தராது. நாம் பேசுவது தான் அவர்களின் பிரச்சனை.
திமுக ரொம்ப யோக்கியமா? ஊபிஸ், மண்டை வீங்கிகள், கட்சி அடிமைகள், கொத்தடிமைகள் என உங்களை உசுப்பேத்திக்கொண்டே இருப்பார்கள்.
இவர்களை தேர்தலுக்கு முன்னர் எப்படி டீல் செய்தீர்களோ,அதேப்போல இப்போதும் டீல் செய்யுங்கள்.
திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.திமுக தலைவர் எந்த குறுக்கு வழியையும் நம்பாமல் மக்களை நம்பி ஜெயித்திருக்கிறார்.
திமுக தமிழ்நாட்டை கைப்பற்றவில்லை.தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறது.
நானும் அலுவலக நண்பரும் மதிய உணவருந்த சென்றோம். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, பக்கத்து டேபிளில் மூன்று இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. மூவருமே இந்தியர்கள். ஆனால், ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் அதிகமாக பேசியது ஒரு தமிழ் இளைஞன் தான்.
திமுக ஜெயித்தது குறித்து, கருணாநிதி புதிய சட்டமன்றம் கட்டினார், ஜெயலலிதா அதை மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவமனையாக மாற்றிவிட்டார் என்றார். சரி, அம்மா கன்னிப்போல என நினைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். என் நண்பர் ஒரு பாஜக ஆதரவாளர். கேரளா காரர்.
எதுவும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டே, காதை மட்டும் பக்கத்து டேபிளில் வைத்திருந்தேன்.
அந்த தமிழ் இளைஞர், திக எது? திமுக எது? பெரியார் என்ன செய்தார்? கோவிலுக்குள் யாரையுமே விடாத போது, போராடி உரிமையை வாங்கித்தந்தவர் பெரியார். அவர் ஒரு சீர்திருத்தவாதி.