முதியோர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இன்று பல்வேறு திட்டங்களை, அறிவிப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கான உதவிகளைப் பணமாகப் பெறவும், மருத்துவ சலுகைகள், பயணக் கட்டணத்தில் சலுகை, ஆலயத்தினுள் நடக்க முடியாதவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் என 1/n
இப்படி பல அம்சங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் பழங்காலத்தில் இருந்தே ஓர் அறமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வயதில் முதியவர்களாக இருப்பவர்களால் வெகு தொலைவு நடக்க இயலாது. அவர்களுக்கு திருக்கோயில்கள் உதவி செய்திருக்கின்றன. 2/n
இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பண்டை நாளில் திருக்கோயில்களில் அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்தன.
#கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் #அறச்சாலை இருந்ததாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 3/n
#திருவீழிமிழலை வீழிநாதேசுவரர் கோயிலில் "திருநாவுக்கரசர் மடம்" என ஒரு மடம் இருந்ததை அறிய முடிகிறது.
#திருவாரூர் ஆந்தக்குடி சோமேசுவரர் கோயிலில் காணும் கல்வெட்டில் "தியாகவினோதன் சாலை" குறிப்பிடப்படுகிறது. இதில் உணவு உண்ணும் தபசிகளுக்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது
அதே சத்திரத்தினை பிற்காலத்தில் இராஜராஜசோழன், விக்கிரமசோழன் போன்ற மன்னர்கள் தொடர்ந்து பராமரிக்கவும், அங்கு தங்குபவர்களுக்கு உணவு அளிக்க தானம் அளித்தனர். 5/n
இதில் தங்கும் ஒவ்வொருவருக்கும் அரிசி, காய்கறி, புளி, நெய், தயிர், பாக்கு, வெற்றிலை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டதைக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.
திருக்கோயிலுக்கு வெளியூரிலிருந்து வந்து பலர் வழிபட்டனர்.
இவர்களை #ஆபூர்விகள் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன... 6/n
இவர்கள் கோயிலில் வந்து தங்கிச் செல்லும் பொழுது உணவு வழங்கப்பட்டது. இதனைக் கல்வெட்டுகள் #சட்டிச்சோறு எனக் குறிக்கின்றன.
இவ்வாறு இந்த நற்செயலுக்காக அளிக்கப்பட நிலம் #சட்டிச்சோற்றுப்புறம் என அழைக்கப்பட்டதை #திருவாரூர் மாவட்டம் #நன்னிலம் அருகே உள்ள #திருப்பனையூர் சௌந்தரேசுவரர் கோயிலில் காணப்படும் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 8/n
#திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது சிவயோகிகளுக்கும், தபசியர்களுக்குமாக 1000 #சட்டிச்சோறு வழங்க தானம் அளிக்கப் பெற்றதை இரண்டாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 9/n
வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் திருக்கோயில்களில் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன.
இதனை "ஆதுலர் சாலை" எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
திருக்கோயில்களில் மடங்கள் இருந்தது போன்று, அருகிலேயே சத்திரங்களும் அமைக்கப்பட்டன... 10/n
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் சோழ நாட்டிலிருந்து இராமேசுவரம் செல்லும் பாதையில் 20க்கும் மேற்பட்ட சத்திரங்கள் அமைக்கப்பட்டதை அறிய முடிகிறது. திருவையாறில் காவிரிக் கரை அருகில் உள்ள "செவ்வாய்க்கிழமை படித்துறை" சத்திரம் மன்னர் சிவாஜி 1852ல் கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது.
#தஞ்சை அருகே ஒரத்தநாட்டில் இரண்டாம் சரபோஜி மன்னரால் (1798-1832) அமைக்கப்பட்ட "முத்தம்மாள்" சத்திரத்தில் கருவுற்ற பெண்களையும், சிறு கைக்குழந்தைகளையும் தனி கவனத்துடன் பார்த்துக் கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கைக் குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது... 12/
1869-ஆம் ஆண்டில் இங்கு மருத்துவமனையும், பள்ளிக்கூடமும் நிறுவப்பெற்றன.
மாணவர்களுக்கு இருவேளை உணவு வழங்கப்பட்டது. அவர்கள் தேய்த்துக் குளிக்க நல்லெண்ணெய், சீயக்காய் வாரம் இருமுறை அளிக்கப்பட்டது.
தல யாத்திரையாக வரும் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது... 13/n
முத்தம்மாள் சத்திரத்தில் காலை 9 மணிக்கு மேல் உணவுப் பொருளும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், அதன் பின்னர் நடமாட இயலாதவர்களுக்கு வீதிதோறும் உணவு எடுத்துச் சென்றும் வழங்கப்பட்டது.
ஊரில் உள்ள முதியவர்கள் இச்சத்திரத்தில் தொகைப் பெற்றனர்... 14/n
கோயிலின் சார்பில் இருந்த அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை வயது முதிர்ந்தோர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் வேண்டிய உணவு, மருத்துவ வசதி போன்றவைகளை அளிக்கும் கடமையை மற்றும் மக்களுக்கு வேண்டிய நற்பணிகளைச் செய்து வந்தன என்பதை கல்வெட்டுகளால் அறிய முடிகிறது...
நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பல்லவர் காலத்தில் 'இராசசிம்ம பல்லவன்' ஒரு தூதுவனை சீனத்திற்கு அனுப்பினான். சீனப் பேரரசன் அவனை அன்போடு வரவேற்றான். அவனை மிகுந்த கவனத்துடன் உபசரிக்கும்படித் தன் அதிகாரிகளுக்கு ஆணையிட்டான்.… twitter.com/i/web/status/1…
தமிழ் இலக்கியங்களில் வேளாண்மைத் தொழில்நுட்பங்கள்...!
தமிழ் இலக்கியங்கள் தொன்மைச் சிறப்புடையது. நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கது. மக்களின் வாழ்க்கை முறைகளை எடுத்துக்கூறும் கருத்துக் கருவூலமாகவும் உள்ளது.
ஆழமாக உழவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்த உழவர் பெருமக்கள், எத்தனை முறை உழவேண்டும் என்பதிலும் கவனமாக இருந்துள்ளார்கள்.
உழவு செம்மைப்படுவதற்கு இடத்திற்கிடம் உழவின் எண்ணிக்கை மாறினாலும் கூட, பொதுவாக நான்கு உழவோடு பயிர்த்தொழில் செய்வது என்பது இன்றும் நடைமுறையில்… twitter.com/i/web/status/1…
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (2/2)
மேனாட்டார்க் குறிப்பு:
அராபியரான 'அல் இத்ரீஸ்' என்பவர் தென்னிந்தியாவில் மன்னர்கள் இறந்தால் எப்படி அடக்கம் செய்கிறார்கள்...
என்பதைப் படம் பிடித்துக்காட்டுகிறார். இவர் பொ.பி 1100- ல் பிறந்தவர்.
அல் புரூனிக்குப் பிறகு (பொ.பி 1048) தென்னிந்தியாவைப் பற்றித் தெளிவான குறிப்புக்களை வழங்கியவர்.
இவர் சிசிலிய மன்னன் ரோஜர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உலக வரலாற்றை எழுதியவர்.
இவர் உலகப் புவியியல் வரலாற்றை 70 பாகங்களாக எழுதினார்.
உலகநாடுகள் அனைத்தையும் 20 ஆண்டுகளுக்கு மேல் நேரில் சென்று ஒரு புதினத்தைப் போல் எழுதி வைத்துள்ளார்.
இந்நூல் அரபி மொழியில் 'கிதாப் நஸ்ஸகத்துல் முஸ்தாக் பி.இக்த தாகில் அபாக்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (1/2)
மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர். போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயினால் இறந்தால்...
வாளாற்படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்கவேண்டி, பிணத்தை வாளால் வெட்டிப்புதைத்தனர் (புறம்: 93).
பாடையைக் 'கால்கழி கட்டில்' என அக்காலத்தில் வழங்கி வந்தனர். இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி, மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என #ஒளவையார் குறிக்கிறார் (புறம்: 286)
இதை 'தூவெள்ளறுவை போர்த்தல்' எனப் புறநானூறு 291-ஆம் பாடல் சுட்டும்.
#பறைகொட்டுதல் - சாவில் பண்டு தொட்டுப் பறைகொட்டும் மரபு இருந்ததென்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.
#பெருந்தொகை 710-ஆம் பாடல் இதை 'பூசன் மயக்கம்' என்று குறிக்கிறது...
புலால் உண்ணாமை, உண்ணா நோன்பு ஆகிய வழக்கங்களைத் தமிழ்நாட்டிற்குள் சமணர்களே கொண்டுவந்தனர்.
அமாவாசை, பௌர்ணமி ஆகிய 'உவா', நாட்களில் பிச்சைக்கு வரும் சமண பௌத்தத் துறவிகளுக்கு முதல்நாள் உண்டு எஞ்சிய பழைய சோற்றை இடுவதில்லை.
இந்த இருநாட்களிலும் பழைய சோற்றை விலக்கும் வழக்கமும் இப்படித்தான் பிறந்தது.
இதுவே பௌத்தத் துறவிகளுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்தது.
நின்றுகொண்டுதான் உண்ண வேண்டும், உண்ணும்போது பேசக் கூடாது என்பன போன்ற சமணத் துறவியர்களின் வழக்கத்தை அப்பர் தம் தேவாரத்தில்...
கண்டித்திருக்கிறார்.
பழந்தமிழ்ச் சமூகம் பிற நாகரிகங்களிலிருந்து வந்த உணவு வகைகளை 'பிட்ஸாவும் கோக்கும்' போலப் போலித் தனமாக வரவு வைக்கவில்லை. மாறாகத் தன்மயமாக்கியே
எடுத்துக்கொண்டது.
புலாலை மையமிட்ட குஸ்கா, கைமா, பாயா, கோளா போன்ற உணவு வகைகள் உருது பேசிய நவாபின் படையினரோடு...