சிஷ்ய இந்த வாரம் நாம டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி விரிவா பார்க்கப்போறோம்,
சரி குரு fulla படிச்சுருவோம்.
காப்பீடு (INSURANCE) என்பது தனிநபர் (Insurer) மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு (Insurance Company) இடையே உள்ள சட்டபூர்வமான ஒப்பந்தமாகும்.
வாழ்க்கையில், எதிர்பாராத செலவுகள் எப்படி வேண்டுமாலும் வரலாம். நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இருந்தாலும், இந்த திடீர்
செலவுகள் உங்க சேவிங்ஸ் குறைத்து விடும். சில சமயம், இந்த மாதிரி நிகழ்வுகளை நீங்கள் சரியாக பிளான் செய்யலைன்னா கடனாளி கூட ஆகிவிடும்.
இந்த காப்பீடு திட்டங்கள் மூலமாக பல நன்மைகள் உள்ளன. இன்சுரன்ஸ் என்பது உங்களையும் உங்களது குடும்பத்தையும் நிதி ரீதியாக பாதுகாக்க ஒரு சிறந்த வழி.
அதே சமயம் இந்த மாதிரி நிகழ்வுகளை நீங்கள் முன்னரே திட்டமிட முடியாது என்றாலும், உங்கள் உடல்நலம் அல்லது சொத்துக்களின் சில அம்சங்களைப்
பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு வகையான காப்பீட்டு திட்டங்கள் உள்ளன.
சில பிரபலங்கள் தங்கள் உடல் பாகங்களை காப்பீடு செய்துள்ளனர்:
இந்தியாவில் உள்ள காப்பீட்டு வகைகள்: 1. பொது காப்பீடு (General Insurance)
இந்தியாவில் உள்ள சில பொது காப்பீட்டு வகைகள்:
- மருத்துவ காப்பீடு (Health)
- மோட்டார் காப்பீடு (Motor)
- வீட்டு காப்பீடு (House)
- தீ காப்பீடு (Fire)
- பயண காப்பீடு (Travel) 2. ஆயுள் காப்பீடு (Life Insurance)
ஆயுள் காப்பீட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவில் கிடைக்கக்கூடிய மிகவும் பொதுவான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்:
- கால ஆயுள் காப்பீடு (Term Life)
- முழு ஆயுள் காப்பீடு (Whole Life)
- Endowment
- Unit Linked காப்பீட்டு திட்டங்கள்
- Children திட்டங்கள்
- Pension திட்டங்கள்
ஒவ்வொருவருக்கும் சொந்த நிதி பின்னணி, தேவைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் இருக்கும். அதன் அடிப்படையில் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யவேண்டும்.
மேலே சொன்ன காப்பீடு திட்டங்களில் அனைவருக்கும் தேவையான மற்றும் மிக முக்கியமான திட்டங்கள் Health Insurance மற்றும் Term Insurance
இதுல இந்த வாரம் நாம பார்க்க போகும் டாபிக் Term இன்சூரன்ஸ்:
Term Life Insurance (கால ஆயுள் காப்பீட்டு) திட்டங்கள்: 1. Term Insurance என்றால் என்ன?
Term Insurance என்பது ஆயுள் காப்பீட்டின் (Life Insurance) மலிவு வடிவமாகும், இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக ஆயுள்
காப்பீட்டைத் தேர்வு செய்யலாம். குறைந்த பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் உங்கள் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தை ஒரு கால ஆயுள் காப்பீட்டு பாதுகாக்க முடியும். கால காப்பீட்டுத் திட்டங்களுக்கு பொதுவாக எந்த Maturity இல்லை, இதனால், மற்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விட குறைந்த கட்டண
பிரீமியத்தை கொண்டதாகும்.
பாலிசி காலத்திற்குள் உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட policy Sum assured உங்கள் policy நாமினி தொகையை பெறுவார்கள். இல்லை என்றால் ஒன்றும் கிடைக்காது. 2. யார் / எப்போது Term Insurance எடுக்க வேண்டும்?
Term Insurance பொறுத்தவரை குறைந்த வயசுல வாங்கினால் குறைந்த கட்டணம்", வயது ஏற ஏற அதன் ப்ரீமியம் ஏறும் எனவே வேலைக்குப் போனதும் / தொழிலில் வரும் முதல் லாபத்தில் முதல் வேலையாக ஆயுள் காப்பீடு எடுப்பது தான் நல்லது.
3.எவ்வளவு காப்பீட்டுத் தொகை எடுக்க வேண்டும்?
உங்களுடைய பைனான்சியல்
இன்வெஸ்ட்மென்டின் முதல் முதலீடாக டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் உங்களது சார்ந்தோர்ககு வருங்காலத்தில் தேவை படும் பைனான்சியல் சப்போர்ட் இருக்க வேண்டும். அதேபோல், மிக அதிகமான இன்ஷீரன்ஸ் எடுத்திருந்தால் தேவையின்றி அதிகப்படி காப்பீட்டுக்கான அதிக ப்ரீமியம் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே அதற்க்கு ஏற்ற மாதிரி காப்பீட்டுத் தொகை செலக்ட் செய்யுங்க.
25-35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு 60 வயது வரை ரூபாய் 1 கோடியின் term காப்பீடு எடுக்க பிரீமியம் தொகை மிகவும் குறைவு. 4. எவ்வளவு பிரீமியம் காலம்?
எவ்வளவு வயது வரை உங்களுக்குத் Term Insurance Cover என்பதை முடிவு
செய்யுங்கள். 60 வயது வரை அல்லது அதுற்கும் மேல் தேவை என்றால் அதற்கு எட்டாற்போல் பிரீமியம் தொகை கூடும். 5. டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் சிறு குறிப்புகள்:
குறைந்த பிரீமியம், பெரிய இன்சூரன்ஸ் கம்பெனி என்று பிளான் முடிவு செய்யாதீங்க.
உங்களக்கு எது தேவை என்று முடிவு செய்யுங்கள்.
a. Claim Settlement Ratio (CSR):
டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியின், அந்த கம்பெனியின் க்ளெயிம் ஸெட்டில்மெண்ட் ரேஷியோ (CSR) எவ்வளவு என்பதை பாருங்க. CSR என்பது, ஒரு வருடத்தில் அந்த கம்பெனி பாலிசி எவ்வளவு கிளைம் வந்தது எவ்வளவு செட்டில் பண்ணாங்க. சுமார் 95% அல்லது அதற்கும் அதிகமான CSR
இருக்கக்கூடிய இன்சூரன்ஸ் கம்பெனி சிறந்த சாய்ஸ்.
அனைத்து காப்பீட்டு கம்பெனிகளின் சி.எஸ்.ஆரை ஐ.ஆர்.டி.ஏ.ஐ (இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) ஆண்டு அறிக்கையிலிருந்து பெறலாம்.
b. Settlement Period::
சில காப்பீட்டு நிறுவனங்கள் Claim தொகை குறைவாக உள்ளவர்களுக்கு
மட்டுமே காப்பீட்டுத் தொகையை 1 அல்லது 2 லட்சம் தந்து விடும். ஆனால், எதோ ஒரு சாக்கு காட்டி பெரிய claim (1 கோடி) தொகையை நிராகரிக்கிறார்கள் அல்லது நேரம் கடுத்துகிறார்கள். ஏனென்றால், சிறிய Claim பெரிய அளவில் செலுத்துவதன் மூலம், அவர்கள் அதிக Claim Settlement Ratio இருப்பதாக காட்டி
பாலிசி வாங்கலாம் என்று செய்கிறார்கள்.
எனவே Claim Settlement Ratio மற்றும் Settlement period இரண்டும் கரெக்டா இருக்கக்கூடிய இன்சூரன்ஸ் கம்பெனி செலக்ட் பண்ணிகோங்க.
c. டெர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கும்போது உங்களின் சரியான வயது, வருமானம், உடல்நிலை, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை ஒளிவு
மறைவின்றித் தெரிவியுங்கள்.
d. பாலிசி பிரீமியம் முன்கூட்டியே செலுத்த வேண்டிய தேதி கரெக்டா செலுத்துங்க.
e. பாலிசி Returns வேண்டுமான்னு முடிவு பண்ணுங்க. என்னை பொறுத்த வரை, இன்சூரன்ஸ் என்பது வேறு இன்வெஸ்ட்மென்ட் என்பது வேறு. இரண்டையும் சேர்த்து பண்ணாதீங்க.
f. உங்க இன்சூரன்ஸ் ஏஜென்ட்
கிட்ட பாலிசி பற்றி நிறைய கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கோங்க. எந்தந்த Critical illness கவர் ஆகுது, என்னன்னே benefits இருக்கு, பிரீமியம் waive off benefits இருக்க? எண்னென ரைடர்ஸ் இருக்கு?
(நான் எடுத்த பிளான் ல accident மூலம் வேலை இல்லாமல் இருந்தால் பிரீமியம்ல ஒரு தொகை வரும்,)
g. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாகப் படியுங்கள்.
h. காப்பீட்டு பத்திரத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
தொடரும்..
P.S - நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, எனது கற்றலை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று கொள்ளுங்கள்.
என்னை இந்த topicயை எழுத தூண்டிய @aram_Gj அண்ணனுக்கு மிக்க நன்றி.
அதே போல் எப்படி எழுத வேண்டும் என்று எனக்காக உறுதுணையாக இருந்து என்னை ஊக்குவிக்கும் @Karthicktamil86 அண்ணனுக்கு மிக்க நன்றி.
மன்னா
ஏன்னா மங்குனி அமைச்சரே?
இந்த EPF என்று சொல்கிறார்களே, அப்படி என்றல் என்ன மன்னா?
மங்குனி அமைச்சரே, தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் போல கஷ்டமான விடுகதை இல்லை.
EPF பற்றி இந்த வாரம் பார்த்துருவோம் வாங்க.,
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee Provident Fund Organization) என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு அமைப்பாகும், இது வேலை செய்யும் நபர்களுக்கான EPF சேவையை நிர்வகித்து நடத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பணியாளர் தனது
லோன், கிரெடிட் கார்டு அப்ளை பண்ண போன சிபில் ஸ்கோர் முக்கியம் பிகிலு nu சொல்ராங்க.
சரி இந்த சிபில் ஸ்கோர்ன என்னனு இந்த வாரம் விரிவா பார்த்துருவோம் வாங்க.,
Credit Information Bureau (India) Ltd என்கிற சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, எனது கற்றலை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளை தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யங்கள்.
ஐயா, இந்த மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ஐயா?
சரி வாருங்கள். இந்த வாரம் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி விவாதிப்போம்.