ஈழ நாட்டுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் எண்ணற்ற தரவுகள் கொட்டிக் கிடக்கிறது என்பதை யாரும் எளிதில் புறந்தள்ளி விட இயலாது.
ஆனால்
1980 முதல் 2009 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடுகளை யாருமே கேள்வி கேட்க கூடாது என பேசுவது தவறு.
எந்தவொரு நாட்டிலும் "உருவாகும்" அல்லது "உருவாக்கப்படும்" விடுதலைப் இயக்கங்களுக்கு வெவ்வேறான கதை, கொள்கை, கோட்பாடு, அரசியல் இருக்கத் தான் செய்யும்.
அடக்கி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக புறப்பட்ட விடுதலை இயக்கங்கள் சில வென்ற பிறகு மீண்டும் அடக்கி ஆண்ட கதைகளும் இங்கே உண்டு.
உலக இஸ்லாமிய விடுதலை இயக்கங்களில் பல சர்வதிகார தன்மை கொண்டது, சில லிபரல் தன்மை கொண்டது, பிற இயக்கத்தை ஆதரித்து உருவானது, பிற இயக்கத்தை அழித்து உருவானது என்று பல கோணங்கள் உண்டு.
இலங்கையில் ஆரம்ப காலத்தில் GPP, SJVC போன்ற பலர் கட்சி ரீதியாக ஈழ உரிமை முன்னெடுப்புக்களை செய்தனர்.
அமைதி வழியில் ஈழ அமைப்புகள் சென்ற போது சிங்கள அமைப்புகள் ஆயுத வழியில் ஈழ அமைதியை குலைக்க எண்ணியது மறுப்பதற்கில்லை.
அதனால் பல்வேறு ஈழ ஆயுத போராளி அமைப்புகள் உருவானது அதில் விடுதலைப் புலிகள் பிற்காலத்தில் வீரியம் பெற்றது உண்மை.
சம காலத்தில் விடுதலைப் புலிகள் பிற ஈழ அமைப்புகளை ஒழித்தது குறிப்பிடத்தக்கது.
பத்மநாபாவை கொலை செய்தது விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒத்தக் கண் சிவராசன்.
இவரே விடுதலைப் புலிகளை விட்டு விலகிய பிறகு ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய கனகச்சிதமாக திட்டமிட்டு முடித்தவர்.
1990 இல் பத்மநாபாவை கொலை செய்ய திமுக விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக உறுதியற்ற செய்தி பரவியது. பின்னர் 1991 இல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் திமுக அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என காரணம் கூறி அன்றைய பிரதமர் சந்திரசேகர் திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்.
விடுதலைப் புலிகளுக்காக தனது ஆட்சியை இழந்தார் கலைஞர். இதெல்லாம் நாம் தமிழர் தம்பிகளுக்கு தெரியாதா?
அந்நேரத்தில் வைகோ கள்ளத் தோணி பயணம் பிறகு கடிதம் பிறகு திமுகவில் இருந்து வெளியேற்றம் பிறகு மதிமுக என்ற தனிக்கட்சி அதெல்லாம் தனிக் கதை.
விடுதலைப் புலிகள் நோக்கம் 2002 நார்வேயில் ஓரளவுக்கு நிறைவேறி இருக்கலாம்.
இதற்கு ஆன்டன் பாலசிங்கம் தயாராக இருந்த சூழலில் பிரபாகரன் தீடீரென பின்வாங்கினார்.
அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்பதெல்லாம் பேச நல்லா இருக்கும் ஆனால் காரியம்?
அதாவது 2002 நார்வே பேச்சுவார்த்தை கூற்றுப்படி சிறப்பு அந்தஸ்தை பெற்று பிறகு படிப்படியாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போராடி இருக்கலாம் ஆனால் அந்த பேச்சுவார்த்தை வாய்ப்பு வீணாகிப் போனது.
பிறகு ஒரு வழியாக இந்த வாய்ப்பும் பெற முடியாமல் 2009 இல் போர் திக்கற்ற திசையில் முடிந்தது.
விடுதலைப் புலிகளின் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் பிரபாகரன் மறைவுக்குப் பிறகு வைகோ ஒதுங்கிக் கொண்டார் சீமான் மேடை அரசியலில் குதித்தார். 2010 முதல் பல எண்ணற்ற கட்டுக் கதைகள் அப்பப்பா.
ஈழவாதிகள் தயவு செய்து சீமானை விட்டுவிட்டு உங்களில் நல்ல தலைவரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
நான் பேசிய விவரம் ஒரு துளிக்கூட கிடையாது. உலக இஸ்லாமிய விடுதலை இயக்க கதைகள், அதிலுள்ள அமெரிக்கா ரஷ்யா உள்ளடி வேலைகள், அதிலுள்ள எண்ணெய் அரசியல், இங்கே இலங்கை திரிகோணமலை, அதன் சீன பட்டு பாதை, அமெரிக்காவின் தேவை இப்படி நிறைய பேச ஆரம்பித்தால் நான் உறங்க செல்ல இயலாது.
உலகின் வளங்களை அதிகம் பெற்ற நாடுகளில் இலங்கை தீவுகளும் ஒன்று.
சிங்கள பவுத்தர்கள் புத்தரை என்றோ மறந்துவிட்டார்கள்.
இதிலுள்ள சர்வதேச அரசியல் மறுக்க முடியாதது.
விடுதலைப் புலிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை.
வன்முறை இல்லாமல் அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தவர் பெரியார்.
அப்படிப்பட்ட பெரியாரை ஆதரித்துவிட்டு அத்துடன் வன்முறை பாதையில் சென்ற பிரபாகரனை சம அளவில் ஆதரித்து பேசும் பற்பல திராவிடவாதிகளை நான் ஏற்கவில்லை.
நேதாஜி போல தான் பிரபாகரன் என்போரும் உண்டு.
ஆம் ஆனால் அவர்களின் கால சூழல், விடுதலை தேவை, அரசியல் நிலைமை வேறானவை என்பதை மறுக்கவோ மறக்கவோ கூடாது.
மேலும் நேதாஜி அனைவரையும் சேர்த்தே இயக்கத்தை வழி நடத்தினார் ஆனால் பிரபாகரன் இஸ்லாமியர்களை, மலைவாழ் மக்களை கண்டுக் கொள்ளவில்லை.
இங்கே தங்களது கைகளில் தவழும் செய்திகளை புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் நிலைப்பாடுகளை பலரும் எடுப்பதாலே உண்மை உறங்குகிறது.
PhD போல ஆராய்ந்தால் மட்டுமே Transparent வரலாறுகளை அறியவோ பேசவோ முடியும் இல்லாவிட்டால் தனக்கு தெரிந்ததே சரியென இருட்டில் வாழ வேண்டியது தான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
போன்ற பல்வேறு விடுதலைப் போராட்ட இயக்கங்களை கொண்டாட மறுப்பது ஏன்?
விடுதலைப் புலிகள் என்றால் மட்டும் அப்படியே Orgasm ஆகுதோ?
விடுதலைப் புலிகளின் உண்மையான வரலாறை காலவாரியாக அச்சு பிசகாமல் பேச முன் வந்தால் பல "ஈழ அரசியல்வாதிகள்" தாங்கள் நடமாடும் ஊருக்குள் வேட்டியும் கட்ட முடியாது சேலையும் கட்ட முடியாது அம்மணமாக தான் இருக்கனும்.
ஈழ விவகாரத்தில் ஜனநாயகவாதி கலைஞரை "வேகமாக" திட்ட தெரிந்த ஈழவாதிகள் யாரும் சர்வதிகாரி ஜெயலலிதாவை "மெதுவாக" கூட திட்ட முன் வரவில்லை.
காரணம்
ஜெயலலிதா இறந்தாலும் இன்னும் பயத்தில் ஒண்ணுக்கு போற பசங்க இவங்க
இல்லாட்டி
திமுகவின் சமூக நீதி மீது காழ்ப்புணர்வு கொண்ட ஈழவாதிகள்.