மத்திய அரசின் உத்தரவு நிறுத்திவைப்பு: ஜாமீன் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
வங்கிகளில் நிறுவனங்களுக்கு கடன் பெறுவதற்கு ஜாமீன் அளித்ததனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திவால் மசோதாவில் தனிநபர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை தொடர்பான மனு நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் ரவீந்திர பட் ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வங்கிகளுக்கு தனி நபர்கள் அளித்த ஜாமீன் என்பது அவர்களுக்குள்ள பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக இருக்கக்கூடாது. எனவே இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையை வங்கிகள் தொடரலாம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை செயல்படுத்துவதை நிறுத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசு அறிவிக்கையை அடிப்படையாகக் கொண்டு 75-க்கும் மேலான மனுக்கள் விசாரணைக்கு காத்திருப்பதாகவும்,
இதில் அரசின் அறிவிக்கையின் அடிப்படையில் செயல்படுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திவால் மசோதா தொடர்பாக நவம்பர் 15, 2019-ல் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையை எதிர்த்து மனுதாரர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கும்போது ஜாமீன் அளித்த தனி நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
நிறுவனங்களை மறு சீரமைக்க மேற்கொள்ளப்படும் திவால்நடவடிக்கையின்போது நிறுவனங்களுக்கான கடன் பொறுப்புகள் மட்டுமே ஆராயப்படும்.
அதில் நிறுவனங் களுக்கு ஜாமீன் அளித்த தனி நபர்கள் வங்கிகளுக்கு அளித்த உத்தரவாதம் எந்த வகையிலும் சம்பந்தப்பட்டதல்ல எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி கைது - சுவாரசிய பின்னணி.!
சென்னையில் 300 கிராம் தங்கத்தை வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் அல் உம்மா இயக்கத்துடன் தொடர்புடையவர் என்றும் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி சென்னையில் பெரிய மேடு சென்ட்ரல் அருகே நகை வியாபாரியான சுராஜ் என்பவரிடம் 300 கிராம் தங்கம் மற்றும் ₹7.5 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் இருவர் வழிப்பறி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்த காவல் துறையினர் இதில் சம்பந்தப்பட்ட யாசின் என்பவரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.
மாநில கட்டுப்பாட்டு அறை தகவல்.! அதில் அவரது கூட்டாளி குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரபீக் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
ஆனந்தய்யா மருந்தை தயாரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு
திருப்பதி: ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை தேவையான அளவில் தயாரித்து அளிக்க திருமலை தேவஸ்தானம் முன் வந்துள்ளது.
ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார்.
இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை வந்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்து குறித்து அறிந்த, திருப்பதி திருமலை தேவஸ்தானம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுர்வேத பல்கலைகழக அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை நேரடியாக கிருஷ்ணபட்டணம் அனுப்பி உள்ளது.
தடுப்பூசியை இந்திய அரசுக்கு தான் விற்போம்:பஞ்சாப் அரசுக்கு மாடர்னா நிறுவனம் பதில்!
சண்டிகர்: அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி நிறுவனத்திடம் கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்ய பஞ்சாப் அரசு விரும்பிய நிலையில்,
தங்கள் நிறுவன கொள்கைப்படி இந்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என கூறிவிட்டது.
அமரீந்தர் சிங் திட்டம்
பஞ்சாபில் தினசரி தொற்று பாதிப்பு 5 ஆயிரம் அளவில் பதிவாகிறது. இன்று (மே 23) மட்டும் 201 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாபிற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியின் அளவுகள் தீர்ந்ததால் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி திட்டங்களை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுவரை சுமார் 44 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது.
அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு, நம் முன்னோர் பலர் தானமாகவும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பரிகாரமாகவும், நிலங்களை வழங்கியுள்ளனர்.
அதன் வழியே, கோவிலின் அன்றாட பூஜை, அன்னதானம் உள்ளிட்டவை தொடர்ந்து தங்கு தடையின்றி நடைபெற செய்தனர்.அப்படிப்பட்ட கோவில் சொத்து, அரசியல்வாதிகளாலும், அடாவடி பேர்வழிகளாலும் அனுபவிக்கப்பட்டு வருகிறது.
ஆட்சியாளர்களின் ஆசியோடு, கோவில் சொத்து பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.மேலும், கோவில் சொத்தை மிக குறைந்த தொகைக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு அனுபவிக்கின்றனர். அவர்கள், கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையும், நிலங்களுக்கான பசலி தொகை உள்ளிட்டவற்றையும் சரிவர கொடுப்பதில்லை.
இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறந்த தலமாகக் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது.
ஆன்மாவிற்கு உயர்வைத் தரும் திருவல்லம் பரசுராமர் திருத்தலம்.
🙏🇮🇳1
ஜமத்கனி முனிவர் - ரேணுகாதேவி தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தவர் ராமர்.
விஷ்ணுவின் ஆறாவது தோற்றமாகக் கருதப்படும் அவர், சிவபெருமானை வழிபட்டு, அவரிடமிருந்து ‘பரசு’ எனும் கோடாரியைப் பெற்றதால் ‘பரசுராமர்’ என்று அழைக்கப்பட்டார்.
🙏🇮🇳2
ஒரு நாள் ரேணுகாதேவி ஆற்றில் குளிக்கச் சென்றார். அவர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது, வானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல், அந்த ஆற்று நீரில் தெரிந்தது.