தடுப்பூசியை இந்திய அரசுக்கு தான் விற்போம்:பஞ்சாப் அரசுக்கு மாடர்னா நிறுவனம் பதில்!
சண்டிகர்: அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி நிறுவனத்திடம் கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்ய பஞ்சாப் அரசு விரும்பிய நிலையில்,
தங்கள் நிறுவன கொள்கைப்படி இந்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என கூறிவிட்டது.
அமரீந்தர் சிங் திட்டம்
பஞ்சாபில் தினசரி தொற்று பாதிப்பு 5 ஆயிரம் அளவில் பதிவாகிறது. இன்று (மே 23) மட்டும் 201 பேர் உயிரிழந்தனர்.
பஞ்சாபிற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியின் அளவுகள் தீர்ந்ததால் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி திட்டங்களை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுவரை சுமார் 44 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது.
இதனால் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய அமரீந்தர் சிங் திட்டமிட்டார்.
மாடர்னா நிறுவனம் பதில்
இதற்காக உலகளாவிய டெண்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஸ்பூட்னிக் வி, பைசர், ஜான்சன் மற்றும் ஜான்சன் போன்ற தடுப்பூசியை பெறுவதற்கு பலவகை வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில் மாடர்னா நிறுவனம் மட்டும் பதிலளித்துள்ளது.
அவர்களும் சாதகமான பதிலளிக்கவில்லை. உலகம் முழுவதும் 9 கோடி மக்களுக்கு மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மாநில அரசுடன் ஒப்பந்தம் போட தங்கள் கொள்கையில் இடமில்லை, இந்திய அரசுடன் மட்டுமே நிறுவனம் ஒப்பந்தம் போட முடியும் என கூறிவிட்டது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆந்திராவில் 13 லாரி ஓட்டுநர்களை கொன்று சரக்குகளை கொள்ளையடித்த கும்பல்: முதல்முறையாக ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை; 7 பேருக்கு ஆயுள் சிறை- ஓங்கோல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
ஓட்டுநர், கிளீனர்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, லாரியில் உள்ள சரக்குகளை கடத்தி விற்ற கும்பலைச் சேர்ந்த 12 பேருக்கு தூக்கு தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து ஆந்திர மாநிலம் ஓங்கோல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டி லேயே முதன்முறையாக ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத் தில் உள்ளது ஓங்கோல். இங்குள்ள கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சரக்குகளை ஏற்றி வந்த லாரிகள் அடிக்கடி மாயமாகின.
ஜெ.விநாயகமூர்த்தி-, திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா முதல் அலையில், மத்திய அரசு முதன்முறையாக ஊரடங்கு அமல்படுத்தியபோது, பிரதமர் மோடியை விமர்சித்த ஊடகங்களும், கட்சிகளும் அதிகம்.
கொரோனாவை கட்டுப்படுத்த, உலகம் முழுதும் உபயோகிக்கப்பட்ட ஒரே ஆயுதம், ஊரடங்கு மட்டும் தான். அதை முதன் முதலில் பயன்படுத்திய நம் பிரதமர் மோடியை, உலக நாடுகள் பாராட்டின. அந்த இக்கட்டான காலகட்டத்தில் கூட, பல மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை.
ஆனால், அதையெல்லாம் மீறி, முதல் அலையில், நம் நாடு கொரோனாவை வென்றது என்பதே உண்மை.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கையை, மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டுவிட்டது.
வூஹான் நகர் குறித்த அமெரிக்க கட்டுரை; சீனா காட்டம்
பெய்ஜிங் : கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. இதுகுறித்து உலகம் முழுக்க உள்ள ஊடகங்கள் பல, பல்வேறு விதமான கட்டுரைகளை எழுதி தீர்த்துவிட்டன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வூஹான் குறித்து சர்வதேச தொலைக்காட்சி சேனல்கள், இதழ்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளன.
சர்வதேச ஊடகங்கள் பல வூஹான் நகருக்குச் சென்று செய்தி சேகரித்து விஞ்ஞானிகளைப் பேட்டிகண்டு ஆவணப் படங்களையும் வெளியிட்டு விட்டன.
இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வூஹான் குறித்து முன்னதாக ஓர் கட்டுரை எழுதி இருந்தது.
வூஹான் நகருக்கு ஆராய்ச்சி மேற்கொள்ளச் செல்லும் விஞ்ஞானிகள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர் என அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.
பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது.
*ஆகமவிதி கடைப்பிடிக்கப்படும் சுசீந்திரம் கோவில்*
பலவிதங்களில் சிறப்புடைய சுசீந்திரம் திருக்கோவிலின் பூஜை முறைகளில் தனித் தன்மை காண முடிகிறது.
🙏🇮🇳1
பல மன்னர்களால், பல கால கட்டங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு முழுமையான திருக்கோவிலாக திகழ்கின்றது.
🙏🇮🇳2
இந்து மதத்தின் அனைத்து தெய்வங்களையும் இங்கு காணலாம். சைவத்திற்கும், வைணவத்திற்கும் ஒரே போல் முக்கியத்துவம் கொடுத்து சிவன், விஷ்ணுவிற்கு பூஜை களும், திருவிழாக்களும் இங்கு நடைபெற்று வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.
இறைவன் காட்சி தரமாட்டானா என்று தவம் புரிபவருக்கு மத்தியில் பக்தன் ஒருவன் துன்பத்தைக் காண சகியாமல் இறைவனே நேரில் வந்தார். ஆனாலும் சுற்றியிருந்தவர்களால் இறைவனைத் தரிசிக்கும் பேறை பெறமுடியவில்லை.
கோபத்தோடு உக்கிரமாக வெளிவந்த இறைவனைக் கண்சிமிட்டும் வினாடியில் கூட தரிசிக்க முடியாத நிலைமை நரசிம்மன் தூணிலிருந்து வெளிவரும் சமயம் நேர்ந்தது.
பக்தபிரகலாதனைக் காப்பாற்ற தூணிலிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்... மனித உடலும் சிங்கமுகமும் கொண்டு அதிபயங்கரமான உருவத்தில் வெளிவந்த நரசிம்மரை அங்கிருந்தவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கையிலிருந்த ஆயுதத்தையெல்லாம் கீழே வீசியபடி அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.
பிரதமர் மோடி குறித்து பொய் செய்தி பகிர்ந்த பிரபலங்களுக்கு சிக்கல்
புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகையில், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து செய்தி, படம் வெளியானதாக சமூக வலைதளத்தில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பகிர்ந்தனர்.
ஆனால், அது பொய் செய்தி என்பது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், சுகாதாரப் பணியாளர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றினார். கொரோனா பரவல் காலத்தில் அவர்களுடைய சிறப்பான சேவையை பாராட்டி அவர் பேசினார்.
அப்போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார். மோடி, முதலைக் கண்ணீர் வடிப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர்.