#OperationAlamelamma 2017ஆம் ஆண்டு ஒரு கன்னட காமெடி த்ரில்லராக வெளிவந்த படம் தான் "ஆபரேஷன் அலமேலம்மா".கதை என்னவென்றால் ஹீரோவுக்கு பிராண்டட் பொருட்கள் மீது மோகம்.பிராண்டட் பொருட்கள் அதிகம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஹீரோயின் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை
செய்கிறார்.ஹீரோ ரிஷி காய்கறி ஏலம் விடுபராக வேலை செய்கிறார்.ஒரு நாள் ஹீரோயின் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஒரு கடையில் ஒரு ஆடை திருடுவதை பார்த்து பின்தொடர்கிறார்.அவர் வீட்டிற்க்கு வந்து இதை ஹீரோயினிடம் கூறுகிறார்.வெளியில் சொல்லாமல் இருக்க ஒரு கப் காபி சாப்பிட அழைக்கிறார்.இப்படியே இருவரும்
காதலிக்கிறார்கள்.அந்த பக்கம் ஒரு பெரிய தொழில் அதிபரின் மகனை ஒரு கும்பல் கடத்துகிறது.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறது.அந்த பையை ஒரு ரவுண்டானாவில் வைக்க சொல்ல மகனின் தந்தை அதை அங்கு வைக்க போலீஸ் அதை கண்காணிக்கிறது.ஹீரோ அந்த பையை பார்க்கிறார்.அது பிராண்டட் பை என்பதால் எடுக்க
நினைக்கிறார்.இவர் தான் கடத்தல்காரன் என்று எண்ணி போலீஸ் அவரை கைது செய்கிறது.இதற்கு அப்புறம் யார் கடத்தியது?எதற்காக கடத்தினார்கள்?ஹீரோ நிலைமை என்ன ஆனது?அவரது காதல் கைகூடியதா? தொழில் அதிபரின் மகன் மீட்கப்பட்டாரா? என்பதே மீதிக்கதை.கதை பழையது தான் என்றாலும் எங்கேயும் சலிப்பு
தட்டாமல் கதையை நகர்த்தி இருக்கிறார்கள்.சிறிய சிறிய காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது.முக்கியமாக ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகள் அருமையாக அமைந்துள்ளன.பின்னணி இசை கதைக்கு ஏற்ப பொருந்தியுள்ளது.அனைவரின் நடிப்பும் நன்றாக இருந்தது.ஒரு ஜாலியான காமெடி த்ரில்லர் பார்க்க விரும்பினால் இந்த
#animalworld#fantasy#gamingthriller
கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு சைனீஸ் ஃபேண்டஸி கம் கேமிங் த்ரில்லராக வெளிவந்த படம் தான் இந்த "அனிமல் வேர்ல்ட்".கதை:ஹீரோ ஒரு மாலில் இருக்கும் ஃபன் சிட்டியின் முன்பு ஜோக்கர் வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் வேலையை செய்கிறார்.அவரது அம்மா கோமா
நிலையில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறார்.அங்கு பணிபுரியும் ஒரு செவிலியர் ஹீரோ காதலிக்கிறார்.அம்மாவின் மருத்துவ செலவை பாதி காப்பீட்டு நிறுவனமும் பாதி ஹீரோவின் காதலியான செவிலியர் பார்த்து கொள்கிறார்.ஒரு நாள் ஹீரோவின் நண்பர் அவரிடம் வந்து "தன்னுடைய முதலாளியின் வீடு விற்பனைக்கு
வர உள்ளது.12 மில்லியன் மதிப்புள்ள வீட்டை உடனடி தேவைக்காக 6 மில்லியனிற்கு விற்க உள்ளர்.எனவே என்னிடம் சிறிய பணம் தான் உள்ளது.உன் அம்மாவின் பெயரில் இருக்கும் வீட்டை அடகு வைத்து பணம் தந்தால்,முதலாளியின் வீட்டை வாங்கி விற்று வரும் லாபத்தில் பாதி தருவதாக கூறுகிறார்".முதலில் வேண்டாம்