#animalworld#fantasy#gamingthriller
கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு சைனீஸ் ஃபேண்டஸி கம் கேமிங் த்ரில்லராக வெளிவந்த படம் தான் இந்த "அனிமல் வேர்ல்ட்".கதை:ஹீரோ ஒரு மாலில் இருக்கும் ஃபன் சிட்டியின் முன்பு ஜோக்கர் வேடம் அணிந்து குழந்தைகளை மகிழ்விக்கும் வேலையை செய்கிறார்.அவரது அம்மா கோமா
நிலையில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறார்.அங்கு பணிபுரியும் ஒரு செவிலியர் ஹீரோ காதலிக்கிறார்.அம்மாவின் மருத்துவ செலவை பாதி காப்பீட்டு நிறுவனமும் பாதி ஹீரோவின் காதலியான செவிலியர் பார்த்து கொள்கிறார்.ஒரு நாள் ஹீரோவின் நண்பர் அவரிடம் வந்து "தன்னுடைய முதலாளியின் வீடு விற்பனைக்கு
வர உள்ளது.12 மில்லியன் மதிப்புள்ள வீட்டை உடனடி தேவைக்காக 6 மில்லியனிற்கு விற்க உள்ளர்.எனவே என்னிடம் சிறிய பணம் தான் உள்ளது.உன் அம்மாவின் பெயரில் இருக்கும் வீட்டை அடகு வைத்து பணம் தந்தால்,முதலாளியின் வீட்டை வாங்கி விற்று வரும் லாபத்தில் பாதி தருவதாக கூறுகிறார்".முதலில் வேண்டாம்
என மறுக்கும் ஹீரோ பின்பு தன்னுடைய பொருளாதார நிலைமையை எண்ணி சம்மதிக்கிறார்.அடுத்த நாள் தன் நண்பரை தொலைபேசி மூலமாக அழைக்கிறார்.ஆனால் அவர் எடுப்பதில்லை.பின் அவர் வேலை செய்யும் இடத்திற்கு போய் விசாரிக்கிறார்.அங்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிகிறது.உடனே ஹீரோவுக்கு ஒரு அழைப்பு வருகிறது.
எதிர் முனையில் பேசும் நபர் "நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள்.உடனே வெளியே வாருங்கள்"என்று கூறுகிறார்.வெளியே வரும் ஹீரோவை முகத்தை மூடி ஒரு இடத்திற்கு அழைத்து செல்கின்றனர்.அந்த இடத்திற்கு சென்ற பின்பு ஹீரோவின் எதிரில் இருக்கும் நபர்"உங்கள் நண்பர் என்னிடம் கடன் வாங்கியிருந்தார்
அதற்கு வட்டி கட்டவில்லை.அதற்கு ஈடாக உங்கள் வீட்டின் பத்திரத்தை வைத்துள்ளார்.அவரின் கடனை நீங்கள் தான் அடைக்க வேண்டும்.ஒன்று நீங்கள் என்னிடம் 30 வருடம் வேலை செய்ய வேண்டும்.இல்லையென்றால் ஒரு விளையாட்டு விளையாட வேண்டும்.வெற்றி பெற்றால் கடன் தள்ளுபடி செய்யபடும்.அது மட்டுமில்லாமல் கை
நிறைய பணத்துடன் செல்லலாம். தோற்றால் 30 வருடம் வேலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.ஹீரோவும் ஒப்புக்கொண்டு விளையாட்டை விளையாட ஆரம்பிக்கிறார்.அது என்ன விளையாட்டு?விளையாட்டில் உள்ள விபரீதம் என்ன?ஹீரோ வெற்றி பெற்றாரா?ஹீரோவின் நண்பருக்கு என்ன ஆனது?தன் காதலியை கரம் பிடித்தாரா?
முடிவில் என்ன ஆனது?என்பதை பரபரக்கும் பட்டாசான திரைக்கதை மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படத்தில் வரும் ஆரம்ப கப்பல் VFX காட்சி தரம்.அது மட்டும் இல்லாமல் படத்தில் நிறைய ஃபேண்டஸி காட்சிகள் உள்ளன.அது எதற்காக? ஹீரோவுக்கும் அதற்கும் என்ன சம்மந்தம்? என்பதை படம் பார்த்து தெரிந்து
கொள்ளுங்கள்.பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன.தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.குறிப்பு:விளையாட்டு ஆரம்பித்த பின்பு வரும் சில காட்சிகளை உன்னிப்பாக கவனிக்கவும்.அப்பொழுது தான் விளையாட்டு போகும் பாதையை புரிந்து கொள்ள முடியும்.படத்தில்
பல டிவிஸ்ட்டுகள் உள்ளன..அனைத்தும் எதிர்பாராத ஒன்று.சில படங்களில் சில காட்சிகளை இரண்டு மூன்று முறை பார்த்தால் தான் புரியும்.அப்படிப்பட்ட காட்சிகள் இதில் உள்ளன.படம் பார்க்கும் பொழுது இதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.ஆபாச காட்சிகள் துளியும் இல்லை.ஒரு தரமான த்ரில்லர் பார்க்க வேண்டும்
என்றால் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத படங்களில் இதுவும் உண்டு.டிவிட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளம் தடை செய்யப்படுகிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.அப்படி தடை செய்யப்பட்டால் இதுவே என்னுடைய கடைசி பட விமர்சனமாக கூட இருக்கலாம்.படத்தின் லிங்க் என்னுடைய பயோவில் உள்ளது.நன்றி!
#OperationAlamelamma 2017ஆம் ஆண்டு ஒரு கன்னட காமெடி த்ரில்லராக வெளிவந்த படம் தான் "ஆபரேஷன் அலமேலம்மா".கதை என்னவென்றால் ஹீரோவுக்கு பிராண்டட் பொருட்கள் மீது மோகம்.பிராண்டட் பொருட்கள் அதிகம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஹீரோயின் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை
செய்கிறார்.ஹீரோ ரிஷி காய்கறி ஏலம் விடுபராக வேலை செய்கிறார்.ஒரு நாள் ஹீரோயின் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஒரு கடையில் ஒரு ஆடை திருடுவதை பார்த்து பின்தொடர்கிறார்.அவர் வீட்டிற்க்கு வந்து இதை ஹீரோயினிடம் கூறுகிறார்.வெளியில் சொல்லாமல் இருக்க ஒரு கப் காபி சாப்பிட அழைக்கிறார்.இப்படியே இருவரும்
காதலிக்கிறார்கள்.அந்த பக்கம் ஒரு பெரிய தொழில் அதிபரின் மகனை ஒரு கும்பல் கடத்துகிறது.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறது.அந்த பையை ஒரு ரவுண்டானாவில் வைக்க சொல்ல மகனின் தந்தை அதை அங்கு வைக்க போலீஸ் அதை கண்காணிக்கிறது.ஹீரோ அந்த பையை பார்க்கிறார்.அது பிராண்டட் பை என்பதால் எடுக்க