லட்சத்தீவுகளோட மொத்த மக்கள் தொகைல 95 விழுக்காடு பழங்குடியினர். அவங்க தினசரி உணவு மாட்டுக்கறி. அங்க மாட்டுக்கறியை தடை செய்ய சட்டம் கொண்டு வர போகுது பாஜக அரசு 🙄
லட்சத்தீவுகளை நிர்வகிக்க மோடியால் நியமிக்கப்பட்டவர் நினைத்தால் இனி யாரை வேண்டுமானாலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறி 1 ஆண்டு வரை சிறையில் அடைக்க முடியும்
சித்தமருத்துவத்தை ஆதரிப்பவர்களின் வாதம் "நான் சித்த மருத்துவத்தை பின்பற்றி குணமடைந்ததால் நம்புகிறேன்" என்பதாக இருக்கிறது.
இதற்கும், கோவிலுக்கு சென்று மந்திரித்து தாயத்து கட்டியதால் குணமாகியது என்று நம்புவதற்கு எந்த வேறுபாடும் இல்லை.
மருந்தே சாப்பிடாமல் இருந்தாலும் சில நேரங்களில் குணமாகும். அதற்காக மருந்து சாப்பிடாமல் இருப்பதை மருத்துவ முறையாக கொள்ள முடியுமா?
சித்தமருத்துவம் வேலை செய்வதாகவே இருக்கட்டும். ஆனால் அது அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிறுவப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கை.
மிளகு சளியை குணப்படுத்தும் என்பதை அனுபவம் மூலமாக உணர்ந்திருக்கலாம். ஆனால் அதை மருத்துவமாக அறிவிக்க அந்த அனுபவ அறிவு மட்டும் போதாது. மிளகில் என்ன மூலக்கூறுகள் இருக்கிறது அது உடலில் என்ன மாற்றங்களை உருவாக்குகிறது, அது ஏன் சளியை நீக்குகிறது என்ற ஆய்வுக்கு பின்னரே அது மருத்துவமாகிறது
கொரோனா தொடர்பான மருத்துவ சாதனங்கள் எதையும் மாநிலங்கள் வாங்க கூடாது, எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டு, கொரோனா இந்தியாவில் நுழைந்து 8 மாதங்களுக்கு பிறகு ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கான டென்டரை அறிவித்தது சோம்பேறி மோடி அரசு!
குஜராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகள் மொத்தம் ஆறுதான்.
சில வலைத்தளங்கள் 17 என்று காண்பிக்கும். உண்மை என்னவென்றால் மீதமிருக்கும் 11 கல்லூரிகளில் அரசு நிர்வாகம் மட்டுமே இருக்கும். அரசு நிதி ஒதுக்காது. அவை சுயநிதி கல்லூரிகள் போல இயங்கும்.
எடுத்துக்காட்டாக AMCMET மருத்துவக்கல்லூரியை துவங்கியது அகமதாபாத் மாநகராட்சியின் ட்ரஸ்ட். ஆனால் அங்கு செமஸ்டர் கட்டணம் ரூ. 3,65,500/-. தவிர மேனேஜ்மென்ட் கோட்டாவும் இருக்கும்.