பி•டி•ஆர் நம்மிடையே மாறி வந்திருக்கிற திராவிட சிந்தனைக் கொண்ட இளையோர்களுக்கான ஓர் அடையாள மனிதர்.
எப்படி?
ஒரு காலத்தில வெகுஜன ஊடகங்களின் வழியாக நமது பொது புத்தியில் சமூகநீதி, ஜாதியம், இடஒதுக்கீடு, பகுத்தறிவு, திராவிடம் என்று பேசினால், - 1/n @ptrmadurai
ஓரளவிற்கு படித்து விட்டோம் என்பவர்களிடையே, அது போன்ற சாய்வு நிலை "மேட்டிமை தனத்திற்கு" கீழே உள்ள வளர்ச்சியாக நம்ப வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஏழாண்டுகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கொஞ்சம் இறுக்கமும், கள அரசியலும் புரிந்து அந்த மனச்சிக்கலை உடைத்துக் - 2/n
கொண்டு நம்மில் பலரும் வெளிப்படையாக தங்களது அரசியல் நிலைப்பாட்டை முன் வைத்து எழுதியும் பேசியும் வருகிறோம்.
பி•டி•ஆரின் பின்னணியை வைத்து அவர் ஒயிட் காலர் சொல்லாடலுக்கு கீழாக இறங்கி, தான் பேசவிருக்கும் விசயங்களின் நிலமையின் தீவிரத்தை விளக்க அஞ்சுவார் என்ற நிலையில் - 3/n
"#யார்_வீட்டு_அப்பன்_பணத்திலயும்" என்று ஒரு காமன் மேனுடைய அறச்சீற்றத்திலிருந்து, அரசியல் வகுப்பு எடுக்கிறார்; இது அவர்கள் எதிர்பாராதது.
இது ஒன்றிய அரசிற்கு கிஞ்சித்தும் ரசிக்கத் தக்கதல்ல! இந்தக் கலவையே பி•டி•ஆர் பொருட்டும், புதிதாக சமூக வலைத் தளங்களுக்கு அரசியல் பேச - 4/n
வந்திருக்கும் இளைஞர்கள் பொருட்டும் அவர்களுக்கு இருக்கும் அச்சமும், வெறுப்பும்.
இந்த ஊட்டி, கொடைக்கானல், தேராதூன் அப்படின்னு மலைப்பாங்கான இடங்களில் தங்கிப் படிச்சு (boarding school) வளர்ந்த பிள்ளைங்கதான் தனக்கு எப்படி அந்த வசதி வாய்ப்பு கிடைச்சிச்சின்னு தெரியாம மரம் மாதிரி சமூக உணர்வே இல்லாம வளர்ந்து நிற்பானுங்கன்னு நினைச்சேன்... contd
ஆனா பாரு அரசு பள்ளிகளிலேயே படிச்சு, அரசு பாடப் புத்தகங்களையும், நோட்டுக்களையும் வாங்கி எழுதப் படிக்க கற்றுக்கொண்டவிங்கக் கூட என்னமோ தானும் அந்த ஷெப்ஃபெர்ட் சர்வ தேச பள்ளியில படிச்சு வளர்ந்தவிங்க மாதிரி நட்டுக்கிட்டு பேசித் திரியாறனுங்களே அதெப்படிடா?
முட்டாபயலுகளா! சொல்லுறேன் கேட்டுக்கோங்க... வீட்டில இருந்து நடந்து போற அல்லது மிதிவண்டி மிதிச்சு போய்ச் சேருகிற தூரத்தில அவ்வளவு பள்ளிகளை திறந்து வைச்சதுனாலேதான் ஏதோ நம்ம தாத்தா, பாட்டிக்கு கிடைக்காத கல்வி வாசனை நமக்கும் கிடைச்சது. மறந்திடாதே!
வேட்டையாடிகளாக இருந்த பொழுது, நம்முடைய புலம்பெயர்வு என்பது விலங்குகளுடனும், அந்த நிலப்பரப்பின் தட்பவெப்ப நிலையையும் சுற்றியே இருந்தது. பிறகு சரியான நிலப்பரப்பு நீண்ட நெடிய தங்குதலுக்கு உகந்ததாக அமைந்த பொழுது மெல்ல வேளாண்குடிகளாக ஓரிடத்தில் நிலை கொள்ள ஆரம்பித்தோம். - 2
அதனையொட்டி வாழ்வும், சமூகமும் மொல்ல மெல்ல பல சிக்கலான கட்டமைப்பிற்குள் நகர்ந்து நாகரீகங்களாக எழுவதும், வீழ்வதுமென இந்த மனிதகுலம் கடந்து இன்றைய நிலையை வந்தடைந்திருக்கிறது.
இந்த சிக்கலான கட்டமைப்பில் ஒரு பரந்த நிலப்பரப்பின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளவும், - 3
சமமாக அனைவருக்கும் வாழ்வாதார பொருட்களும், அதற்கான பாதுகாப்பையும் உறுதிப் படுத்த அவர்களிடையே பரந்துபட்ட பார்வை கொண்ட ஒருவரை தேர்ந்தெடுத்து கொடுத்து விட்டு, ஏனையவர்கள் அவரவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வாழ்வதாக இருந்தது.