மருத்துவம் அல்லாத... மருத்துவம் அல்லாத வியாபார பொருட்களுக்கும் சான்றிதழ்.. இந்தியன் மெடிக்கல் அஸோஸியேஷனின் மாபெரும் ஊழல்?
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (IMA) மக்கள் அனைவருக்கும் பரிச்சயமான, அடிக்கடி கேள்விப்பட்ட பெயராக இருக்கும். யோகா குரு பாபா ராம்தேவுடனான பிரச்சனையின் போதும், பலவித வர்த்தக விளம்பரங்களில், பொருட்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் பெயர் பெற்றது.
ஆனால் பலரும் இதன் பெயரின் காரணமாக, அரசாங்க மருத்துவ அமைப்பாகவே கருதி வரலாம். ஆனால் உண்மையில் இந்த அமைப்பு இந்திய மருத்துவர்களின் அரசாங்க அமைப்பு அல்ல. இது மருத்துவர்களின் தன்னார்வ கூட்டமைப்பு மட்டுமே.
டெட்டால் சோப்பிலிருந்து ஏசியன் பெயிண்ட் வரைக்கும் இந்த அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட, சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்கள் பல சந்தைகளிலும், விளம்பரங்களிலும் வலம் வருகிறது.
இது தொடர்பாக தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (LRO), இந்திய தரக்கட்டுப்பாடு அமைப்பிடம் (BIS) இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனுக்கு எதிராக புகார் அளித்துள்ளது.
மருத்துவத்துடன் தொடர்புகள் அல்லாத வணிக ரீதியிலான பொருட்களுக்கு சட்டவிரோதமாக 'சான்றிதழ்கள்' வழங்கி லட்சக்கணக்கில் கருப்பு பண வருமானம் ஈட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. தர கட்டுப்பாட்டு சட்டம் 2016ன் படி இது குற்றமாகும்.
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் இதன் மூலமாக தாங்கள் எவ்வளவு வருமானம் பெற்றுக் கொண்டோம் என்பதை வெளியிட மறுக்கிறது. கம்பெனிகளுடன் இரகசிய ஒப்பந்தங்களை (non-disclosure) செய்து சான்றிதழ்கள் வழங்கி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
டெட்டால் சோப், பழச்சாறு, பெயிண்ட் உட்பட பல வணிகப் பொருட்களுக்கு சான்றளித்து பெரும் வருமானம் ஈட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு LRO கோரிக்கை விடுத்துள்ளது
எந்த ஒரு நாட்டில் வீரர்களும் அறிஞர்களும் நிரம்ப இருக்கிறார்களோ அந்த நாட்டை எளிதில் அடிமைப் படுத்தவோ வீழ்த்தவோ முடியாது.
இது உண்மை.
முதன்முதலில் மொகலாயர்கள் பாரதத்தின் மீது படையெடுத்து வந்தபோது எண்ணற்ற போர் வீரர்கள் இருந்தனர்.அறிவில் சிறந்த பிராமணர்கள் கல்வியையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து போதித்து வந்தனர்.
முதலில் வந்த முகமது பின் காசிம் முதலில் செய்ய விழைந்தது பிராமணர்களுக்கு சுன்னத் தான்.அவர்கள் மறுத்ததால் 17வயதுக்கு மேலுள்ளவர்கள் கொல்லப்பட்டனர் என்ற வரலாற்றுக் குறிப்பை அம்பேத்கர் கூறுகிறார்.
லஞ்சப் புகாரில் கைது செய்யப்படுபவர்கள் குற்ற வழக்கில் விடுவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், துறைமுக அதிகாரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் துணை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர் வி.பிரபாகர். லஞ்சப் புகாரில் இவரை 2013-ம் ஆண்டு சிபிஐ கைது செய்தது. அதையடுத்து இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு சிபிஐ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கொரோனாவை கையாளுவதில், தமிழக அரசு காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. ஆனால், மற்ற செயல்பாடுகள் பாராட்டும்படி இல்லையே!மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்க வேண்டுமாம்.
தமிழை, மத்திய ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமாம். இதெல்லாம் இன்றைய சூழலில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் செயல்கள்.
வரிப்பணத்தை, ரேஷன் கடைவழியாக மக்களுக்கு வாரி வழங்குவது, ஆளுங்கட்சியின் சாதனை அல்ல. திராவிட ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், செய்யும் காரியம் தான்.
புதிய ஆட்சியாளர்களிடம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவில் சொத்தை எடுத்து, தவறாக பிரயோகம் செய்வது; ஹிந்திக்கு எதிராக செயல்படுவது போன்றவற்றை, மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
*கல்விச்செல்வத்தை குறைவில்லாது வாரி வாரி வழங்கும் ஸ்ரீ யோக ஹயக்ரீவமூர்த்தி கோவில்.*
🙏🇮🇳1
*அக்காலத்தில் சரியான சாலைகள் இல்லாததாலும், போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததாலும், செங்கல்பட்டு அருகே செட்டிப்புண்ணியம் என்ற சிற்றூர் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதியாக இருந்தது. 🙏🇮🇳2
இதனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்து கடவுள் சிலைகளை பாதுகாக்க, இந்த ஊரை நம் முன்னோர்கள் தேர்வு செய்தனர்.*
பல புகழ்பெற்ற ஊர்களில் உள்ள கோவில் விக்கிரகங்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டன.
ஸ்ரீமடத்தில் மாலை வேளை தரிசனம். மகானை, பக்தர்கள் ஏகாந்தமாகத் தரிசித்துக் கொண்டு இருந்த சமயம் மகாபிரபு அருளுரை நல்க, அதை மெய்மறந்து மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
இந்த நேரத்தில் மகான், "அடடா விளக்கு அணைந்து போயிற்றே...யானை மிரள்கிறதே" என்று சற்று பதறியதைப் போல் சொல்ல...உடனிருந்த அனைவரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்
"என்ன விளக்கு? எங்கே யானை?" என்று அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை..
அருகில் இருந்த ஒருவரை அழைத்து, "திருவனந்தபுரத்தில் உள்ள ரப்பர் போர்டு சுவாமிநாத அய்யருக்கு போன் போட்டு எல்லாம் நல்லபடியா நடக்கிறதான்னு கேள்" என்றார் பெரியவா.
இந்திய அரசியல்... இந்திய அரசியல் சாசனத்தில் 'ஒன்றிய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளதா? பா.ஜ.க தலைவர் SG சூர்யா விளக்கம்!
தி.மு.க-வினர் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக மத்திய அரசு என்ற ஒன்றே இல்லை என்றும், இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்றே அழைக்க வேண்டும் என்றும் பிரிவினையை ஊக்குவிக்கும் வண்ணம் பேசி வருகின்றனர்.
இது உண்மையா என்று ஆராய்ந்து நடுநிலையுடன் செய்தி வெளியிட வேண்டிய ஊடகங்களும் தி.மு.க-வினரின் பொய்ப் பிரச்சாரத்தையே தொடர்கின்றன. உண்மையிலேயே அரசியல் அமைப்புச் சட்டத்தில் 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?