#மாத்ருபஞ்சகம் #ஆதிசங்கரர் முதலை வாயில் மாட்டிக் கொண்டு ஆபத்ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள நேர்ந்தபோது தன் மகன் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும் தான் பார்க்க முடியாவிட்டாலும் எங்கேயாவது ஓரிடத்தில் நன்றாக உள்ளான் என்ற நினைவே தனக்குப் பெரிய நிம்மதி என எண்ணி தாயார் ஆர்யாம்பாள் அவரை
சன்யாஸம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அந்தச் சமயத்தில் ப்ரைஷோச்சாரண மந்திரத்தைக் கூறி ஆபத்ஸன்யாஸம் எடுத்துக் கொண்ட பகவத்பாதாள், தான் எங்கிருந்தாலும் நலமுடன் வாழவேண்டும் என்ற தாய்மை உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் அன்னையின் வயோதிக காலத்தில் அல்லது அவரது உயிர் பிரியும் நிலையில்
அன்னையின் ஈமச்சடங்குகளை தாயின் ஒரே மகன் என்ற உரிமையில் தான் கட்டாயம் நிறைவேற்றுவேன், தான் ஏற்றிருக்கும் சன்யாசம் ஒரு தடையாக இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். அதேபோல சிருங்கேரியில் அவர் முகாமிட்டிருந்தபோது தனது அன்னைக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்து உடனடியாக
காலடி திரும்பினார். தன் மகிமையால் தேவலோக விமானத்தில், வேத வாக்கியங்கள் ஒலிக்க, தன் தாயைப் புண்ய லோகத்திற்கு, மோட்ச பதத்திற்கு அனுப்பிவைக்க வந்தார். ஆனால், காலடி ஊரில் இருந்த பழமைவாதிகள் ‘ஒரு சந்நியாசி தன் தாயாரேயானாலும் அவருடைய வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. ஆனால், தாயோடு
ஒரு மகவுக்கு ஏற்பட்ட உறவு, துறவினால் அழிக்க முடியாதது என்று கூறிய ஆதிசங்கரர் தன்னுடைய காவி உடையை நீக்கிவிட்டு, அன்னைக்குப் பணிவிடை செய்தார். பிரம்மத்தை உணர்ந்த ஞானி தன்னுடைய மகன் என்பதை உணர்ந்திருந்த அன்னை ஆர்யாம்பாள், ஆதிசங்கரரிடம் தனக்கு பிரம்ம ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று
உயிர் பிரியும் தருவாயில் கேட்டாள். உடனே #சிவபுஜங்கம் மற்றும் #விஷ்ணுபுஜங்கம் ஆகிய ஸ்லோகங்களை ஆதிசங்கரர் பாடினார். அதைக் கேட்டுக் கொண்டே தாயின் உயிர் பிரிந்தது. பிறகு ஆதிசங்கரர் தன் தாயின் பூத உடலுக்கு, ஊரார் மற்றும் உறவினரின் எதிர்ப்புக்கிடையே, தனது வீட்டுப் பின்புறமிருந்த வாழை
மட்டைகளை அடுக்கித் தன் யோகத் தீயினால் இறுதி காரியங்களைச் செய்தார். பிறகு தன் தாய் தனக்குச் செய்தவற்றையெல்லாம் நினைத்து அடங்காத் துயருற்றவராக பின்வரும் ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். #மாத்ருபஞ்சகம் என்ற இத்துதி உலகப் புகழ் பெற்றது.
பொருள்: தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கிய
போது அவள் அடைந்த உடல் துன்பத்துக்குப் பிரதி உபகரமாக நான் ஏதாவது செய்திருக்கிறேனோ? பிரசவ சமயத்தில், தாங்கிக்கொள்ள இயலாததும், பிறரால் பங்கிட்டுக்கொள்ளவும் முடியாததுமான, அவள் அனுபவித்த சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் என்ன கைம்மாறு செய்திருக்கின்றேன்? என்னைப் பிரசவித்ததும்
என் உடல்நலத்தைப் பாதுகாக்க கொஞ்சமும் ருசியில்லாத உணவைச் சாப்பிட்டு ஜீவித்த அந்தத் தியாகச் செம்மலுக்கு நான் என்ன பரிகாரம் செய்திருக்கிறேன்? தூக்கமில்லாமல், சரியான உணவு இல்லாமல் தன் உடலை இளைக்க வைத்துக்கொண்டு, என்னை அரவணைத்தபடி எனது மலத்திலேயே படுத்துக்கொண்டு ஒரு வருஷம் என்னைக்
காத்த தாயாருக்கு நான் என்ன செய்திருக்கிறேன்? தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு அளவற்றப் பொறுமையுடன் காப்பாற்றிய தாயாருக்கு அந்தத் தியாகத்துக்கு சமமாகப் பிரதியுபகாரம் யாராலுமே செய்ய முடியாது. எனவே அம்மையே, இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்த ஒன்று உங்களுக்ககு நமஸ்காரம் செய்வதுதான்,
நான் குருகுலக் கல்வியை மேற்கொண்டிருந்தபோது ஒருநாள் அம்மா நீங்கள் தன்னை மறந்து தூங்கி
விட்டீர்கள். அந்தத் தூக்கத்தில் நான் சன்யாசியானதுபோல கனவைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து பதறியடித்து அழுதவண்ணம் குருகுலம் வந்து கதறினீர்கள். அதைப் பார்த்து குருகுலவாசிகளும் கதறினார்கள், என்மீதான உங்கள் பாசத்தைக் கண்டு அவர்கள் நெக்குருகினார்களே, என் தாயே, உங்களுக்கு நமஸ்காரம்.
3. ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே
தோயமபி வா
ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த
விதினா
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதர
துலாம்
அம்மையே, நீங்கள் முக்தியடையும் சமயத்தில், உங்களுக்குக் கொஞ்சம் ஜலமாவது வாயில் விட்டேனா? பிறகும் ஸ்வதா மந்திரத்தினால்
ஸ்ராத்தம், தர்ப்பணமாவது செய்தேனா? உங்களது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உங்கள் காதில் ஓதினேனா? அச்சமயம் எனக்குக் கிடைக்காததாலும், எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும், சன்யாசியானதாலும் எந்த வைதீகமும் அனுஷ்டிக்க முடியாது போனதாலும், மனம் தவிக்கின்ற உங்களது மகனான என்னிடம் தயவு
செய்ய வேண்டுமம்மா! உங்களது கமல பாதங்களைச் சரணடைந்து
வேண்டுகின்றேன் தாயே.
அம்மையே, என்னைக் காணும்போதெல்லாம், ‘என் முத்தே, என் கண்ணே, என் அப்பனே, ராஜா! நீ
சிரஞ்சீவியா இருக்க வேண்டும்’ என எப்போதும் சொல்லி என்னிடத்தில் கருணையையும், அன்பையும், தயையும் கலந்த அம்ருத மயமான சொற்களால் என்னைச் சீராட்டி, பாலூட்டி, தாலாட்டி வளர்த்த என் அன்னைக்கா வாயிலே, வேகாத அரிசியைச் சமர்ப்பிப்பேன்! இதைப் பொறுக்க முடியவில்லையே அம்மையே! உன்னைச் சரணடைகிறேன்.
தாயே, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனை சமயத்தில் ‘அம்மா! அப்பா! சிவபெருமானே, கிருஷ்ணா, கோவிந்த, ஹரே முகுந்தா’ என்று வலி தாங்கிக்கொள்ளும் உபாயமாக
தெய்வங்களை அழைத்த என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும் உயர்த்தி உங்களுக்கு அஞ்சலி செய்து, உங்களைச் சரணடைகின்றேன்.
பெற்ற தாய்க்கு, அவரின் இறுதிப் பொழுதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் முற்றும் துறந்த சந்நியாசியான, பரமேஸ்வர அவதாரமான ஆதிசங்கரர். முற்றும் துறந்த ஒரு துறவியையே
தாயன்பானது கதறச் செய்தது என்றால் அதற்கு உன்னதமானதொரு காரணமும் உண்டு. தன் காலத்துக்குப் பின் வரக்கூடிய சந்நியாசிகளுக்கெல்லாம் வழிகாட்டத் தோன்றியவர். ‘தாயிற் சிறந்த கோயிலில்லை’ என்னும் சாஸ்திர வாக்கியத்தை உறுதிபடுத்தத் தோன்றியவர் அவர். அவரைப் பெற்றெடுத்த தாய்-தந்தையின் மகத்துவத்த
விவரிக்கதான் இயலுமோ? அதிலும் முன்னறி தெய்வமான அவரது தாயாரின் பெருமை அளப்பரியது. அவரைப் போன்றதொரு மாமுனி தோன்றிய குலத்தின் 60 தலைமுறை முன்னோரும், 60 தலைமுறை பின்னோரும் உய்வை அடைகிறார்கள். மனுதர்ம சாஸ்திர காலத்திலிருந்து எல்லா சாஸ்திரங்களிலும் தாயாரின் உயர்வைக் கூறுவதைக்
காண்கிறோம். #மனு, ‘‘ஒரு மகன் நூறு வருடங்கள் பாடுபட்டாலும் தன் பெற்றோருக்குத் தான் பட்ட பிறவிக் கடனைத் தீர்க்க முடியாது’’ எனக் கூறுகிறார் #சாணக்யரும் தன் நீதி சூத்திரத்தில் தாயின் பெருமையை, ‘‘தாயே தலை சிறந்த குருவாவாள்; எந்நிலையிலும் அவள் காக்கப்பட வேண்டியவள் என்கிறார்.
எல்லா மந்திரங்களுமே குருமுகமாகத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த மந்திரம் தேவை என்பதை அவர்களே அறிவார்கள். குரு கிடைக்க நாம் மனதார பிரார்த்தித்தால் அவரே நம்மை தேடி வருவார். அவர் உபதேசிக்கும் மந்திரமே பலனைத் தரும். மேலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்ள முடியும். ஒரு எழுத்து
மாறினாலும், உச்சரிப்பு மாறினாலும் பொருள் மாறும், நற்பலனுக்குப் பதிலாக கெடுதி வந்து சேரும்.
இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்லும் சக்தி வாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள்: 1. பஞ்சாக்ஷர சிவ மந்திரம்
"ஓம் நமசிவாய"
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உடல்
The News in TOI Delhi read : ‘Procure Pfizer Vax as soon as possible for kids, says #Kejriwal’.
Now, read the message below, which has been in circulation on Social media.👇 1. The Gandhi family started backing Pflzer openly along with its associates (Opposition) in social media.
2. A news float in Social Media that there would be third wave which will put children’s at risk. 3. In two weeks, CDC, Center of Disease Control under Biden approves vaccination of kids from May 13, 2021 4. As soon as CDC approves, Pfizer roll out vaccination for kids the very
next day all over US. 5. No trial data is ever shared in public. No one knows when, how and where it was developed 6. India has appox 40Cr children under 18 years. With Rs 3000 Pflzer per kid, the minimum business for Pflzer is appox 120000+ Cr. If a conservative 20% commission
Hi - The second wave of Covid in TN may be coming down, but the repurcusions that it has left behind for the families who have lost a loved one may be permament. Coviduthalai is partnering with an NGO (Sarada Foundation) to identify such famililies and help rehabilitate them.
If you know a family who has lost their breadwinner to covid and are struggling financially - please let us know. We will do our best to help them get back on their feet once again. We may be able to help with : 1) Finding the spouse (or an eligible son/ daughter) a job or a help
them find a better job with more pay if possible 2) Help them identify, enroll and 100% fund their upskilling course to be job ready 3) (or) Help them buy small capital investment product to help them start a business
The applicant has to fill ONLY their name and number here
"காருண்யம் – கருணை காட்டுவது – என்றால் இப்படிக் கருணை காட்டுகிறவர் ஓரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்குப் பாத்திரமாகிறவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிரியும் தொக்கி நிற்கிறது. ”நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம், நம் உதவியைப் பெறுகிறவர் நம்மைவிடத் தாழ்த்தியாக இருக்கிறார், நாம்
‘கருணை’ காட்டுகிறோம்” என்று நினைக்கிறபோதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது. உபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும். மாறாக நாம் உபகாரம் பண்ணும்போது, போனால் போகிறது என்றும் யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், இது ஆணவ
அஹங்காரங்களுக்கு இடமாகிவிடுகிறது. உபகாரத்தால் நம் ஆத்மாவை உயர்த்திக் கொள்வதற்கு நேர்மாறாக ஆத்மஹானியே உண்டாகிவிடும். கருணை, காருண்யம் என்கிற வார்த்தையைச் சொல்வதைவிட அன்பு என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத் தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடமே நாம் ஸ்வபாவமாகச்
#துளசிதேவி அவர் மகிமைகளை சொல்லில் அடக்கமுடியாது. சகல தோஷங்களையும் துயரங்களையும் விரட்டும் வல்லமை வாய்ந்தது துளசி. புராணங்களிலும் புனித நூல்களிலும் துளசியின் பெருமை குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. தேவர்களும், அசுரர்களும் சாகா வரம் தரக்கூடிய அமிர்தத்தைப் பெற கடலைக் கடைந்த போது
அதிலிருந்து ஆலகால விஷம், அமிர்தம் தவிர துளசி தேவி, மகாலட்சுமி, சாளக்கிராமம் உள்ளிட்ட தெய்வீக வாய்ந்தவையும் வெளியாகின. அப்படி வெளியான துளசி தேவி திருமாலை சரணடைந்தார். மூலிகை செடியாக வெளி வந்த துளசி, திருமாலுக்கு மிகப் பிரியமானவர். நம் முன்னோர்கள் பெரும்பாலானோரின் வீட்டில் துளசி
மாடம் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது துளசி மாடம் வைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஓரிடத்தில் வகை வகையாக மலர்ச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தாலும் அங்கு துளசிச் செடி இல்லையெனில், அந்த இடத்தை நந்தவனமாக ஏற்க இயலாது. துளசி படர்ந்த இடத்தை ‘பிருந்தாவனம்’ என்று சொல்லுவார்கள்.
பலன் இல்லாத பிரார்த்தனை என்பது மனித ஹிஸ்டரியிலேயே கிடையாது என்று மகா பெரியவா சொன்னதை தெய்வத்தின் குரல் வாயிலாக ராம சர்மா விளக்குகிறார். சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை இந்தக் காணொளி விளக்கும். பிரார்த்தனைக்கான பலன் பற்றிய மேற்கோள் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.
அந்த மேற்கோளில் பிரார்த்தனைக்குரிய தெய்வம் ஜீஸஸ். தெரிந்த கதை தான் ஆனால் இவர் சொல்வதை கேட்பதிலும் ஒரு சுவாரசியம் உள்ளது.
என்ன அழகா விளக்குகிறார் பாருங்கள். He says the doctor is neither a theist or an atheist, he is also not an agnostic. அவர் தன் வேலையை செய்து பலனை எதிர்பார்க்காமல் இருக்கும் ஒரு கர்ம யோகி. நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்🙏🏻