காலை நேர நற்சிந்தனைக்கு ஒரு குட்டி ஆன்மீக கதை #பக்தராமதேவ் மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவ் தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தார். சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம்
சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம். இந்த வருடம் உண்டியல் பணத்தை எண்ணியபோது அதில் விட்டலனுக்கு நூல் வேஷ்டியும்- அங்கவஸ்திரம் மட்டும்தான் வாங்க முடியும் எனக் கணக்கிட்டு வருந்தினார். மனதைத் தேற்றிக் கொண்டு நூல் வேஷ்டி, அங்கவஸ்திரத்தை வாங்கிக் கொண்டு பண்டரிபுரம்
நோக்கி நடந்தார். வழியில், அழுக்கு வேஷ்டியும் கிழிந்த துண்டுமாய் பெரியவர் ஒருவர் பின்னே வந்தார். ராமதேவிடம் அவர் தாங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். உடனே அவன், விட்டலனை தரிசிக்க பண்டரிபுரம் செல்கிறேன் சாமி என்றார் உற்சாகத்துடன். அப்படியா! நானும் அங்குதான் செல்கிறேன்.
பண்டரிபுரம் செல்வதற்கு, குறுக்குப் பாதை ஒன்று உள்ளது. எனக்கு அந்த வழி தெரியும். சந்திரபாகா நதியில் குளித்து விட்டு, மாலையில் விட்டலனை தரிசிக்கலாம் என்று ராமதேவனை அழைத்தார் பெரியவர். அவரும் சம்மதித்தான். பின்னர் இருவரும் பேசிக் கொண்டே வந்ததில், களைப்பே தெரியவில்லை. பெரியவர்
சொன்னபடி மாலை வேளை துவங்கும் முன்பே கோயிலுக்கு அருகில் உள்ள சந்திரபாகா நதிக்கரையை அடைந்தனர்.
பண்டரிநாதனுக்கு சமர்ப்பிப்பதற்காகக் கொண்டு வந்த வஸ்திரத்தை ஒரு பையிலும், தான் குளித்து விட்டு உடுத்திக் கொள்ளும் ஆடையை வேறொரு பையிலுமாக வைத்திருந்தார் ராமதேவ்.
இரண்டு பைகளையும் கரையில்
வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். பெரியவரும் நீரில் இறங்கினார். தான் அணிந்திருந்த வேஷ்டியை, அங்கு இருந்த கல்லில் அடித்துத் துவைத்து, அலசி, கரையில் காய வைத்தார் ராமதேவ். பெரியவரோ, துவைப்பதற்கு சிரமப்பட்டார். இதை அறிந்த ராமதேவ், அவரது வேஷ்டியை வாங்கித் துவைத்து, நீரில் அலசிப்
பிழிந்தார். பிறகு வேஷ்டியை காய வைக்க விரித்தவர் அதிர்ந்து போனார். ஏற்கெனவே கிழிந்திருந்த வேஷ்டி, இப்போது பல இடங்களில் கிழிந்திருந்தது. பெரியவரிடம் மாற்று வேஷ்டி கூட இல்லை. பெரியவர் அப்போதே சொன்னார் கடந்த வருடம் அன்பர் ஒருவர் கொடுத்த வேஷ்டி இது. ரொம்பவே கிழிந்து விட்டது.
ஜாக்கிரதையாக துவையுங்கள் என்று! இப்போது இந்த வேஷ்டி பாழாகி விட்டதே! குளித்து விட்டு எதை உடுத்துவார்? நம்மிடமும் ஒரே ஒரு மாற்று வேஷ்டிதானே உள்ளது? புதிதாக வேஷ்டி வாங்கித் தரலாம் என்றால் பணமும் இல்லையே? பாண்டுரங்கா!! என்ன செய்வது என்று புலம்பினார் ராமதேவ். என்ன? ராமதேவா! என் வேஷ்டி
காய்ந்து விட்டதா என்று கேட்டபடி கரைக்கு வந்தார் பெரியவர். இடுப்பில் துண்டு மட்டுமே உடுத்தி இருந்தார். பெரியவரே! உங்கள் வேஷ்டியை அடித்துத் துவைத்ததில், நார்நாராகக் கிழிந்து விட்டது. என்னை மன்னியுங்கள் என்றார் ராமதேவ். இதைக் கேட்டதும் இப்போது என்ன செய்வது? என்று கவலைப்பட்டார்
பெரியவர். வருந்த வேண்டாம் சுவாமி. பாண்டுரங்கனுக்கு சமர்ப்பிக்கப் புது வேஷ்டியும் அங்கவஸ்திரமும் எடுத்து வந்திருக்கிறேன். இதை உடுத்திக் கொள்ளுங்கள் என்று பாண்டுரங்கனுக்காக வாங்கிய வேஷ்டி- அங்கவஸ்திரத்தைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார் ராமதேவ். அடடா என்ன காரியம் செய்கிறாய்
என்று வேஷ்டியை வாங்க மறுத்தார் பெரியவர். பெரியவரே! பாண்டுரங்கனுக்கு பட்டு, பீதாம்பரம் போன்ற விலை உயர்ந்த வஸ்திரங்களை வழங்க பலர் உள்ளனர். கடந்த முறை இதேபோல், சாதாரண நூல் வேஷ்டியும், அங்கவஸ்திரமும் வாங்கி வந்தேன். இதை அணிவிக்க மறுத்து விட்டார் அர்ச்சகர். பாண்டுரங்கனுக்கு பட்டும்
பீதாம்பரமும்தான் அழகு. நீ கொண்டு வந்த நூல் வேஷ்டியைக் கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுத்து விட்டுப் போ என்று ஏளனமாகப் பேசினார். பிறகு வயதான ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தேன். இப்போதும் அதேபோல் நூல் வேஷ்டி தான் எடுத்து வந்துள்ளேன். வழக்கம் போல் வேஷ்டியைப்
புறக்கணிப்பார். இதற்கு உங்களுக்குக் கொடுக்கலாமே? ஏழையின் சிரிப்பில்தானே ஆண்டவன் இருக்கிறான் என்றார் ராமதேவ். அதன் பின் வேஷ்டியை வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார் பெரியவர். அத்துடன் ராமதேவா! வயதாகி விட்டதால் கைகள் நடுங்குகின்றன. நீயே எனக்கு அணிவித்து விடேன் என்றார். அதன்படி வேஷ்டியை
அவரது இடுப்பில் கட்டிவிட்டவர், அங்கவஸ்திரத்தை அவரது தோளில் அணிவித்தார். ஆஹா! இப்போது நீங்கள், அந்த பண்டரிநாதனைப் போலவே இருக்கிறீர்கள் என்றார் ராமதேவன். அந்தப் பெரியவர் மெள்ள புன்னகைத்தார். பின்னர் இருவரும் நெற்றியில் திருநாமம் தரித்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றனர். ராமதேவனுக்குப
பின்னே பெரியவர் வந்து கொண்டிருந்தார். அன்றைக்கு பாண்டுரங்கனை தரிசிக்க ஏகக் கூட்டம். ராமதேவ் திரும்பிப் பார்த்தார். பெரியவரைக் காணவில்லை. பல இடங்களிலும் தேடினார். பாண்டுரங்கனை தரிசித்து விட்டு மீண்டும் பெரியவரைத் தேடுவோம் என்று சந்நிதிக்கு வந்தார். அங்கே ராமதேவன் வாங்கி வந்த நூல்
வேஷ்டியையும் அங்கவஸ்திரத்தை யும் அணிந்தபடி காட்சி தந்தார் பரம தயாளனான அந்த பாண்டுரங்கன். வியப்பில் மூர்ச்சித்து நின்றார் ராமதேவன்.
பகவானே! பெரியவராக என்னுடன் வந்தது நீதானா? பட்டு- பீதாம்பரத்தை ஏற்கும் அர்ச்சகர்கள், குறைந்த விலையில் உள்ள வேஷ்டியையும், அங்கவஸ்திரத்தையும் அணிவிக்க
மாட்டார்கள் என்று நேராக என்னிடமே வந்து, என் கையாலேயே உனக்கு அணிவிக்கும் பாக்கியத்தையும் வழங்கி விட்டாய். என்னே உன் கருணை என்று பாண்டுரங்கனை விழுந்து வணங்கினார் ராமதேவ்.
பண்டரிநாத் மகாராஜ் கீ ஜெய்!
விட்டல விட்டல! ஜெய் ஹரி விட்டல!
விட்டல விட்டல! பாண்டுரங்கவிட்டல! பண்டரிநாத விட்டல!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

11 Jun
Most historic victory to Hindus and their temples. Chennai High Court verdict on 7th June 2021.
1. Hindu temple lands /properties cannot be leased or sold by any one or by any government. The temple lands and properties should remain with temples only.
2. The TN govt. to give
details of fraudsters using the temple lands and balance rents/lease amounts within 6 weeks. All arrears to be collected and action to be taken against people not paid rent/lease and illegal occupants. Sold temple properties/lands should re located.
3. Temple funds and income
should be used for wages of temple workers, maintenance, rituals, poojas of the temples only.
4. The surplus money from Hindu temples should be used for other Hindu temples only.
5.Temple lands and properties can not be taken over for public utility purpose like govt.
Read 6 tweets
10 Jun
Servicing a Tissot watch after 167 years. Made in 1853. Don’t miss watching this video, a riveting experience. Salute to human ingenuity. Good that the watch is electrical and not electronics.
What painstaking efforts to make it as good as new!
Fully mechanical. Perfect performance!
Read 4 tweets
9 Jun
#வடபழனிமுருகன் கோவில் சொத்து மீட்பு நாடகம்!
முதலமைச்சர் ஆணைக்கிணங்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத்துறை ஆணையர் & சென்னை மாநகராட்சி ஆணையர் ₹300 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலத்தை மீட்டதாக செய்தி. இது வெறும் டிரெய்லர் முழு படம் தொடரும் என்று மார் தட்டினார் அமைச்சர்.
இந்த சொத்தின் உண்மை நிலவரம் என்ன? சாலிகிராமம் பழைய சர்வே எண்கள் 21,23,25 & 26 மொத்த பரப்பளவு 5.38 ஏக்கர் பட்டா சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே கோவில் பெயரில் தான் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது அதை யாரிடம் இருந்து மீட்டார்கள்? ஒரே ஒரு அரசாங்க கட்டிடம் தவிர அது காலி நிலம்.
அந்த நிலத்தில் பல வாகனங்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் வாடகை கொடுக்கவில்லையாம்! அவர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற சொல்லியுள்ளார்களாம்! இதை செய்வதற்கு அமைச்சர், அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் போலீஸ் கூட்டத்துடன் சொன்றுள்ளது. இது தேவையா?
இந்த வாகனங்களை
Read 5 tweets
9 Jun
#மாத்ருபஞ்சகம்
#ஆதிசங்கரர் முதலை வாயில் மாட்டிக் கொண்டு ஆபத்ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள நேர்ந்தபோது தன் மகன் எப்படியாவது உயிரோடு இருந்தால் போதும் தான் பார்க்க முடியாவிட்டாலும் எங்கேயாவது ஓரிடத்தில் நன்றாக உள்ளான் என்ற நினைவே தனக்குப் பெரிய நிம்மதி என எண்ணி தாயார் ஆர்யாம்பாள் அவரை
சன்யாஸம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அந்தச் சமயத்தில் ப்ரைஷோச்சாரண மந்திரத்தைக் கூறி ஆபத்ஸன்யாஸம் எடுத்துக் கொண்ட பகவத்பாதாள், தான் எங்கிருந்தாலும் நலமுடன் வாழவேண்டும் என்ற தாய்மை உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் அன்னையின் வயோதிக காலத்தில் அல்லது அவரது உயிர் பிரியும் நிலையில்
அன்னையின் ஈமச்சடங்குகளை தாயின் ஒரே மகன் என்ற உரிமையில் தான் கட்டாயம் நிறைவேற்றுவேன், தான் ஏற்றிருக்கும் சன்யாசம் ஒரு தடையாக இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். அதேபோல சிருங்கேரியில் அவர் முகாமிட்டிருந்தபோது தனது அன்னைக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்து உடனடியாக
Read 23 tweets
8 Jun
எல்லா மந்திரங்களுமே குருமுகமாகத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு எந்த மந்திரம் தேவை என்பதை அவர்களே அறிவார்கள். குரு கிடைக்க நாம் மனதார பிரார்த்தித்தால் அவரே நம்மை தேடி வருவார். அவர் உபதேசிக்கும் மந்திரமே பலனைத் தரும். மேலும் பிழையில்லாமல் கற்றுக்கொள்ள முடியும். ஒரு எழுத்து
மாறினாலும், உச்சரிப்பு மாறினாலும் பொருள் மாறும், நற்பலனுக்குப் பதிலாக கெடுதி வந்து சேரும்.
இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்லும் சக்தி வாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள்:
1. பஞ்சாக்ஷர சிவ மந்திரம்
"ஓம் நமசிவாய"
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உடல்
புனிதமடைகிறது. சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
2. ருத்ர மந்திரம்
"ஓம் நமோ பகவதே ருத்ராய"

3. சிவ காயத்ரி மந்திரம்
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"

4. சிவ தியான மந்திரம்
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
Read 5 tweets
8 Jun
The News in TOI Delhi read : ‘Procure Pfizer Vax as soon as possible for kids, says #Kejriwal’.
Now, read the message below, which has been in circulation on Social media.👇
1. The Gandhi family started backing Pflzer openly along with its associates (Opposition) in social media.
2. A news float in Social Media that there would be third wave which will put children’s at risk.
3. In two weeks, CDC, Center of Disease Control under Biden approves vaccination of kids from May 13, 2021
4. As soon as CDC approves, Pfizer roll out vaccination for kids the very
next day all over US.
5. No trial data is ever shared in public. No one knows when, how and where it was developed
6. India has appox 40Cr children under 18 years. With Rs 3000 Pflzer per kid, the minimum business for Pflzer is appox 120000+ Cr. If a conservative 20% commission
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(