1983இல் வெளியான Witches என்னும் புத்தகத்தில் இருந்த கதை, குழந்தைகளான எங்களுக்கு காட்சி வடிவில் கொடுத்திருக்கிறார் Forrest Gump படத்தின் டைரக்டர் Robert Zemeckis.
Get Smart, Dark Knight Rises, Interstellar படங்கள் மூலம் புகழ் பெற்ற Anne Hathaway வில்லியாக,
அதுவும் சும்மா வில்லி இல்ல, சூனியக்கார வில்லியாக நடித்து வந்துள்ள படம், நிறைய மாயாஜால காட்சிகள் நிறைந்தது.
இந்த படம் ஒரு சிறுவனை (ஹீரோ) சுற்றி நடக்கும் கதையே,
ஒரு விபத்தில் அந்த சிறுவனின் அப்பா அம்மா இறந்துவிட,
அந்த சிறுவன் அவன் பாட்டியின் வீட்டுக்கு செல்கிறான்,
ஒரு PET வெள்ளை எலி ஹீரோ கூடவே இருக்கிறது,
ஒரு ஷாப்பிங் மாலில் ஒரு சூனியக்காரியை பார்த்து பயந்து அவன் பாட்டியிடம் சொல்ல,
அவன் பாட்டி பதிலுக்கு ஹீரோவுக்கு ஒரு கதை சொல்ல, கதை முடிந்ததும்,
அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வேறு ஊருக்கு ஒரு பெரிய ஹோட்டலுக்கு வந்து விடுகிறார்கள்,
அங்கு அந்த சூனியக்காரிகள் கூட்டம் நடத்துகிறார்கள்,
மருந்து கலந்த சாக்லேட் சாப்பிட்டு இவனோட புது நண்பன் எலியாக மாற,
ஒளிந்து இருக்கும் ஹீரோவும் எலியாக மாறுகிறான்,
ஹீரோவோட எலி பேசுகிறது,
மொத்தம் 30 சூனியக்காரிகள், மூணு எலிகள், பாட்டி.
இவர்கள் அடிக்கும் லூட்டிகளே இந்த படம்.
எலிகள் ஏன் குழந்தைகளாக மாறினார்கள் ?
பாட்டிக்கு என்ன ஆச்சு ?
சூனியக்காரிகள் என்ன ஆனார்கள் ?
இதெல்லாம் படத்துல பாருங்க.
கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும். பெரியவர்கள் ஒரு முறை பார்க்கலாம்.