ஹீரோவோட அப்பா, அம்மா குழந்தைன்னு எல்லாரோட தேவைகளையும் ஹீரோவோட தங்கையே கூட இருந்து பாத்துக்குறா,
போலீஸ் ஸ்டேஷன்ல ஹீரோ மனைவி இறந்த நேரத்துல எடுத்த ஒரு வீடியோ காமிக்கிறாங்க அதுல ஹீரோவோட தங்கை குடை பிடிச்சிட்டு நடந்து போறா,
ஹீரோக்கு தங்கை மேல டவுட்,
இவ எப்படி ஆக்சிடென்ட் நேரத்துல அந்த இடத்துல இருக்கா ?
வீட்ல புதுசா ரெண்டு பேரை தங்கச்சி வேலைக்கு வைக்குறா,
நடக்க முடியாத அம்மாக்கு துணையா ஒரு பையன், அப்பாக்கு துணையா ஒரு பொண்ணு,
யார் அந்த ரெண்டு பேர் ?
ஹீரோவோட பொண்ணு அடிகடி ஒரு பெயரை சொல்லுது.
யார் அது ?
ஹீரோவோட பொண்ணு, தங்கை & வேலைக்காரி 3பேரும் ஒருநாள் டான்ஸ் கிளாஸ்க்கு போறாங்க,
அங்க ஒருத்தன் ஹீரோவோட தங்கையை வேற பெயர் சொல்லி கூப்டுறான்,
அதை பத்தி வேலைகாரி என்னன்னு கேக்க - தங்கை மழுப்பி பதில் சொல்றா,
இதை பத்தி ஹீரோக்கு சொல்லணும்னு நினைச்சு இவ ஒன்னு செய்ய,
அங்க என்ன நடந்தது ?
அடுத்தநாள் ஹீரோவின் தங்கை,
வேலைகாரி ஒரு ஆளோட ஓடிபோயிட்டா ன்னு சொல்றாங்க, "5 வருசமா வேலை செஞ்ச வேலைகாரி ஒரு ஆளோட போறதுனாலும் சொல்லிட்டு தானே போவா ? எப்டி யார்கிட்டயும் சொல்லிக்காம ஒரு லெட்டர் மட்டும் எழுதி வச்சிட்டு போவா" ன்னு ஹீரோக்கு பெரிய டவுட்.
வேலைக்காரிக்கு என்ன ஆச்சு ?
மேல கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் அடுத்து வர்ற கேள்வியின் பதில்ல தெரிஞ்சிடும்.
ஹீரோவின் தங்கையாக குடும்பத்தில் வந்திருக்கும் பெண் யார் ?
இதெல்லாம் தெரிஞ்சிக்க படத்த பாருங்க.
இது மிஸ்ட்ரி திரில்லர் படம் தான், தாராளமா நைட்ல பாக்கலாம்.
மேல சொல்லி இருக்குறது கொரியன் படம்,
Intruder 2020
அதே பெயரில் அதே வருடத்தில் வந்த
The Intruder 2020 - இது வேறு ஸ்பானிஷ் படம்.
1983இல் வெளியான Witches என்னும் புத்தகத்தில் இருந்த கதை, குழந்தைகளான எங்களுக்கு காட்சி வடிவில் கொடுத்திருக்கிறார் Forrest Gump படத்தின் டைரக்டர் Robert Zemeckis.
Get Smart, Dark Knight Rises, Interstellar படங்கள் மூலம் புகழ் பெற்ற Anne Hathaway வில்லியாக,
அதுவும் சும்மா வில்லி இல்ல, சூனியக்கார வில்லியாக நடித்து வந்துள்ள படம், நிறைய மாயாஜால காட்சிகள் நிறைந்தது.
இந்த படம் ஒரு சிறுவனை (ஹீரோ) சுற்றி நடக்கும் கதையே,
ஒரு விபத்தில் அந்த சிறுவனின் அப்பா அம்மா இறந்துவிட,
அந்த சிறுவன் அவன் பாட்டியின் வீட்டுக்கு செல்கிறான்,