நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சும்மா என்ற தலைப்பில் நீண்ட நேரம் உரையாற்றியதை பார்ப்போம். 🔽
# சும்மா இதைப் படியுங்கள் நிச்சயம் நீங்கள் அசந்து தான் போவீர்கள்.
# உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன.
# தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும் எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும் தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கின்றது.
# சும்மா சொல்லுவோம் தமிழின் சிறப்பை.
# அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான் இந்த சும்மா அது சரி சும்மா என்றால் என்ன?
# பேச்சுவழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு சொல் தான் சும்மா.
# சும்மா என்கிற சொல்லுக்கு தமிழில் 15 க்கும் மேற்பட்ட பொருள் உண்டு என்றால் பாருங்களேன்.
# வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா அழகாக எடுத்துக்காட்டுகிறது.
1. கொஞ்சம் "சும்மா" இருடா!
=> அமைதியாக / Quiet
2. கொஞ்ச நேரம் "சும்மா" இருந்து விட்டுப் போகலாமே?
=> களைப்பாறி கொண்டு / Leisurely
3. அவரைப் பற்றி "சும்மா" சொல்லக் கூடாது!
=> அருமை / Fact
4. இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று நினைத்தாயா?
=> இலவசமாக / Free
5. "சும்மா" கதை விடாதே?
=> பொய் / Lie
6. "சும்மா" தான் இருக்கு நீ வேண்டுமானால் எடுத்துக்கொள்.
=> உபயோகமற்று / Without Use
7. "சும்மா", "சும்மா" கிண்டல் பண்ணுகிறான்.
=> அடிக்கடி / Very Often
8. இவன் இப்படி தான் "சும்மா" சொல்லிக்கிட்டே இருப்பான்.
=> எப்போதும் / Always
9. ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்.
=> தற்செயலாக / Just
10. இந்த பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது.
=> காலி / Empty
11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே.
=> மறுபடியும் / Repeat
12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக் கூடாது .
=> வெறுங்கையோடு / Bare
13. "சும்மா" தான் இருக்கின்றோம்.
=> சோம்பேறித்தனமாக / Lazily
14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான்.
=> வெட்டியாக / Idle
15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன்.
=> விளையாட்டிற்கு / Just For Fun
# நாம் அன்றாடம் பயன்படுத்தும் "சும்மா" என்கிற ஒரு சொல் நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும் தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் 15 விதமான பொருளை இங்கே கொடுக்கிறது என்றால் அது "சும்மா" இல்லை.
# உலகில் உள்ள மற்ற மொழிகள் அனைத்தும் வாயினால் பேச செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை.
# ஆனால் நம்முடைய தமிழ் மொழியானது இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாக இருக்கின்றது என்றால் அது மிகையில்லை.
# இதனால் தான் தமிழுக்கு அமுதென்று பேர்.
இவ்வாறு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் பேசினார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"இது" இல்லாமல் போய் இருந்தால் உலகமயமாக்கல் யுகத்தில் "ஒருங்கிணைந்த முன்னேற்றம்" தடைப்பட்டு போய் இருக்கும். அதுவும் லாக்டவுன் காலத்தில் மிக பெரிய மன அழுத்தத்தை தந்திருக்கும்.
அது என்ன?
// பின் குறிப்பு //
# மேற்கண்ட கேள்விக்கு "அரசு" / "மின்சாரம்" / "இணையம்" / "அலைபேசி" / "கணினி" / "அறிவியல் கண்டுபிடிப்பு" உட்பட பல விடைகள் சரியானது போல தென்படும் ஆனால் தவறு.
# அடுத்த Clue கொடுத்தால் விடை எளிதாகிவிடும் அதனால் அதை தவிர்க்கின்றேன்.
IT or Non-IT வேலையில் நேரக் கட்டுப்பாடற்று உடல்நலக் கவனிப்பாரற்று உணவு உட்கொள்ள நேரமற்று விலங்குகள் போல உழைப்பதே இன்று பெருமையான விஷயமாகி போனது.
நாய் மாதிரி உழைக்கிறீர்களா? என்பது உங்கள் மனதுக்கே தெரியும்.
இதற்கு காரணம் கேட்டா வண்டி வண்டியா சொல்வாங்க.
உண்மையில் மாற்று வழி தேட முற்படாத அல்லது ரிஸ்க் எடுக்க மறுக்கிற அல்லது குடும்ப அமைப்பை மீற விரும்பாத கூட்டத்தில் மாற்றத்தை ஒரு நாளும் எதிர்பார்க்க இயலாது.
பென்ஞ் தேய்க்கவும் சுற்றத்தில் கவர்ச்சியும் சில லகரங்கள் போது என்பவர்களை ஒன்றும் செய்ய இயலாது.
வேலைக்கு போங்க ஆனா Balanced Life தான் அடிப்படை.
Balanced Life ன்னா என்னங்க அய்யா அப்படின்னு கேட்டீங்கன்னா தயவு செய்து எருமை மாட்டு வயசுல இதை விளக்குவது தேவையற்றது.
நான் சொல்றது பொதுப் புத்தியின் வெளிப்பாடு என்று நீங்கள் தப்பிவிடாதீர்கள்.
இன்றைய ஆஸ்திரேலியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் வந்து பழங்குடியின ஆஸ்திரேலியர்களை அழித்தொழித்து 18-19 ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.
பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் வேறு இன்றைக்கு வாழும் ஆஸ்திரேலியர்கள் வேறு.
இன்றைய அமெரிக்கர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவில் இருந்து வந்து பழங்குடியின அமெரிக்கர்களை (Native Americans) அழித்தொழித்து 15 ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.
பழங்குடியின அமெரிக்கர்கள் வேறு இன்றைக்கு வாழும் அமெரிக்கர்கள் வேறு.
சமூக ஊடகங்களில் சில வாரங்களாக விடுதலை புலிகள் தான் தமிழ் முகவரி என்று நாம் தமிழர் மற்றும் சில தோழர்கள் பேசி வருகிறார்கள்.
விடுதலை புலிகள் பற்றி பலருக்கும் பல எண்ணங்கள் இருக்கக்கூடும் அது அவரவர் பார்வையை பொறுத்தது.
யாரும் யாரையும் ஒரு சித்தாந்தத்தை பின்பற்ற சொல்லி கட்டாயப்படுத்த முடியாது அது நியாயமும் அல்ல.
பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் தங்களது திராவிட இயக்க சித்தாந்தத்தை கொள்கை ரீதியாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார்களே தவிர அதை மக்களிடம் திணிக்க ஒரு நாளும் முற்படவில்லை.
இந்நிலையில் நாம் தமிழர் மற்றும் சில தோழர்கள் ஒருங்கிணைந்து சமூக ஊடகங்களில் வழிய ஒரு சூழலை உருவாக்கி ஈழத்தின் அடையாளம் விடுதலை புலிகள் என்றும் தமிழின தலைவர் பிரபாகரன் என்றும் தி.மு.க துரோகி என்றும் பேசி திணிக்க இதற்கு சிலர் தக்க எதிர்வினைகளை ஆற்றினர்.
இந்து மதத்துக்கும் பிற மதத்துக்கும் அப்படி என்னங்க வித்தியாசம் இருக்குது? எல்லா மதத்திலும் பிரச்சினை இருக்கத் தானே செய்கிறது? என்று சில "அன்பர்கள்" கேட்கிறார்கள்.
// என் பார்வையில் அந்த அன்பர்களுக்கான சிறு விளக்கம் கீழே //
உலகின் பல மதங்களில் இருப்பது "பிரிவு" தான்
பிரிவு = Section
Example ⬇️
+2 A & B Section = வேற வேற Section ஆனா ஒரே பாடங்கள் அது போல
Christianity RC & Protestant = வேற வேற Section ஆனா ஒரே நம்பிக்கை இயேசு
Islam Shia & Sunni = வேற வேற Section ஆனா ஒரே நம்பிக்கை அல்லா
சுருங்கச்சொன்னால் பல மதத்திலும் "பிரிவு" உண்டு. மேலும் அங்கே "வழிபாடு" மாறுப்படும் ஆனால் யாருக்கும் யாரும் இயன்றவரை "ஏற்றத்தாழ்வு" இல்லாமல் இருப்பார்கள்.
சிலுவை போர், இஸ்லாமிய போர் நடந்ததை எல்லாம் நான் மறுக்கவில்லை ஆனால் இன்றைய நிலை என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும் அல்லவா?