#theiceroad#PCMreview "திக் திக் திரைக்கதையுடன் அருமையான ஆக்சன் திரில்லர்". தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ்(இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை).டெலிகிராம் - பயோ/DM."Marksman,Schindler's List,Cold Pursuit,Taken,etc." போன்ற பல படங்களில் தெறிக்கவிட்ட
லியம் நீசன் தான் இந்த படத்தின் ஹீரோ.கதை சுருக்கம்:அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாகாணத்தில் இருக்கும் கட்கா வைர சுரங்கத்தில் ஊழியர்கள் பணிசெய்துகொண்டு இருக்கும் பொழுது திடீரென ஏற்படும் சில கோளாறு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கம் மூடிகொள்கிறது.உள்ளே 25 நபர்கள்
மாட்டிக்கொள்கிறார்கள்.அவர்களை மீட்க அந்த சுரங்கத்தின் நிறுவனம் முயற்சி செய்கிறது.அதற்காக சுரங்கத்தை துளையிடும் ராட்சத கருவிகளை கொண்டு வர ஏற்பாடு செய்கிறார்கள்.அதன்படி 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து 30 டன் எடைக்கொண்ட கருவிகளை மூன்று பெரிய லாரிகளில்
கொண்டு வர கேட்கிறார்கள்.இதில் உள்ள ஆபத்து என்னவெனில் இந்த லாரிகளை ஒட்டி செல்லும் பாதை குளிர் பிரதேசமாக இருக்க கூடிய பகுதிகள் நிறைந்த ஐஸ்கட்டி சாலைகளில் பயணம் செய்யவேண்டும் என்பது தான். கரணம் தப்பினால் மரணம் என்ற சூழ்நிலையில் தான் லாரிகளை ஒட்ட வேண்டும்.இதற்காக ஆட்களை தேர்வு
செய்கிறது நிறுவனம்.அதன்படி இந்த நிறுவனத்தில் ஏற்கனவே பணிபுரியும் ஊழியர் ஒருவர்,இந்த ஊழியரிடம் பணிபுரிந்த பெண் ஒருவர்,ஹீரோ லியாம் நீசன் மற்றும் அவரின் தம்பி என குழுவை ஏற்பாடு செய்கிறார்கள்.கூடவே ஏதாவது நேர்ந்தால் இவர்களுக்கு கொடுக்க ஆயுட்காப்பீடு செய்யும் அதிகாரியும் உடன்
செல்கிறார்.சுரங்கத்தில் இருக்கக்கூடிய நபர்களை காப்பாற்ற 30 மணி நேரம் தான் இருக்கிறது.இதில் இன்னொரு பிரச்சனை ஐஸ்கட்டி சாலைகளில் மெதுவாகவும் செல்ல கூடாது,வேகமாகவும் செல்லக்கூடாது என்பது.இதில் எதை செய்தாலும் லாரியுடன் ஐஸ்கட்டி தண்ணிரில் மூழ்க வேண்டியது தான்.இவர்களுக்கு கொடுத்த பணியை
செய்தார்களா?குறிப்பிட்ட நேரத்தில் அங்கு சென்று சேர்ந்தார்களா?ஊழியர்கள் அனைவரும் உயிர் தப்பினார்களா?மூவரும் செல்லும் பாதையில் இவர்களுக்கு காத்திருந்த ஆபத்து என்ன?என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.பல படங்களில் அதகளம் செய்த ஹீரோ லியாம் நீசன் இதிலும் சிறப்பான நடிப்பை காட்ட
தவறவில்லை.ஆக்சன் காட்சிகளிலும் சரி,கடினமான சாலைகளில் லாரியை ஓட்டுவதில் சரி அற்புதமாக நடித்திருக்கிறார்.இன்னொரு லாரியை ஒட்டும் பெண்ணாக வரும் ஆம்பரும் தன் பங்கிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கியமாக குறிப்பிட வேண்டிய கதாபாத்திரம் ஹீரோவின் தம்பியாக வரும்
மார்கஸ் தாமஸ் தான்.இவர் ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்.ஆனால் லாரியை பழுது பார்ப்பதில் திறமைசாலி.அதனாலேயே ஹீரோவுடன் இவரும் பயணிப்பார்.படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சியிலும் சரி,கிளைமாக்ஸ் காட்சியிலும் சரி நம்மை கண்கலங்க வைக்கிறார்.அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பு.
திரைக்கதை எங்கேயும் சலிப்பு தட்டாமல் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது.அதிலும் லாரிகள் ஐஸ்கட்டி சாலைகளில் பயணம் செய்யும்போது திக் திக் மனநிலை தான்.நாமே அங்கு பயணிப்பது போல் ஒரு உணர்வு.திரையரங்கில் பார்த்திருந்தால் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும்.இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்
ஒளிப்பதிவு.குளிர் பிரதேச பகுதிகள் வரும் காட்சிகலெல்லாம் கண்ணுக்கு குளுமையாக இருக்கிறது.படத்தில் டுவிஸ்ட் வைக்கவும் தவறவில்லை இயக்குனர்.ஐஸ்கட்டி சாலைகளில் வரும் சண்டை காட்சிகளும் லாரிகளுக்கு ஏற்படும் இடையூறும் ரசிக்கவைக்கின்றன.மொத்தத்தில் ஒரு நல்ல திரில்லர் பார்த்த அனுபவம் தான்
இந்த "The Ice Road" படம்.எதையும் எதிர்பாராமல் ஜாலியாக குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்ககூடிய படம்.உங்களின் இரண்டு மணிநேரத்திற்கு தகுதியான படம் என்பதில் சந்தேகமில்லை.கண்டிப்பாக ஒருமுறை பார்க்க கூடிய நல்ல ஆக்சன் திரில்லர்.நன்றி.வணக்கம்! @Mr_Bai007@GiriSuriya_7@peru_vaikkala
#10Kalpanakal#PCMreview "அற்புதமான மலையாள க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - அமேசான் பிரைம்.
டெலிகிராம் - பயோ/DM.முக்கிய கதாபாத்திரங்கள் அனூப் மேனன்,மீரா ஜாஸ்மின்,கனிகா,பிரஷாந்த் நாராயணன் மற்றும் நம் "ஜோசப்" ஜோஜூ ஜார்ஜ்.கதை சுருக்கம்:
முன்னாள் காவல்துறை அதிகாரி மீரா ஜாஸ்மின் ஒரு காவல்துறை பயிற்சி அகாடமியில் சிறப்பு விருந்தினராக வந்து அங்கு இருக்கும் மாணவர்களிடம் அவர் எடுத்துக்கொண்ட ஒரு வழக்கை பற்றி விவரிக்கிறார்.இதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.ஹீரோ அனுப் மேனன் வனத்துறை அதிகாரியாக இருக்கிறார்.இவரின் மனைவி கனிகா.
இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு சிறுமியுடன் மிகவும் பாசமாக இருக்கிறார்.சிறுவயதில் இருந்தே மிகவும் அன்பாக இருக்கிறார்.அந்த சிறுமியும் ஹீரோவின் மகனும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.ஒருநாள் அங்கு நடைபெறும் திருவிழாவில் அந்த சிறுமியை ஜோஜு ஜார்ஜ்
#Halahal#PCMreview "பரபரக்கும் அருமையான க்ரைம் இன்வெஸ்டிகேஷன்திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஒன்றிரண்டு ஆபாச காட்சிகள் இருக்கிறது.OTT - Eros Now/Jio Cinema/Airtel Xstream
டெலிகிராம் - பயோ/DM.Asur வெப் தொடரில் கலக்கிய பருன் சோப்டி கறைபடிந்த காவல்துறை அதிகாரியாக மாற்றான் படத்தில்
சூர்யாவின் அப்பாவாகவும் வில்லனாகவும் நடித்த சச்சின் கடேக்கர் ஆகிய இருவரும் இணைந்து செமையாக நடித்திருக்கும் படம் தான் இந்த "Halahal".ஆரம்ப காட்சியில் ஒரு ஆணை ஒரு பெண் துரத்திக்கொண்டு ஓடுகிறார்.ஆனால் அந்த ஆண் நில்லாமல் பெண்ணை தட்டிவிட்டு ஓடுகிறார்.சாலையை கடக்க முயலும் போது லாரியில்
அடிப்பட்டு அந்த பெண் இறக்கிறார்.அந்த ஆண் அங்கு இருந்து தப்பி ஓடுகிறார்.இருவரையும் தொடரும் ஒரு கும்பல் அந்த பெண்ணை பெட்ரோல் ஊத்தி கொளுத்தி அங்கு இருந்து செல்கிறது.அடுத்த நாள் கருகிய நிலையில் இருக்கும் பிணத்தை அடையாளம் காணும் காவல்துறை மருத்துவராக பணியாற்றும் சச்சினின் மகள் என்று
#Luca#PCMreview "குழந்தைகளுடன் அமர்ந்து நாமும் குழந்தையாய் மாறி ஜாலியாக கண்டுகளிக்க ஒரு சிறந்த படம்" தமிழ் டப்பிங் இல்லை.OTT - டிஸ்னி (பிரீமியம்) டெலிகிராம் - பயோ/DM
கதை சுருக்கம்:ஹீரோ லூகா ஒரு மீன்.அவரது பெற்றோர் ஹீரோவை கடலுக்கு மேலே அனுப்புவதில்லை.மேலே சென்றால் உன்னை
கொன்றுவிடுவார்கள் என்று கூறி ஹீரோவை கடலுக்கு மேலே செல்ல அனுமதிப்பதில்லை.ஒரு நாள் கடலுக்குள் வரும் ஒருவர் ஹீரோவை மேலே கொண்டு செல்கிறார்.அப்பொழுது தான் தன் பெற்றோர் கூறியது உண்மையில்லை என்று தெரிகிறது.இருவரும் நண்பர்களாகிறார்கள்.ஹீரோவின் நண்பர் பெயர் ஆல்பர்டோ. ஆல்பர்டோவின் வீட்டில்
இருக்கும் வெஸ்பா ஸ்கூட்டியின் படத்தை பார்க்கும் ஹீரோ நாமும் அதே போல் வண்டி வாங்கி ஊர் சுற்றவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.அதே போல் மரத்தில் வண்டி செய்து விளையாடுகிறார்கள்.அது அடிக்கடி உடைந்து போகிறது.எனவே நகரத்திற்கு சென்று அங்கு உண்மையான வெஸ்பா வண்டி வாங்க வேண்டும் என முடிவு
#LupinPart2#Revengethriller#PCMreview கடந்த ஜனவரி மாதம் வெளியான முதல் சீசனில் தன்னுடைய அப்பாவை வேண்டுமென்றே திருட்டு பட்டம் சுமத்தி சிறைக்கு அனுப்பும் தொழிலதிபரை பழிவாங்க அவரின் விலையுயர்ந்த வைர நகைகளை ஹீரோ திருடுவதும் அதை மீட்க ஹீரோவின் மகனை கடத்துவது போல் முதல் சீசன் முடியும்
நேற்று இரண்டாம் சீசன் வெளியாகியுள்ளது.இதன் கதை சுருக்கம்:தன்னுடைய மகனை கடத்தியவர்களிடம் இருந்து மகனை மீட்க போராடுகிறார் ஹீரோ ஓமர் சய்.அதே வேளையில் போலீஸ் இவரை பிடிக்க ஒருபக்கம் முயற்சித்துவருகிறது.இன்னொரு பக்கம் அந்த தொழிலதிபரை பலிவாங்கியாக வேண்டும்.இப்படி முக்கோண விஷயத்தில்
மாட்டிகொள்ளும் ஹீரோ இதையெல்லாம் எப்படி சமாளித்து வந்தார் என்று வெப் தொடரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.இதில் மகனை காப்பாற்றும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும்.அதற்கு அவர் போடும் திட்டம் நன்றாக இருக்கிறது.அதே சமயம் காவல்துறையிடம் இருந்து இவர் எப்படி எல்லாம் தப்பிக்கிறார் என்று
#Darkskies2013#PCMreview
மொழி - 2013
நீச்சல் உடை காட்சி தவிர வேறு ஆபாச காட்சிகள் இல்லை
தமிழ் டப்பிங் இல்லை
OTT - நெட்பிளிக்ஸ்
டெலிகிராம் - எனது பயோ/DM
"தரமான மிஸ்ட்ரி சயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் திரில்லர்"
கதை சுருக்கம்:ஹீரோ அவர் மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் ஒரு வீட்டில்
வசித்து வருகிறார்.மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் ஒருநாள் இவர்கள் வீட்டில் இரவில் ஒரு வித்தியாசமான வட்டம் சுவரில் தெரிகிறது.காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து பார்க்கிறார்கள்.யாரும் உள்ளே வந்த மாதிரி அறிகுறி தெரிவது இல்லை.அடுத்த நாள் இரவில்
இவர்கள் வீட்டில் இருக்கும் ஃபோட்டோ அனைத்திலும் ஃப்ரேம் தவிர புகைப்படம் எதுவும் இருப்பதில்லை.மீண்டும் காவல்துறை வந்து பார்க்கிறது.ஆனால் எந்தவித தடயமும் கிடைப்பதில்லை.எனவே ஹீரோ வீட்டில் சிசிடிவி பொருத்துகிறார்.அடுத்த நாள் காலை இவர்கள் வீட்டில் மேல் பல காகங்கள் வந்து ஜன்னலில் மோதி
#Nannaprakara2019#PCMreview
மொழி - கன்னடம்
தமிழ் டப்பிங் இல்லை
ஆபாச காட்சிகள் இல்லை
OTT - அமேசான் பிரைம்
டெலிகிராம் லிங்க்- பயோ/DM
"குடும்பத்துடன் பார்க்க கூடிய திருப்பங்கள் நிறைந்த தரமான திரில்லர்".ஹீரோ ஆடுகளம் கிஷோர் காவல்துறை அதிகாரியாக உள்ளார்.ஹீரோயின் பிரியாமணி.
ஹீரோ
காட்சியில் ஒரு குடோனில் நுழைந்து அங்கு இருக்கும் ஒரு ரவுடியை பிடிக்க நினைக்கிறார்.அவனை சுட துப்பாக்கியை நீட்ட,ஹீரோவை ஒருவர் பின்னால் இருந்து ஒருவர் சுடுகிறார்.அந்த காட்சி அப்படியே கட் ஆகி ஒரு பெண் அபார்ட்மெண்டில் லேப்டாப்பில் வேலை செய்துகொண்டு இருக்கும் பொழுது திடீரென மின்சாரம்
துண்டாகிறது.அவர் வீட்டிற்குள் யாரோ நுழைவது போன்று அவருக்கு தோன்றுகிறது.அப்பொழுது ஜன்னல் வழியே பார்க்கும் பொழுது ஒரு கார் கிளம்பி செல்வதை பார்க்கிறார்.அங்கு கட் ஆகும் காட்சி ஒரு கார் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதும் காட்சி வருகிறது.விசாரணை அதிகாரியாக வரும் ஹீரோ அங்கு இருக்கும்