#Darkskies2013#PCMreview
மொழி - 2013
நீச்சல் உடை காட்சி தவிர வேறு ஆபாச காட்சிகள் இல்லை
தமிழ் டப்பிங் இல்லை
OTT - நெட்பிளிக்ஸ்
டெலிகிராம் - எனது பயோ/DM
"தரமான மிஸ்ட்ரி சயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் திரில்லர்"
கதை சுருக்கம்:ஹீரோ அவர் மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் ஒரு வீட்டில்
வசித்து வருகிறார்.மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் ஒருநாள் இவர்கள் வீட்டில் இரவில் ஒரு வித்தியாசமான வட்டம் சுவரில் தெரிகிறது.காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து பார்க்கிறார்கள்.யாரும் உள்ளே வந்த மாதிரி அறிகுறி தெரிவது இல்லை.அடுத்த நாள் இரவில்
இவர்கள் வீட்டில் இருக்கும் ஃபோட்டோ அனைத்திலும் ஃப்ரேம் தவிர புகைப்படம் எதுவும் இருப்பதில்லை.மீண்டும் காவல்துறை வந்து பார்க்கிறது.ஆனால் எந்தவித தடயமும் கிடைப்பதில்லை.எனவே ஹீரோ வீட்டில் சிசிடிவி பொருத்துகிறார்.அடுத்த நாள் காலை இவர்கள் வீட்டில் மேல் பல காகங்கள் வந்து ஜன்னலில் மோதி
உடனே உயிரிழக்கின்றன.யாருக்கும் சரியான விளக்கம் தெரிவதில்லை.அந்த நாள் இரவும் ஒரு வித மர்மான சம்பவம் நடக்கிறது.காலை சிசிடிவியில் பார்க்கும் பொழுது என்ன நடக்கிறது என்று பார்த்த பொழுது ஹீரோவுக்கு பயம் தொற்றிக்கொள்கிறது.அவர் கண்ட காட்சி என்ன?பறவைகள் ஏன் அப்படி இறந்தன?விசித்திரமான
சம்பவங்கள் என்னவெல்லாம் நடந்தன?அதற்கான காரணம் என்ன?இறுதியில் இவர்களுக்கு நேர்ந்தது என்ன என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படத்தில் அதிகப்படியான கதாபாத்திரங்கள் வைக்காமல் சிலரை வைத்தே கதை நகர்கிறது.ஹீரோ மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் சிறப்பாக
நடித்திருக்கிறார்கள்.முக்கியமாக ஹீரோவின் மகன்கள் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.படத்தை பார்க்கும் பொழுது நாமே அங்கு இருப்பது போல் நம்மை பயம் தொற்றிக்கொள்ளும்.ஹீரோவின் குடும்பத்திற்கு ஏற்படும் அனுபவமும் அதற்கு அவர்கள் காட்டும் உணர்வும் மிகவும் அருமை.ஒளிப்பதிவு சில
காட்சிகளில் தரமாக உள்ளது.பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றவாறு கோர்வையாக உள்ளது.ஒரு சில காட்சிகளை தவிர்த்தால் குடும்பத்துடன் பார்க்கலாம்.நல்ல ஹாரர் திரில்லர் பார்க்க இந்த படம் கண்டிப்பாக ஏற்றது தான்.கண்டிப்பாக பாருங்கள்.நன்றி.வணக்கம்!அடுத்த படத்தின் விமர்சனத்தில் சந்திப்போம்!
#LupinPart2#Revengethriller#PCMreview கடந்த ஜனவரி மாதம் வெளியான முதல் சீசனில் தன்னுடைய அப்பாவை வேண்டுமென்றே திருட்டு பட்டம் சுமத்தி சிறைக்கு அனுப்பும் தொழிலதிபரை பழிவாங்க அவரின் விலையுயர்ந்த வைர நகைகளை ஹீரோ திருடுவதும் அதை மீட்க ஹீரோவின் மகனை கடத்துவது போல் முதல் சீசன் முடியும்
நேற்று இரண்டாம் சீசன் வெளியாகியுள்ளது.இதன் கதை சுருக்கம்:தன்னுடைய மகனை கடத்தியவர்களிடம் இருந்து மகனை மீட்க போராடுகிறார் ஹீரோ ஓமர் சய்.அதே வேளையில் போலீஸ் இவரை பிடிக்க ஒருபக்கம் முயற்சித்துவருகிறது.இன்னொரு பக்கம் அந்த தொழிலதிபரை பலிவாங்கியாக வேண்டும்.இப்படி முக்கோண விஷயத்தில்
மாட்டிகொள்ளும் ஹீரோ இதையெல்லாம் எப்படி சமாளித்து வந்தார் என்று வெப் தொடரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.இதில் மகனை காப்பாற்றும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும்.அதற்கு அவர் போடும் திட்டம் நன்றாக இருக்கிறது.அதே சமயம் காவல்துறையிடம் இருந்து இவர் எப்படி எல்லாம் தப்பிக்கிறார் என்று
#Nannaprakara2019#PCMreview
மொழி - கன்னடம்
தமிழ் டப்பிங் இல்லை
ஆபாச காட்சிகள் இல்லை
OTT - அமேசான் பிரைம்
டெலிகிராம் லிங்க்- பயோ/DM
"குடும்பத்துடன் பார்க்க கூடிய திருப்பங்கள் நிறைந்த தரமான திரில்லர்".ஹீரோ ஆடுகளம் கிஷோர் காவல்துறை அதிகாரியாக உள்ளார்.ஹீரோயின் பிரியாமணி.
ஹீரோ
காட்சியில் ஒரு குடோனில் நுழைந்து அங்கு இருக்கும் ஒரு ரவுடியை பிடிக்க நினைக்கிறார்.அவனை சுட துப்பாக்கியை நீட்ட,ஹீரோவை ஒருவர் பின்னால் இருந்து ஒருவர் சுடுகிறார்.அந்த காட்சி அப்படியே கட் ஆகி ஒரு பெண் அபார்ட்மெண்டில் லேப்டாப்பில் வேலை செய்துகொண்டு இருக்கும் பொழுது திடீரென மின்சாரம்
துண்டாகிறது.அவர் வீட்டிற்குள் யாரோ நுழைவது போன்று அவருக்கு தோன்றுகிறது.அப்பொழுது ஜன்னல் வழியே பார்க்கும் பொழுது ஒரு கார் கிளம்பி செல்வதை பார்க்கிறார்.அங்கு கட் ஆகும் காட்சி ஒரு கார் விபத்துக்குள்ளாகி மரத்தில் மோதும் காட்சி வருகிறது.விசாரணை அதிகாரியாக வரும் ஹீரோ அங்கு இருக்கும்
#Lappachhapi2016#PCMreview#marathi
"யூகிக்க முடியாத டிவிஸ்டுகள் கொண்ட ஹாரர் திரில்லர்".கதை சுருக்கம்:ஹீரோயின் மற்றும் அவர் கணவர் சில பிரச்சனை காரணமாக அவர்கள் இருந்த இடத்தில் இருந்து கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கரும்பு காட்டிற்குள் இருக்கும் ஒரு வீட்டில் வந்து
தங்குகிறார்கள்.அங்கு ஹீரோயின் கணவருக்கு தெரிந்த ஆண் மற்றும் பெண் இருக்கிறார்கள்.ஹீரோயின் கணவர் சில வேலை காரணமாக வெளியே செல்லவேண்டும் என கூறிவிட்டு செல்கிறார்.வீட்டில் ஹீரோயின் மட்டும் இருக்கிறார்.அடுத்த நாள் ஹீரோயின் வீட்டை சுற்றி பார்க்கிறார். ஹீரோயினுக்கு உதவியாக அங்கு
இருக்கும் பெண் மற்றும் அவரின் மகள் இருக்கிறார்.அங்கு ஒரு ரேடியோவை கண்டெடுக்கிறார். அதில் இனிமையான பாட்டு வருகிறது.அப்பொழுது மூன்று சிறுவர்கள் ஹீரோயினை தொட்டுவிட்டு ஓடுகிறார்கள்.அவர்களை கண்டுபிடிக்க முயல யாரும் சிக்குவதில்லை.இப்படியாக அடுத்து அடுத்து சில மர்மமான விஷயங்கள்
#asimplemurder ஜாலியாக சிரித்துகொண்டே பார்க்கக்கூடிய ஒரு அருமையான "காமெடி மர்டர் திரில்லர்" தான் இந்த வெப் சீரியஸ்.ஹீரோ முகமது அயூப்,"Mirzapur","Inside Edge","Hostages","Kathmandu Connection" போன்ற வெப் தொடர்களில் கலக்கிய அமித் சியால்,நம்ம ஊரு ஹீரோயின் பிரியா ஆனந்த் ஆகியோர்
நடித்திருக்கிறார்கள்.கதை சுருக்கம்:ஹீரோ வேலை எதுவும் இல்லாமல் ஒர் கம்பெனி தொடங்க வேண்டும் என்று பலரிடம் முதலீடு செய்ய கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஹீரோயின் பிரியா ஆனந்த் அவர் மனைவி.இவருக்கு கோடிகளில் புரள வேண்டும் என ஆசை.இதனால் இவர் பணிபுரியும் அலுவலகத்தின் முதலாளியுடம் கள்ள
தொடர்பு வைத்திருக்கிறார்.ஒரு நாள் ஹீரோவுக்கு முதலீடு செய்கிறேன் என்று ஒரு அழைக்கிறார்.இவரும் அங்கு செல்ல ஒரு சிறிய நிகழ்வால் முகவரி மாறி சென்றுவிடுகிறார்.அங்கு சென்றதும் ஒரு சாமியார் 5 லட்சம் ஒரு துப்பாக்கி ஒரு ஃபோட்டோ கொடுத்து அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணின் கதையை
#TheFamilyManSeason2#actionthriller
2019ஆம் ஆண்டு வெளிவந்த "The Family Man" சீசன் ஒன்று தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்து மும்பையில் மக்களை கொல்ல திட்டம் தீட்டுவது போலவும் அதை தடுக்க மனோஜ் பாஜ்பாய் தலைமையிலான குழு களம் இறங்குவது போலவும் கதை அமைத்திருப்பார்கள்.ஒன்றாம் சீசன்
பரபரக்கும் பட்டாசாய் வெடிக்கும்.இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போன்றே காமித்திருப்பார்கள்.அப்பொழுதே பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன.இந்நிலையில் இன்று இரண்டாவது சீசன் வெளியாகி இருக்கிறது.டிரெய்லர் வெளிவந்த பொழுது தமிழர்களை தீவிரவாதிகள் போல் சித்தரிதிருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளானது
வெளியிட கூடாது என்று தடை கோரினார்கள் பல்வேறு அமைப்பினர்.ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் இன்று வெளியாகி இருக்கிறது.கதை சுருக்கம்:இலங்கையில் ராணுவம் தாக்குதல் நடத்த அதில் இருந்து தமிழீழ தலைவர் மைம் கோபி,அழகம் பெருமாள் மற்றும் மைம் கோபியின் தம்பி தப்பி தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
"The Con Artists(2014)" ,- "Heist Action Thriller".கொள்ளை சம்மந்தப்பட்ட படங்களை யூகிக்க முடியாத டிவிஸ்டுகளுடன் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்கும்.ஹீரோவும் அவன் மாமாவும் அடிப்படையாக திரமைவாய்ந்த திருடர்கள்.ஆரம்ப காட்சியில் ஒரு பெரிய கட்டிடத்தில்
நுழைந்து ஒரு விலையுயர்ந்த சிலையை திருடிக்கொண்டு வருகிறார் ஹீரோ.ஆனால் பாதுகாவலர்கள் துரத்தும் பொழுது அந்த சிலை உடைந்துவிடுவதால் அதே போன்று 3D பிரின்டிங் செய்யப்பட்ட சிலையை செய்து விற்க முயல்கின்றனர்.ஆனால் வாங்குபவர் இது போலி என கண்டுபிடிக்க "இது போல் நீ பல போலி சிலையை ஏலத்தில்
விட்டிருக்கிறாய்.எனவே இதை விற்றுகொடு என மிரட்டுகின்றனர்.அடுத்த நாள் ஒரு நகைக்கடையில் இருக்கும் விலையுயர்ந்த டைமண்ட் கற்களை திருட முயல்கிறார்கள்.அதனால் கண்காட்சியில் அறிமுகமான ஹீரோயினை அழைத்துகொண்டு நகைகடைக்கு செல்கிறார்.கேமரா எவ்வளவு இருக்கிறது,வழிகள் என்ன என்ன இருக்கிறது என்பதை