#Coldeyes#PCMreview "வங்கி கொள்ளை படங்களின் ரசிகர்களுக்காக ஒரு தரமான கொரியன் படம்".ஆபாச காட்சிகள் இல்லை.தமிழ் டப்பிங் இல்லை.OTT - எதிலும் இல்லை.டெலிகிராம் - பயோ/DM. கதை சுருக்கம் : ஆரம்ப காட்சியில் ஒரு பெண் ஒரு ரயிலில் ஒரு ஆணை பின்தொடர்கிறார்.அவர் என்னவெல்லாம் செய்கிறார்
என்பதை கவனிக்கிறார்.அதே சமயம் இன்னொரு காட்சியில் ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சியில் ஒருவர் நின்று காவல்துறையின் வாக்கி டாக்கியை ஒட்டு கேட்கிறார்.பின் அந்த கட்டிடத்தின் பேஸ்மெண்டில் இருக்கும் காரை வெடிக்க வைக்கிறார்.உடனே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அங்கு செல்கிறது.இவர்
ஒரு வண்டியில் காத்திருக்கும் இருவருக்கு சைகை கொடுக்கிறார்.உடனே அவர்கள் ஒரு வங்கியில் நுழைந்து கொள்ளையடிக்கின்றனர்.காவல்துறை அங்கு வருவதற்குள் அவர்கள் தப்பிவிடுகிறார்கள்.வில்லனும் சென்றுவிடுகிறான்.இப்பொழுது ஆரம்ப காட்சியில் ஆணை பின்தொடரும் பெண் ஒரு காபி ஷாப்பில் அந்த ஆணை நோட்டம்
விடுகிறார்.உடனே அந்த ஆண் ஏன் என்னை பின்தொடர்கிறாய் என்று கேட்க,முதலில் மறுக்கும் அந்த பேனரு கட்டத்தில் ஒப்புக்கொள்கிறார்.அப்புறம் தான் தெரிகிறது டிடெக்டிவ் வேலையில் சேர அந்த பெண்ணிற்கு வைத்த பரிட்சை என்று.அந்த ஆண் டிடெக்டிவ் குழுவின் தலைவன் என்று.இப்பொழுது அந்த வங்கி கொள்ளையை
பற்றி தெரிந்த உடன் அரசாங்கம் அந்த ஆண் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைக்கிறது.இவர்கள் வில்லனை பிடித்தார்களா?வில்லன் தப்பிக்க என்னவெல்லாம் செய்தான்?இவர்கள் கையாண்ட முறை என்ன?என்பதை ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை பரபரக்கும் திரைக்கதை மூலம் காணுங்கள்.படத்தில் வில்லன் கதாபாத்திரம்
அதிகம் பேசாது.ஆனால் யாராலும் பிடிக்க முடியாத வண்ணம் செயல்படுவான்.டிடெக்டிவ் குழுவினர் புத்திசாலித்தனமாக யோசித்தால் வில்லன் அதைவிட புத்திசாலியாய் இருந்தால்?இப்படி பூனை எலி போல் ஆட்டம் தொடர்கிறது.ஒரு ஒரு முறையும் இவர்கள் வில்லனை நெருங்க,வில்லன் இவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு
செல்கிறான்.திரைக்கதை சில இடங்களிலெல்லாம் பற்றி எரிகிறது.சில வித டுவிஸ்ட் வைத்து நம்மை கதைக்குள் ஒன்ற வைக்கிறார் இயக்குனர்.இந்த படம் "Eye In the Sky" என்ற படத்தினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.அந்த படமும் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத படம்.திரைக்கதையின் பலம்,வில்லனின்
புத்திசாலித்தனம்,பிண்ணனி இசை என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்தி செல்கின்றன.ஒரு நல்ல ஆக்சன் திரில்லர் படம் பார்க்க விரும்பினால் தாராளமாக இந்த படத்தை பார்க்கலாம். தவறவிட கூடாத படம் என்றும் கூறலாம்.குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.
#TheStrangers2008#PCMreview "உண்மையாக நடந்த சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட ஹாரர் ஸ்லாஷர் படம்" தமிழ் டப்பிங் இல்லை.குடும்பத்துடன் பார்க்க இயலாது.கதை சுருக்கம்:நீங்கள் விடுமுறையை களிக்க உங்கள் அத்தை மாமா இருக்கும் ஒரு ரிசார்டிர்க்கு குடும்பத்துடன் செல்கிறீர்கள்.அங்கு சென்ற பிறகு
உங்கள் அத்தை மாமா கொடூரமாக கொல்லபட்டுள்ளதை காண்கிறீர்கள்.அடுத்த சில நிமிடங்களில் உங்கள் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக மூன்று முகமூடி அணிந்த நபர்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.அவர்களிடமிருந்து நீங்கள் தப்பிச்செல்ல நினைக்கிறீர்கள்.ஆனால் தப்பிச்செல்ல வழி இல்லாதவாறு அந்த
மர்ம நபர்கள் பார்த்துகொள்கிறார்கள்.அவர்களிடமிருந்து நீங்கள் தப்பிச்செல்ல நினைக்க,அவர்கள் உங்களை துரத்த,இறுதியில் என்ன ஆனது என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பதற்றம் உங்களை தொற்றிக்கொள்ளும்.நீங்களே அங்கு மாட்டிக்கொண்டது போல் உணர்வீர்கள்.
#10Kalpanakal#PCMreview "அற்புதமான மலையாள க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - அமேசான் பிரைம்.
டெலிகிராம் - பயோ/DM.முக்கிய கதாபாத்திரங்கள் அனூப் மேனன்,மீரா ஜாஸ்மின்,கனிகா,பிரஷாந்த் நாராயணன் மற்றும் நம் "ஜோசப்" ஜோஜூ ஜார்ஜ்.கதை சுருக்கம்:
முன்னாள் காவல்துறை அதிகாரி மீரா ஜாஸ்மின் ஒரு காவல்துறை பயிற்சி அகாடமியில் சிறப்பு விருந்தினராக வந்து அங்கு இருக்கும் மாணவர்களிடம் அவர் எடுத்துக்கொண்ட ஒரு வழக்கை பற்றி விவரிக்கிறார்.இதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.ஹீரோ அனுப் மேனன் வனத்துறை அதிகாரியாக இருக்கிறார்.இவரின் மனைவி கனிகா.
இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு சிறுமியுடன் மிகவும் பாசமாக இருக்கிறார்.சிறுவயதில் இருந்தே மிகவும் அன்பாக இருக்கிறார்.அந்த சிறுமியும் ஹீரோவின் மகனும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.ஒருநாள் அங்கு நடைபெறும் திருவிழாவில் அந்த சிறுமியை ஜோஜு ஜார்ஜ்
#theiceroad#PCMreview "திக் திக் திரைக்கதையுடன் அருமையான ஆக்சன் திரில்லர்". தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ்(இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை).டெலிகிராம் - பயோ/DM."Marksman,Schindler's List,Cold Pursuit,Taken,etc." போன்ற பல படங்களில் தெறிக்கவிட்ட
லியம் நீசன் தான் இந்த படத்தின் ஹீரோ.கதை சுருக்கம்:அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாகாணத்தில் இருக்கும் கட்கா வைர சுரங்கத்தில் ஊழியர்கள் பணிசெய்துகொண்டு இருக்கும் பொழுது திடீரென ஏற்படும் சில கோளாறு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கம் மூடிகொள்கிறது.உள்ளே 25 நபர்கள்
மாட்டிக்கொள்கிறார்கள்.அவர்களை மீட்க அந்த சுரங்கத்தின் நிறுவனம் முயற்சி செய்கிறது.அதற்காக சுரங்கத்தை துளையிடும் ராட்சத கருவிகளை கொண்டு வர ஏற்பாடு செய்கிறார்கள்.அதன்படி 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து 30 டன் எடைக்கொண்ட கருவிகளை மூன்று பெரிய லாரிகளில்
#Halahal#PCMreview "பரபரக்கும் அருமையான க்ரைம் இன்வெஸ்டிகேஷன்திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஒன்றிரண்டு ஆபாச காட்சிகள் இருக்கிறது.OTT - Eros Now/Jio Cinema/Airtel Xstream
டெலிகிராம் - பயோ/DM.Asur வெப் தொடரில் கலக்கிய பருன் சோப்டி கறைபடிந்த காவல்துறை அதிகாரியாக மாற்றான் படத்தில்
சூர்யாவின் அப்பாவாகவும் வில்லனாகவும் நடித்த சச்சின் கடேக்கர் ஆகிய இருவரும் இணைந்து செமையாக நடித்திருக்கும் படம் தான் இந்த "Halahal".ஆரம்ப காட்சியில் ஒரு ஆணை ஒரு பெண் துரத்திக்கொண்டு ஓடுகிறார்.ஆனால் அந்த ஆண் நில்லாமல் பெண்ணை தட்டிவிட்டு ஓடுகிறார்.சாலையை கடக்க முயலும் போது லாரியில்
அடிப்பட்டு அந்த பெண் இறக்கிறார்.அந்த ஆண் அங்கு இருந்து தப்பி ஓடுகிறார்.இருவரையும் தொடரும் ஒரு கும்பல் அந்த பெண்ணை பெட்ரோல் ஊத்தி கொளுத்தி அங்கு இருந்து செல்கிறது.அடுத்த நாள் கருகிய நிலையில் இருக்கும் பிணத்தை அடையாளம் காணும் காவல்துறை மருத்துவராக பணியாற்றும் சச்சினின் மகள் என்று
#TheHouseattheendoftime#PCMreview "டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து அசரடிக்கும் அருமையான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - அமேசான் பிரைம் (இந்தியாவிற்கு வெளியே மட்டும்) டெலிகிராம் - பயோ/DM.ஆரம்ப காட்சியில் ஹீரோயின் அவரது கணவர் மற்றும் குழந்தையை
கொன்றுவிட்டதாக காவல்துறை கைது செய்கிறது.30 வருடம் சிறைவாசம் அனுபவித்து மீண்டும் அவருடைய வீட்டிற்க்கு வருகிறார்.சிறையில் இருந்து வெளியே வரும் பொழுது அவர் வயதான பாட்டியாக வருகிறார்.சிறையில் இருந்து வந்த அந்த நாள் இரவு அந்த வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது.உடனே காவல்துறையை
அழைத்து புகார் கூறுகிறார்.வீட்டிற்க்கு வந்து விசாரித்துவிட்டு வீட்டிற்குள் யாரும் வரவில்லை என்று கூறிவிட்டு இரண்டு நபர்களை காவலுக்கு வைக்கிறது. இருந்தாலும் திடீரென சப்தம் கேட்பது, சில விஷயங்கள் நடப்பது என இருக்கிறது.இதன் பின் இருக்கும் மர்மம் என்ன என்ன குழம்புகிறார்.அவரின்
#TheNightManager#PCMreview "மெதுவாக பற்றி எரியும் பக்காவான ஸ்பை திரில்லர்" தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் உள்ளது.OTT - அமேசான் பிரைம் (தமிழ் சப் டைட்டில் உள்ளது) டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ "லோகி" புகழ் டாம் ஹிட்டில்ஸ்டன் ஹீரோயின் "கார்டியன் ஆஃப் கேலக்சி" புகழ் எலிசபெத்
மாற்றும் வில்லனாக ஹுக் லாரி.கதை சுருக்கம்: ஹீரோ டாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உளவாளியாக இருக்கிறார்.ஒரு ஹோட்டல் ஒன்றில் இரவு நேர மேலாளராக பணியாற்றுகிறார்.அந்த ஹோட்டலில் இருக்கும் வில்லனின் காதலி ஹீரோவுடன் பழகுகிறார்.வில்லனின் நடவடிக்கை பற்றி ஹீரோவுக்கு உதவி செய்கிறார்.அடுத்த நாள்
வில்லனின் காதலி கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறார்.வில்லன் பல கோடி மதிப்புள்ள ஆயுதங்களை சட்டவிரோதமாக வாங்கி விற்கிறார் என பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு தகவல் வருகிறது.உடனே ஹீரோ பணியாற்றும் எகிப்து ஹோட்டலில் இருந்து வில்லன் இருக்கும் ஸ்பெயின் நாட்டிற்க்கு சென்று வில்லனின்