மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்! இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?"- தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து
வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார். தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
உடனே, "ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன்
உங்களுக்கு ஒரு சோதனை!" என்றார் கிருஷ்ணர்.
இருவரும், "என்ன அது?" என்பது போல், பகவானை ஆர்வத்துடன் கவனித்தனர்.
முதலில் தருமரிடம், "தருமா! இந்த பரந்த உலகில் தீயவன் ஒருவனையும், நல்லவன் ஒருவனையும் அழைத்து வா!" என்றார் பகவான்.
"ஆகட்டும் கிருஷ்ணா!" என்ற தருமர் அங்கிருந்து
புறப்பட்டார்.
அடுத்து, துரியோதனனிடமும் அதே விஷயத்தைக் கூறி அனுப்பி வைத்தார் பரந்தாமன். சில நாட்கள் கழித்து இருவர் மட்டும் தனித்துத் திரும்பி வந்தனர்.
அவர்களிடம் கிருஷ்ணர் கேட்டார்: "என்னாயிற்று… நான் குறிப்பிட்ட நபர்களை அழைத்து வரவில்லையா?"
உடனே துரியோதனன், "கிருஷ்ணா, பல
நாட்கள் தேடிப் பார்த்தும் ஒரு நல்லவர்கூட அகப்படவில்லை. உலகில் எல்லோரும் தீயவரே! எனவே, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் தீயவராகக் கருதி அழைத்து வர விரும்பவில்லை!" என்றான்.
ஆச்சரியத்துடன் புருவம் நெறித்த கிருஷ்ணர், தருமரிடம் "உனக்குக் கூடவா நல்லவர் அகப்படவில்லை?" என்று கேட்டார்.
"நான்
தேடிய வகையில் உலகில் தீயவர் என்று எவருமே இல்லை. எனவே, தீயவர் ஒருவரை அழைத்து வர இயலவில்லை. தவிர, எல்லோருமே நல்லவர்கள் எனும்போது, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் எப்படி அழைத்து வருவது? எனவே அதுவும் இயலவில்லை!" என்றான்.
இருவரும் கூறியதை கவனமாகக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணர், "இந்த உலகம்
கண்ணாடி போன்றது. கண்ணாடி, தன் முன் எந்த உருவம் இருக்கிறதோ, அதை அப்படியே பிரதிபலிக்கும். இந்த உலகமும் அப்படியே… நல்ல மனம் கொண்டவனுக்கு நன்மையானதாகவும், தீய மனம் படைத்தவனுக்கு தீமைகள் நிறைந்ததாகவும் தோன்றும். நமது மனதை எந்த அளவுக்கு, தூய்மையாக- செம்மைப்படுத்தி வைத்திருக்கிறோமோ…
அந்த அளவுக்கு, இந்த உலகமும் தூய்மையானதாக இருக்கும். எனவே, மனதை செம்மைப்படுத்துங்கள்!" என்று கூறி முடித்தார் கீதையின் நாயகன்.
ஒரு சூரிய கிரஹணம். அன்று துவாரகையிலிருந்து கிருஷ்ணன், பலராமன், சுபத்ரா மற்றும் அனேகர் குருக்ஷேத்ரத்தில் ஒரு குளத்தில் ஸ்நானம் செய்யச் சென்றிருந்தனர். கிருஷ்ணனைப் பார்த்து எத்தனையோ வருஷங்களாச்சே, அதனால் கிருஷ்ணன் குருக்ஷேத்ரம் வரப்போகிறான் என்று
அறிந்து பிருந்தாவனத்திலிருந்து நந்தகோபன், மற்றும் பல கோப, கோபியர்கள் எல்லாம் கூட குருக்ஷேத்ரம் வந்துவிட்டனர். கிருஷ்ணனைப் பார்க்க அனைவருக்கும் அவ்வளவு ஆசை.
யசோதை, ரோகிணி இருவரில் ரோகிணி வெடுக் வெடுக் என்று நிறையப் பேசுவாள். குருக்ஷேத்ரத்தில் யாத்ரிகர்கள் யாரோ சிலர் போட்டுவைத்த
ஒரு பெரிய கூடாரம் அவர்களுக்கு வசதியாக அமைந்தது. அதில் கிருஷ்ணனின் எண்ணற்ற மனைவியரில் சிலர், மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் பலர் தங்கியிருந்தனர். கிருஷ்ணனைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யமாக வளர்ந்தது.
முயற்சியும் நம்பிக்கையும் தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஆகப் பெரிய சக்திகள்....
அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார் . ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை .
முனிவருக்கே உண்டான இயல்பில் , அவருக்கு கோபம் வந்தது.
கோபத்தில் அந்த ஊருக்கு இன்னும் 50 வருடங்களுக்கு மழையே பெய்யாது . வானம் பொய்த்துவிடும் என சாபமிட்டார். இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட ஊர் மக்கள் அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர்.
ஆனால் முனிவரோ சற்றும் மனம் இரங்காமல்,
சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார். வேறு வழியின்றி அவரின் கோபத்தை சாந்தப்படுத்தும் விதமாக ஊர் மக்கள் அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து விட்டனர்.
வைகுண்டத்தில் இருந்து இதைக் கவனித்த பரந்தாமனும் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான். பரந்தாமனின்
தெய்வத் திருவிழா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் -படிக்கப் படிக்கவே பரவசமாக இருக்கிறதே-இந்த சுகானுபவத்தை நேரில் சென்று அனுபவித்தால் எப்படி இருக்கும் -நிச்சயம் கண்ணனோடு கலந்து விடலாம்
ஜகந்நாதருக்கு வரும் ஜுரம்
இறைவனை ஏதோ கோவிலில் இருக்கும் ஒரு விக்கிரஹம் என்று எண்ணாமல்
நம்முள் ஒருவராக எண்ணுவதே நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பு.
அவரை ஜீவனுள்ள, சைதன்யமுள்ள ஒரு நபராகக் கண்டு மகிழுகிறோம்.
சொந்த கிராமத்திலிருக்கும் குலதெய்வங்களிலிருந்து நகரங்களில் மஹாக்ஷேத்திரங்களில் கோலோச்சும் தெய்வங்கள் வரை இதுதான் நம் வழக்கம்.
சிதம்பரத்தில் இருக்கக்கூடிய
தீட்சிதர்கள் நடராஜரை தங்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுகிறார்கள் மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் மீனாட்சியை தங்கள் வீட்டுப் பெண் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.
அதேபோல புரி நகர மக்கள் ஜகந்நாதரையும், பலதேவரையும், சுபத்ரையையும் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகவே எண்ணுகிறார்கள்.
எனவேதான் அவனுக்கு, சகல கலைகளையும் கற்றுத் தந்தான் கண்ணன். ஆயர்பாடியே
வியக்கும் விதம்… தனக்கு நிகராக மாலிகனை உயர்த்தினான் அந்த மாயவன். ஆனால்?
கண்ணனிடமே கலை கற்றதால் உண்டான கர்வமும், அளவிலா ஆற்றல் பெற்று விட்டோம் என்ற அகந்தையும் அவனை ஆட்டிப் படைத்தன. மமதையால் மதியிழந்து அலைந்தான் மாலிகன்! அனைத்தும் அறிந்த கண்ணன், இதை அறியாமல் இருப்பானா?
பகவான் கண்ணன் பெண் பித்தன்,பெண்கள் குளிப்பதை ஒளிந்து இருந்து பார்த்தவன் என்று ஏகப்பட்ட கதைகள் கடவுள் மறுப்பாளார்கள் மட்டுமல்ல கடவுள் உண்டு என்பவர்களிடமும் உண்டு...அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை.
கிருஷ்ணர் பெண்களின் ஆடைகளை திருடிய பொழுது அவரின் வயது பத்து
என்பது தெரியுமா?..
கோபியர்கள் குளிப்பதை மறைந்து இருந்து பார்த்தார் என அதன் உட்பொருள் அறியாமல் உளறுபவர்களுக்காக இந்த பதிவு...
சராசரி மனிதர்களை ஆட்டிப்படைக்கும், காமம், குரோதம், பேராசை, மாயை, அகந்தை என அத்தனை குணங்களும் கண்ணனுடன் ராசலீலையில் பங்கேற்றவர்களுக்கு தொலைந்தது.
பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் இதில் பாலினத்துக்கே வேலை இல்லை. ஆனால் இன்று வரை ராசலீலைக்காக கிருஷ்ணர் தவறாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இத்தனைக்கும் ராசலீலை புரிந்தபோது கிருஷ்ணரின் வயது வெறும் பத்து.....
இந்த வயதில் காமம் என்பது கண்ணனை குறை சொல்பவர்களின் தாய் தந்தையரின்
“அடியே விசாலாட்சி, இந்த ஆச்சர்யத்தைக் கேள்விப்பட்டியோ?”
“எதைச் சொல்றே நீ சத்யா, நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைப்பத்தித் தானே?”
“வேறே என்ன விஷயம் இருக்கு பேச?”
“ஆமாம். கேள்விப்பட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு
உள்ளே போய் யசோதையைக் கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்”
“என்ன?”
“யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலம்பற வந்தாளாம். உங்க வீட்டு குழந்தை ரொம்ப அழகாக இருப்பானாமே, நான் பார்க்கலாமா என்று கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தையை தூக்கி அவள் கையிலே தந்திருக்கு. அவள் சப்பளிக்க உட்கார்ந்து மடியிலே
போட்டுக் கொஞ்சியிருக்கா. நான் இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா. இந்த பேக்கு சரின்னு தலையாட்டியிருக்கு”.
“அப்புறம்?”
“என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ?”
“சரி, சரி நீயே சொல்லுடி”
“என்ன ஆச்சோ தெரியல்லை. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு குடிக்க