பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நிகழப் போகும் போருக்காக குருஷேத்திரத்தில் யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றி நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது,
பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது. தாய் சிட்டுக்குருவி சுற்றுமுற்றும் பார்த்தபோது அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி பறந்து போய் ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்து கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால்
என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டது. நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர். எனக்குத் தெரிந்ததெல்லாம் நீ தான் எங்களைக் காப்பவர். எங்களைக்
காப்பதையும் அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன் என்றது குருவி. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது-இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில். குருவிக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை. போருக்கு முன் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தன் வில்லையும்
அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை. ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்தான். அவர் ஒரு
யானை மீது அம்பைத் தொடுத்து அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்.
யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து அதனைக் கொல்ல முடியாமல் அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில்
வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது. நான் வேண்டுமானால் அம்பு எய்து யானையை வீழ்த்தட்டுமா எனக் கேட்டான் அர்ஜுனன். ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும் அர்ஜுனனிடம் கொடுத்து பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர். பிறகு ஏன் யானை மீது
அம்பை எய்தீர்கள் எனக்கேட்ட அர்ஜுனனிடம் அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது என்று மட்டும் சொன்னார் பகவான். போர் நடந்து, பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர். அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்.
தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான். ஹே அர்ஜுனா இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா என்று கேட்கிறார். எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ என்று நினைத்த
அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான். அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன.
தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன்
குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது! பகவானே! என்னை மன்னித்து விடு! உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது என்று கைகூப்பித் தொழுதான்
அர்ஜுனன். அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்! அவனிடம் #சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள். அவனை சரணடைவோம்.. மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு.

சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

4 Jul
நாளை தோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரதம். அபரா என்றால் அபாரமான, ஏராளமான என்று பொருள். ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரானது அபரா ஏகாதசி. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசியில் விரதம் Image
இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணம் கூறுகிறது. அபரா ஏகாதசி தினத்திற்கு முன்தினம் இரவு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். ஏகாரசி அன்று
அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் இனிப்பு பிரசாதம் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு
Read 4 tweets
4 Jul
#கேரளா #மணப்புள்ளி_பகவதி_அம்மன் #திருக்கோயில் பாலக்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். அரக்கர்களை அழித்த பிறகு படிஞ்சாரை யாக்கரை எனும் வயல்வெளி சூழ்ந்த இடத்தில் கோவில் கொண்டாள் பகவதி அம்மன். அறுவடைக் காலத்தில் Image
நெல் அடிக்கும் சத்தம் அதிகம் கேட்கவே பிறகு இங்கிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் கோயில் கொண்டாள். அங்கிருந்த பக்தர்கள் அம்மனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். அப்போது தேவப்பிரசன்னம் பார்த்த கோயிலின் நம்பூதிரிகள் பகவதி அம்மன் கோயில் கொள்ள அந்த ஆலமரத்தடியை சரியான
இடம் என தீர்மானித்து, அங்கேயே பகவதி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மணப்பள்ளி பகவதி அம்மன் கருப்பு நிற தோற்றத்தோடு வட திசையை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், கேடயம் உள்ளது. மூன்று கண்களும், நான்கு கோரைப் பற்களும் கொண்டு அழகான Image
Read 8 tweets
28 Jun
#சரபேஸ்வரர் உலகை காக்க சிவபெருமான் எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்” அவதாரம். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருபுவனம் என்னும் ஊரில் காவிரி தென்கரையில் அழகிய ஸ்ரீ கம்பகரேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது
வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின் கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக இவர் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.
திரிபுவனச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிறப்பு மிக்க
கோயில் திரிபுவனம் கம்பேசுவரர் கோயில். இங்கு சரபேஸ்வரக்கென என தனி சன்னதி உள்ளது. சரபேஸ்வரர் என்பவர் மிகுந்த சக்தி வாய்ந்த உருவம் கொண்டவர். சரபேஸ்வரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். சரபேஸ்வரர் எட்டு கால்களும், இரண்டு
Read 20 tweets
27 Jun
#பிரம்ம_முகூர்த்தம்
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். சூரியன் உதிப்பதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது.
அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம். இந்நேரத்தில் எழுந்து ஜபிப்பது, தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் தொடங்குவது சிறந்த பயனைத் தருவதோடு் நினைவாற்றலையும் அதிகப்
படுத்துகிறது. பிரம்மா முகூர்த்தம் அதிகாலை 3:30 மணியிலிருந்து கிட்டத்தட்ட 5:30 அல்லது 6:00 வரை இருக்கும், அல்லது சூரிய உதயம் வரை. இது பிரம்ம தேவரின் நேரத்தை குறிக்கிறது. இந்த கால நேரம் ஒருவர் பிரம்மன் அல்லது படைப்பின் மூலமாக மாறுவதற்கான சாத்தியத்தை அளிக்கிறது. நாம் விரும்பும்
Read 18 tweets
26 Jun
பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் #சாந்தீபனி என்ற குருவிடம் கற்றுக் தேர்ந்தபின் கண்ணன் அவரிடம் குருதக்‌ஷணையாக என்ன வேண்டும் என்று கேட்டார். நீங்கள் இருவரும் என்னிடம் பயின்றதே பெரும் பாக்கியம் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர்
மனைவிக்கு தங்களின் இறந்து போன ஒரே புதல்வன் திரும்ப உயிருடன் வரவேண்டும் என்கிற ஆசை இருந்ததால் மனைவிக்காக அதை கேட்கிறார். உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா, உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன்
வினவியபோது, பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான்
கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் #பாஞ்சஜன்யம் என்னும்
Read 6 tweets
26 Jun
MLA E.R.ஈஸ்வரனனின் சொந்த ஊர் கொக்கரையான்பேட்டை கிராமம், நாமக்கல் மாவட்டம். E.R.ஈஸ்வரனின் தாயாரான முத்தாயிக்கும் ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே முத்தாயியை விட்டு பிரிந்து போய் வேறு ஒரு கல்யாணம் செய்து கொண்டு விட்டார் ராமசாமி. அதே ஊரைச்
சேர்ந்த #தஸ்தஹீர் என்கிற முஸ்லிமோடு வாழ்க்கையை அமைத்து கொண்டார் முத்தாயி. அவர்களுக்குப் பிறந்தவர் தான் E.R.ஈஸ்வரன். அப்பா ஸ்தானத்திலிருந்து படிக்க வைத்து ஆளாக்கியது எல்லாமே தஸ்தஹீர் தான். அந்த வகையில் E.R.ஈஸ்வரனை ஒரு முஸ்லிம்மாக தான் பார்க்கின்றனர் அந்த கிராமத்து மக்கள். இது
E.R.ஈஸ்வரனுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் தான் சில வருடங்களுக்கு முன்பு ராமசாமி இறந்து போன போது E.R.ஈஸ்வரனோ அவரது தாயாரோ எந்த சடங்கிலும் ஈடுபட்டுக் கொள்ளவில்லை. அதே சமயம் சில வருடங்களுக்கு முன்பு தஸ்தஹீர் இறந்து போக முஸ்லிம் வழக்கப்படி சில சடங்குகளை செய்திருக்கிறார் E.R.ஈஸ்வரன்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(