நாளை தோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரதம். அபரா என்றால் அபாரமான, ஏராளமான என்று பொருள். ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் அபரா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு நிகரானது அபரா ஏகாதசி. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த அபரா ஏகாதசியில் விரதம்
இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணம் கூறுகிறது. அபரா ஏகாதசி தினத்திற்கு முன்தினம் இரவு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். ஏகாரசி அன்று
அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் இனிப்பு பிரசாதம் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு
சஹஸ்ரநாமம், பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். அபரா ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்தனை செய்தல் போன்றவற்றால் விளையும் பாபங்கள் நீங்குகின்றன. மேலும் அளவில்லாத செல்வத்தையும் புகழையும் இவ்விரதம் அளிக்கும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஜனகமகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது. அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக எண்ணி மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடுபட்டு துன்பப்பட்டார். அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது. திடுக்கிட்டு
நாராயணா என்று அலறினார். கண் விழித்தார். கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது. அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார். ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது. நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா என சந்தேகம் வந்து விட்டது. மந்திரி, ராஜகுரு
#கேரளா#மணப்புள்ளி_பகவதி_அம்மன்#திருக்கோயில் பாலக்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். அரக்கர்களை அழித்த பிறகு படிஞ்சாரை யாக்கரை எனும் வயல்வெளி சூழ்ந்த இடத்தில் கோவில் கொண்டாள் பகவதி அம்மன். அறுவடைக் காலத்தில்
நெல் அடிக்கும் சத்தம் அதிகம் கேட்கவே பிறகு இங்கிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஆலமரத்தடியில் கோயில் கொண்டாள். அங்கிருந்த பக்தர்கள் அம்மனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். அப்போது தேவப்பிரசன்னம் பார்த்த கோயிலின் நம்பூதிரிகள் பகவதி அம்மன் கோயில் கொள்ள அந்த ஆலமரத்தடியை சரியான
இடம் என தீர்மானித்து, அங்கேயே பகவதி அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மணப்பள்ளி பகவதி அம்மன் கருப்பு நிற தோற்றத்தோடு வட திசையை பார்த்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், கேடயம் உள்ளது. மூன்று கண்களும், நான்கு கோரைப் பற்களும் கொண்டு அழகான
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நிகழப் போகும் போருக்காக குருஷேத்திரத்தில் யானைகளைக் கொண்டு பெரும் மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றி நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர். ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது,
பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது. தாய் சிட்டுக்குருவி சுற்றுமுற்றும் பார்த்தபோது அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி பறந்து போய் ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்து கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால்
என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டது. நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர். எனக்குத் தெரிந்ததெல்லாம் நீ தான் எங்களைக் காப்பவர். எங்களைக்
#சரபேஸ்வரர் உலகை காக்க சிவபெருமான் எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்” அவதாரம். தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருபுவனம் என்னும் ஊரில் காவிரி தென்கரையில் அழகிய ஸ்ரீ கம்பகரேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது
வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின் கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக இவர் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.
திரிபுவனச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிறப்பு மிக்க
கோயில் திரிபுவனம் கம்பேசுவரர் கோயில். இங்கு சரபேஸ்வரக்கென என தனி சன்னதி உள்ளது. சரபேஸ்வரர் என்பவர் மிகுந்த சக்தி வாய்ந்த உருவம் கொண்டவர். சரபேஸ்வரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். சரபேஸ்வரர் எட்டு கால்களும், இரண்டு
#பிரம்ம_முகூர்த்தம்
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். சூரியன் உதிப்பதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது.
அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம். இந்நேரத்தில் எழுந்து ஜபிப்பது, தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் தொடங்குவது சிறந்த பயனைத் தருவதோடு் நினைவாற்றலையும் அதிகப்
படுத்துகிறது. பிரம்மா முகூர்த்தம் அதிகாலை 3:30 மணியிலிருந்து கிட்டத்தட்ட 5:30 அல்லது 6:00 வரை இருக்கும், அல்லது சூரிய உதயம் வரை. இது பிரம்ம தேவரின் நேரத்தை குறிக்கிறது. இந்த கால நேரம் ஒருவர் பிரம்மன் அல்லது படைப்பின் மூலமாக மாறுவதற்கான சாத்தியத்தை அளிக்கிறது. நாம் விரும்பும்
பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் #சாந்தீபனி என்ற குருவிடம் கற்றுக் தேர்ந்தபின் கண்ணன் அவரிடம் குருதக்ஷணையாக என்ன வேண்டும் என்று கேட்டார். நீங்கள் இருவரும் என்னிடம் பயின்றதே பெரும் பாக்கியம் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர்
மனைவிக்கு தங்களின் இறந்து போன ஒரே புதல்வன் திரும்ப உயிருடன் வரவேண்டும் என்கிற ஆசை இருந்ததால் மனைவிக்காக அதை கேட்கிறார். உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா, உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன்
வினவியபோது, பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான்
கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் #பாஞ்சஜன்யம் என்னும்